சிவாஜி (திரைப்படம்)
சிவாஜி | |
---|---|
இயக்கம் | ஷங்கர் |
தயாரிப்பு | எம்.எஸ் குகன் எம்.சரவணன் |
கதை | ஷங்கர் சுஜாதா |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஷ்ரியா சுமன் விவேக் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
விநியோகம் | ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹125வார்ப்புரு:En dash160 கோடி |
சிவாஜி (Sivaji), 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது. இப்படம் 2005-ல் வெளியான சந்திரமுகி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[சான்று தேவை]
கதைச்சுருக்கம்
சிவாஜி என்பவர் மென்பொருள் கட்டுமான அமைப்பாளர், ஐக்கிய மாகாணங்களில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இங்குள்ள சமுதாயத்திற்கு மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இந்நிலையில் அதிகாரத்திலுள்ள பெருமுதலாளி ஆதிசேஷன் என்பவர் இவருடைய திட்டத்தை முடக்கி விடுகிறார். சிவாஜி எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் தன்னுடைய வழியில் அவனுடைய திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.
பட உருவாக்கம்
பெரிதும் பேசப்பட்ட 1994 இல் வெளிவந்த காதலன் (திரைப்படம்) படத்தை இயங்கிய ஷங்கர் சன் டிவி பேட்டியில்[1] தனது விருப்பம் தமிழ் நாட்டின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்துத் திரைப்படம் தயாரிப்பதாகும். ஷங்கரின் அடுத்த திரைப்படம் இந்தியன் (திரைப்படம்) பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் மற்றும் நெடுமுடி வேணு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஊர்மிளா மடோண்த்கர் மற்றும் மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். இப்படத்தின் வெற்றியினால் பெரிதும் கவரப்பட்ட ரஜினி ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கத் தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார். எவ்வாறெனினும் அடுத்தாக பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் (திரைப்படம்) தமிழிலும் இந்தியிலும் வெளிவந்து வெற்றியளித்தது.[2]
ஜீன்ஸ் படத்தை அடுத்த ரஜினிகாந்தை ஷங்கர் ஓர் திரைக்கதையுடன் அணுகினார். எனினும் ரஜனிகாந்த் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படையப்பா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தமையால் நேரக்குறைவுகாரணமாக ஒத்துக்கொள்ளவில்லை. இது பின்னர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த முதல்வன் திரைப்படமாக ஆக வெளிவந்தது.[3] இத்திரைபடத்தை அடுத்து பாய்ஸ், அந்நியன் திரைப்படங்கள் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. நடிகர்களான சிரஞ்சீவி, சல்மான் கான் மற்றும் விஜய் இவரது வழிகாட்டிலில் நடிக்க விருப்பத்தை தெரிவித்திருந்தாலும் அவரசப்பட்டு எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பமிட்டு துவக்கவில்லை.
அக்டோபர் 2005 இல் தமிழ் சினிமாவில் மிகப்பழையதும் பெரியதுமான ஏவிஎம் புரொடக்ஷனை நடத்திவரும் எம். எஸ். குகன் மற்றும் எம். சரவணன் சங்கரை அணுகிப் படமொன்றை தங்களின் ஸ்ரூடியோவில் தயாரித்துத் தரும்படி கேட்டபோது சங்கர் அதற்கு ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் இந்திய சினிமாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும்[4] சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்பமிட்டுச் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் சந்திரமுகி வெற்றியடைந்ததை அடுத்து சினிமா வாய்ப்புக்கள் கிடைத்தபோதிலும் அதை ஏற்றுக் கொண்டு நடிக்கவில்லை. சிவாஜி ராவ் கெய்க்வாட் கே. பாலசந்தர் திரையுலகில் அறிமுகம் செய்தபோது ரஜினிகாந்த் என அறிமுகப்படுத்தினார். இவரது இயற்பெயராகும் இதனையும் தி பாஸ் என்பதையும் சேர்து சிவாஜி தி பாஸ் என்றவாறு திரைப்படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
பாடல்கள்
சிவாஜி: திரைப்பாடல்கள் | ||||
---|---|---|---|---|
திரைப்பாடல்கள்
| ||||
வெளியீடு | ஏப்ரல் 2, 2007 | |||
ஒலிப்பதிவு | பஞ்சதன் ரெக்கார்டு | |||
இசைப் பாணி | திரையிசைப்பாடல் | |||
நீளம் | 36:10 | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஏ. ஆர். ரகுமான் | |||
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை | ||||
|
சிவாஜி: த பாஸ் திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 2, 2007ல் இவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்னரே இப்பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவிறக்கக் கிடைத்தது.[6]
வரிசை | பாடல் | பாடகர்கள் | படமாக்கம் | நீளம் (நி:நொ) | எழுதியது | குறிப்பு |
1 | பல்லேலக்கா | எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஏ. ஆர். ரைஹானா, பெனி தயாள் | 6.08 | நா. முத்துக்குமார் | ||
2 | ஸ்டைல் | பிளாஸ், தன்வீ, ராக்ஸ், சுரேஷ் பீட்டர்ஸ் | 5.13 | பா. விஜய் | முன்னர் "ஒரு கூடை சன்லைட்". சுரேஷ் பீட்டர்ஸ் பாடிய பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. | |
3 | வாஜி வாஜி | ஹரிஹரன், மதுஸ்ரீ | 5.49 | வைரமுத்து | ||
4 | அதிரடி | ஏ.ஆர்.ரகுமான், சயோனரா | 5.47 | வாலி | ||
5 | சகானா | உதித் நாராயண், சின்மயி | 5.21 | வைரமுத்து | சின்மயிக்குப் பதிலாக சுஜாதா பாடிய பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. | |
6 | த பொஸ் | நரேஷ் ஐயர், பிளாஸ், ரகுயீப் அலாம் | 3.20 | நா. முத்துக்குமார், பிளாஸ் | ||
7 | சகாரா | விஜய் யேசுதாஸ், கோமதிஸ்ரீ | 4.32 | வைரமுத்து |
விருதுகள்
2007 தேசிய திரைப்பட விருதுகள்
வென்றது - சிறந்த சிறப்பு விளைவுகளுக்கான வெள்ளி தாமரை விருது - எம்.எஸ். இந்திய கலைஞர்கள், சென்னை
2008 பிலிம்பேர் விருதுகள் தென்
வென்றது – சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது – ஏ.ஆர். ரஹ்மான்
வென்றது – சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது – கே.வி.ஆனந்த்
வென்றது – பிலிம்பேர் சிறந்த கலை இயக்குனர் விருது – தோட்ட தரணி
பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - ரஜினிகாந்த்
பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது - சிவாஜி
பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – சின்மயி
2007 விஜய் விருதுகள்
வென்றது – பிடித்த ஹீரோவுக்கான விஜய் விருது – ரஜினிகாந்த்
பரிந்துரைக்கப்பட்டது – பிடித்த கதாநாயகிக்கான விஜய் விருது – ஷ்ரியா சரண்
வென்றது – சிறந்த இசை அமைப்பாளருக்கான விஜய் விருது – ஏ.ஆர். ரஹ்மான்
பரிந்துரைக்கப்பட்டவர் - சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி
பரிந்துரைக்கப்பட்டவர் - சிறந்த பின்னணிப் பாடகர் ஆண் - உதித் நாராயண்
2007 தமிழக அரசு திரைப்பட விருதுகள்
வென்றது- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - முதல் பரிசு
இவற்றையும் பார்க்க
உசாத்துணைகள்
- ↑ "Blockbuster Three out of Three". Indolink. http://www.indolink.com/tamil/cinema/Specials/98/ஏப்ரல்/jeans.htm. பார்த்த நாள்: 3 ஏப்ரல்.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Jeans: Movie Review". Indolink இம் மூலத்தில் இருந்து 2001-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010621181305/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Jeans_202648.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல்.
- ↑ "Rahman- "The Intro Songs I Have Done For Rajini"". Behindwoods. http://www.behindwoods.com/tamil-movie-news/feb-07-01/10-02-07-sivaji.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல்.
- ↑ சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் அணுகப்பட்டது ஏப்ரல் 14 (ஆங்கில மொழியில்)
- ↑ "Sivaji: Music Review". Yahoo.com இம் மூலத்தில் இருந்து 2007-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070409052307/http://in.movies.yahoo.com/070404/226/6e4vb.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2007.
- ↑ மொத்த சிவாஜி பாட்டும் லீக்! பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் வீரகேசரி அணுகப்பட்டது ஏப்ரல் 14, 2007
வெளியிணைப்புக்கள்
- சிவாஜி பரணிடப்பட்டது 2007-07-07 at the வந்தவழி இயந்திரம் திரை விமர்சனம் யாஹூ! அணுகப்பட்டது 22 ஜூலை 2007.
- The phenomenon - (ஆங்கில மொழியில்)
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- 2007 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- நயன்தாரா நடித்த திரைப்படங்கள்
- ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- சிரேயா சரன் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- ஷங்கர் இயக்கிய திரைப்படங்கள்