பீலி சிவம்
Jump to navigation
Jump to search
பீலி சிவம் (5 சூலை 1938 - 25 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட நடிகராவார்.[1] திரைத்துறையிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகள் நடித்தவர். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995 ஆம் ஆண்டு பெற்றார்.
திரைப்படத்துறைப் பங்களிப்புகள்
இமைகள், தூரத்து இடிமுழக்கம், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக், விருதகிரி, அழகன், முதல் வசந்தம், மனசுக்கேத்த மகராசா, ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.[2]
மறைவு
25 செப்டம்பர் 2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக தனது 79 ஆவது அகவையில் மதுரையில் காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ "பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்". தினமணி. 25 செப்டம்பர் 2017. http://www.dinamani.com/latest-news/2017/sep/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2779557.html. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2017.
- ↑ "தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..!". விகடன். 25 செப்டம்பர் 2017. http://www.vikatan.com/news/cinema/103290-tamil-actor-peeli-sivam-was-no-more.html. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2017.