ஊர்மிளா மடோண்த்கர்
ஊர்மிளா மதோண்ட்கர் (Urmila Matondkar; வார்ப்புரு:Lang-mr) (இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை நகரில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று பிறந்த ஓர் இந்திய பாலிவுட் நடிகை ஆவார்.
ஊர்மிளா மதோண்ட்கர் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 4, 1974 மும்பை, இந்தியா |
தொழில் | நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் |
நடிப்புக் காலம் | 1980–1991 - இன்று வரை |
மதோண்ட்கர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது திரை வாழ்க்கையை 1977 ஆம் ஆண்டு கர்ர்ம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வயது வந்தவராக நரசிம்மா எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார். அவர் ரங்கீலா (1995), ஜுதாயி மற்றும் சத்யா (1998) ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டிக்கொண்டார். இவை அனைத்துமே அவருக்கு பிலிம்பேர் விருது பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தன. தீவிரமான நாகரிகப் பாணி மற்றும் நடனத் திறமை ஆகியவற்றிற்காக பெரும் அளவில் அறியப்பட்ட இவர், பல நேரங்களில் "பாலியல் குறியீடு" என்றே இந்திய ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள.[1][2][3][4]
இதைத் தொடர்ந்து உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இவற்றில், ஒரு மன நோயாளியாக அவர் நடித்த கோன் (1999), தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்த பியார் துனே கியா கியா (2001), ஆவியால் பீடிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பூத் மற்றும் இரக்கமில்லாத பழிவாங்குபவராக நடித்த ஏக் ஹசினா தி (2004) ஆகியவை அடங்கும். பூத் திரைப்படத்தில் தமது நடிப்புக்காக அவர் "சிறந்த செயல்திறனாளர்" என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்; மேலும் பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை என்பதற்கான விருதுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் கலைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட திரைப்படங்களான தேஜீப் (2003), பிஞ்சர் (2003) மைனே காந்தி கோ மாரா (2005) மற்றும் பஸ் ஏக் பல் (2006) ஆகியவற்றிலும் நடித்தார்.
பிறப்பு
ஊர்மிளா மதோண்ட்கர் மும்பையில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆந் திகதி பிறந்தார். இவருடைய தாய் மொழி மராத்தி ஆகும்.
தொழில் வாழ்க்கை
குழந்தை நட்சத்திரமாக (1977–1983)
அவர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கார்ம் எனும் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அவரது ஆரம்பகாலத் திரைப்படங்களில் மிகவும் மிகவும் புகழ்பெற்ற திரைப்படமாகத் திகழ்ந்தது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஷேகர் கபூரின் மாசூம் எனும் திரைப்படமாகும்.
தொழில் முறையில் முன்னேற்றம்
வயது வந்த நடிகையாக "படே கர் கி பேட்டி" (Bade Ghar Ki Beti) என்னும் திரைப்படத்தின் மூலம் தமது திரைவாழ்க்கையை அரங்கேற்றினார். இதன் பின் அவர் ஷாருக்கான் ஜோடியாக சமத்கார் (Chamatkar) என்னும் காதல் திரைப்படத்தில் நடித்தார். 1989 இல், கமல்ஹாசனுடன் சாணக்கியன் எனும் திரைப்படத்தில் நடித்துப் பெரு வெற்றியும் கண்டார். தமது திகிலான மர்மப் படங்களுக்குப் பேர் போன ராம் கோபால் வர்மா என்னும் திரைப்பட இயக்குனருடன் அதிகப் படங்களில் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். அவருடன் இணைந்து ஊர்மிளா பணியாற்றிய முதல் படம் அந்தம் என்னும் தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படம், 1992 ஆம் ஆண்டு துரோகி எனும் பெயரில் ஹிந்தியில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமது முதல் பெரும் வெற்றிப் படமான தெலுங்குத் திரைப்படம் காயம் மற்றும் 1995 வருடத்துக்கான இசைத் திரைப்படமான ரங்கீலா போன்ற ஆர்.ஜி.வி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட பல திரைப்படங்களிலும் ஊர்மிளா நடித்துள்ளார். அத்துடன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பைபிள் கி கஹான்யன் (Bible Ki Kahaniyan) எனும் சின்னத்திரைத் தொடரிலும் நடித்துள்ளார்.
'ரங்கீலா' மற்றும் வணிக வெற்றிகள் (1994–2003)
ரங்கீலா (1995) எனும் திரைப்படத்தின் மூலம் மிலி ஜோசி (Mili Joshi) எனும் பெயரில் மீண்டும் திரைக்கு வந்தார் ஊர்மிளா. இத்திரைப்படத்தில் ஆமிர் கான் ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் பல்வேறு தரப்பட்ட விமர்சகர்களாலும் விமர்சிக்கப்பட்டதாகும். இத்திரைப்படம் பாராட்டுக்களை மட்டுமன்றி பண வசூலிலும் சாதனை படைத்தது. பணத்தை இத்திரைப்படம் வசூல் செய்துள்ளது.[5][6] கோமொலா எனும் இணையத்தளம் இவருடைய கவர்ச்சிகரமான நடிப்புத் திறனைப் பாராட்டியுள்ளது. இதற்காக அவர் தமது முதல் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்காகப் பரிந்துரைக்கப் பெற்றார். ரங்கீலா திரைப்படம் பன்னிரண்டு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது, அவற்றில் மதோண்ட்கர் சிறந்த நடிகைக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப் பெற்றார். இதைத் தொடர்ந்து வந்த ஆர்ஜிவி திரைப்படங்களான தௌட் (1997), சத்யா (1999), கோன் (1999), மஸ்த் (2000), ஜங்கிள் (2000), ப்யார் துனே க்யா கியா (2001), பூத் (2003) மற்றும் ஏக் ஹசினா தி (2004) ஆகிய திரைப்படங்களில் ஊர்மிளா தொடர்ந்து நடித்துள்ளார்..
1997 ஆம் ஆண்டு வருடம் அவர் நடித்த ஜுதாயி திரைப்படம் வெற்றி அடைந்தது; ஆனால், தௌட் , அஃப்லாடூன் போன்ற பிற வெளியீடுகள் அந்த அளவு வெற்றி பெறவில்லை.[7] அவரது நடிப்புத் திறன் அவருக்கு பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தது.[8]
1998வது வருடம் அவர் சத்யா திரைப்படத்தில் தமது நடிப்பிற்காக மற்றொரு பிலிம்பேர் பரிந்துரைப்பைப் பெற்றார். சத்யா விமர்சன ரீதியிலும் மற்றும் வணிக ரீதியிலும் இது வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரப்படத்தின் பண வசூல் 690.1 மில்லியன் ஆகும்.[9]
1999வது வருடம் மனப் பிறழ்வு அடைந்த நோயாளியாக நடித்த கோன் திரைப்படத்திற்காக அவர் பெரும் அளவில் பாராட்டப் பெற்றார். இது சுமாரான வெற்றியை அடைந்தது. ஜானம் சம்ஜா கரோ மேலும் வெற்றியடைந்தது; ஹம் தும் பே மர்த்தே ஹைன் மற்றும் கூப் சூரத் ஆகியவை வசூலில் சுமாரான வெற்றியடைந்தன.
2000 ஆம் ஆண்டுகளில் மடோண்தகர் தமது கதாபாத்திர சித்தரிப்புகளில் வலிமையான, பிரம்மாண்டமான, உளவியல் ரீதியான அம்சங்களை வெளிப்படுத்தி, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ப்யார் துனே க்யா கியா திரைப்படத்தில் தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்ததற்காகப் பல சாதகமான விமர்சனங்களைப் பெற்றார் மற்றும் பல சிறந்த வில்லன் நடிகை விருதுகளுக்கான பரிந்துரைப்பையும் பெற்றார். அத்துடன் இத்திரைப்படமும் கூட பண வசூலில் பெரு வெற்றி கண்டது, இத்திரைப்படத்தின் பண வசூல்
2003 ஆம் ஆண்டு, அவர் பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பிஞ்சர் என்னும் படத்தில் அவர் 1947 இந்தியப் பிரிவினை கால கட்டத்தைச் சார்ந்த ஒரு வட இந்தியப் பெண்ணாக நடித்தார். கலீத் மொஹம்மத்தின் நாடக பாணியிலான தெஜீப் என்னும் திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக சபனா ஆசுமியுடன் இணைந்து நடித்தார். இருப்பினும் பூத் என்னும் திகிலூட்டும் திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்புத் திறனுக்காகவே அவர் முக்கியமாகப் பாராட்டப்பட்டார். இதில் மடோண்த்கர் ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைச் சித்தரித்தார். அவரது நடிப்புத் திறன் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது. அவர் சிறந்த செயல்திறனாளர் என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றுக்கொண்டார். மேலும், ஸ்டார் ஸ்க்ரீன் விருது (Star Screen Awards), சீ சினிமா விருது (Zee Cine Awards) மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகள் போன்ற பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை க்கான விருதுகளைப் பெற்றார். அதன் பின் அவர் இத் திரைப்படத்திற்காக ராஜிவ் காந்தி விருது பெற்று தேசிய கௌரவமும் அடைந்தார். இது பாலிவுட்டில் அவரது சாதனைக்கு ஒரு அங்கீகாரமாக அமைந்தது.
இவரது தொடர்ச்சியான நடிப்பும் விமர்சகர்களின் பாரட்டுக்களும்
2004 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் ஏக் ஹசினா தி என்னும் திரைப்படத்தில் இரக்கமில்லாத பழி வாங்குபவராக வெளிப்படுத்திய நடிப்புத் திறனுக்காக அவர் விமர்சன ரீதியான அங்கீரகாரம் பெற்றார். இதில் அவருடன் சைஃப் அலி கான் இணைந்து நடித்திருந்தார். இத் திரைப்படத்தில் அவர் காதலனால் ஏமாற்றப்பட்டு சிறையிலிடப்படும் ஒரு பெண்ணின் பாத்திரத்தைத் திறம்படச் சித்தரித்தார்; சைஃப் அலிகான் அந்தக் காதலனாக வேடமேற்றிருந்தார். இந்தப் பெண் பிறகு சிறையிலிருந்து தப்பித்து அவரைப் பழி வாங்குகிறாள். இந்தப் படத்தில் தமது நடிப்புத்திறனுக்காக மடோண்த்கர் மீண்டும் ஒரு பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இத்திரைப்படமும் கூட வணிக ரீதியாக வெற்றிகண்டது. இத்திரைப்படத்தின் பண வசூல் ஆகும்.
அடுத்த ஆண்டான 2005 ஆம் ஆண்டில் மற்றொரு திகில் படமான நாயினா என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து தமது திறமையை வெளிக்காட்ட முயன்றார்; எனினும், இத் திரைப்படம் தோல்வியுற்றது. இருப்பினும், ஜானு பருவாவின் மேனே காந்தி கோ நஹின் மாரா என்னும் கலைப் படத்தில் அனுபம் கேரின் மிகுந்த அக்கறை கொண்ட மகளாக அவர் நடித்தது சிறந்த வரவேற்பைப் பெற்றது; அவர் இரண்டாம் முறையாக சிறந்த நடிகைக்கான பாலிவுட் திரைப்பட விருதினைப் பெற்றார்.
வெற்றிகரமான நடிப்புத் தொழிலுக்கு அப்பால், அவர் ஒரு மிகச் சிறந்த நடனசிகாமணியாகவும் மதிக்கப்படுகிறார்; பல பாலிவுட் படங்களில் ஐட்டம் நம்பர் எனப்படும் கவர்ச்சி நடனங்களில் நடனமாடியுள்ளார். மிகவும் அறியப்பட்ட அவரது கவர்ச்சி நடனம் 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த சைனா கேட் என்ற படத்தில் சம்மா சம்மா என்ற பாடலுக்கு அவர் ஆடியதாகும். புகழ் பெற்ற ஏனைய பாடல்களவன; லஜ்ஜா என்னும் வெற்றிப் படத்தில் இடம் பெற்ற ஆயியே ஆஜாயே என்னும் பாடலாகும். 1975 ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றிப் படமான ஷோலே யின் மறுவாக்கமான ராம் கோபால் வர்மா கி ஆக் என்னும் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் ஆடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூலப்படத்தில் ஹெலன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.
2007 ஆம் ஆண்டு, மடோண்த்கர் ஆஷாவும் நண்பர்களும் வால்யூம் 1 என்னும் ஆஷா போன்ஸ்லேயின் இசைத் தட்டிற்காகக் குரல் அளித்தார். இதில் அவர் ஆஷாவுடன் "மெஹபூபா தில்ரூபா" என்னும் பாடலை இணைந்து பாடினார். உண்மையிலேயே, 1990 தொடக்கம் 2000 ஆம் ஆண்டுகள் வரை ஊர்மிளாவுக்கான அதிக பட்சமான பாடல்களை போன்ஸ்லே என்பவரே பாடியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில், 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த படமான கர்ஜ் என்னும் திரைப்படத்தின் மறுவாக்கமான கர்ஜ்ஜ்ஜ் என்னும் திரைப்படத்தில் அவர் ஹிமேஷ் ரேஷாமியாவுடன் இணைந்த்து நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த டெல்லி சவாரி எனும் கார்ட்டூன் திரைப்படத்திலும் ஊர்மிளா மடோண்த்கர் நடித்துள்ளார்.
விருதுகள்
ஆண்டு | விருது விழா நிகழ்ச்சி | வகை | திரைப்படம் | முடிவு |
---|---|---|---|---|
1996 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை[10] | ரங்கீலா | வார்ப்புரு:Award-nom |
1998 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | ஜுதாயி | வார்ப்புரு:Award-nom |
1999 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை[11] | சத்யா | வார்ப்புரு:Award-nom |
2002 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த வில்லி நடிகை | பியார் துனே கியா கியா | வார்ப்புரு:Award-nom |
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
பாலிவுட் திரைப்பட விருதுகள் | மிகவும் பரபரப்பூட்டிய நடிகை | வார்ப்புரு:Award-won | ||
2004 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை (விமர்சகர்கள்) | பூத் | வார்ப்புரு:Award-won[12] |
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-won | ||
அப்ஸரா விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-won | ||
ஐஐஎஃப்ஏ விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
ஜீ சினி விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-won | ||
பாலிவுட் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-won | ||
ராஜிவ் காந்தி நினைவு விருதுகள் | பாலிவுட்டில் சாதனை[13] | வார்ப்புரு:Award-won | ||
2005 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை | ஏக் ஹசினா தி | வார்ப்புரு:Award-nom |
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
ஜீ சினி விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
ஐஐஎஃப்ஏ விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
2006 | பாலிவுட் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை | மைனே காந்தி கோ மாரா | வார்ப்புரு:Award-won |
அப்ஸரா விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom | ||
ஜீ சினி விருதுகள் | சிறந்த நடிகை | வார்ப்புரு:Award-nom |
திரைப்பட விவரங்கள்
ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | கலியுக் | பரிக்சித் (Parikshit) | |
ஜகோல் | மரது (Marathi) | ||
1983 | மாசூம் | பிங்கி | |
1985 | சுர் சங்கம் | ||
1987 | டெகாயிட் | ||
ஜிந்தகி | |||
1989 | படே கர் கி பேட்டி | ||
சாணக்கியன் | ரேணு | மலையாளத் திரைப்படம் | |
1991 | நரசிம்மா | ஹிந்தியில் நடித்த முதல் வயது வந்தவர் கதாபாத்திரம் | |
1992 | சமத்கார் | மாலா | |
அந்தம் | தெலுங்குத் திரைப்படம் | ||
துரோகி | பாவனா | ||
1993 | ஸ்ரீமான் ஆஷிக் | ||
காயம் | தெலுங்குத் திரைப்படம் | ||
பே தர்தி | |||
1994 | கானூன் | ||
ஆ கலே லக் ஜா | ரோஷினி | ||
1995 | ரங்கீலா | மிலி ஜோஷி | பரிந்துரைப்பு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
தச்சோலி வர்கீஸ் செவாகர் | மாயா | மலையாளத் திரைப்படம் | |
மணி மணி | தெலுங்குத் திரைப்படம் | ||
1996 | இந்தியன் | சப்னா | தமிழ்த் திரைப்படம், ஹிந்துஸ்தானி என்ற பெயரில் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டது. |
1997 | ஜுதாயி | ஜான்வி சஹானி | பரிந்துரைப்பு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
மேரே சப்னோன் கி ரானி | |||
தௌட் | பவானி | ||
அஃப்லாடூன் | |||
அனகனாக ஒக்க ராஜு | மது | தெலுங்குத் திரைப்படம் | |
1998 | சத்யா | வித்யா | பரிந்துரைப்பு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
குத்ரத் | மாலா | ||
சைனா கேட் | கவர்ச்சி நடனம் | ||
சோட்டா சைத்தான் | |||
1999 | ஜானம் சம்ஜா கரோ | சாந்தினி | |
ஹம் தும்பே மர்த்தே ஹை | ராதிகா | ||
மஸ்த் | மல்லிகா | ||
தில்லகி | ஷாலினி | ||
கூப்சூரத் | ஷிவானி | ||
கோன் | பெயரற்ற கதாபாத்திரம் | முதல் வில்லன் கதாப்பாத்திரம் | |
2000. | ஜங்கிள் | அனு | |
தீவானா | சப்னா | ||
குன்வாரா | ஊர்மிலா | ||
2001 | ப்யார் துனே கியா கிய | ரியா | வில்லன் கதாபாத்திரம் பரிந்துரைப்பு, சிறந்த வில்லி நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
லஜ்ஜா | சிறப்புத் தோற்றம், கவர்ச்சி நடனம் | ||
2002 | கம்பெனி | ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம் | |
ஓம் ஜெய் ஜகதீஷ் | நீத்து | ||
தீவாங்கி | சர்கம் | ||
2003 | பூத் | சுவாதி | வெற்றியாளர் , விமர்சகர்களால் வரவேற்பைப்பெற்ற சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
தெஜீப் | தெஜீப் மிர்ஜா | ||
பிஞ்ஜர் | புரோ | ||
2004 | ஏக் ஹசினா தி | சாரிகா வர்தக் | பரிந்துரைப்பு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் |
2005 | நாயினா | நாயினா | |
மைனே காந்தி கோ மாரா | திரிஷா | ||
2006 | பனாரஸ் | ஷ்வேதாம்பரி | |
பஸ் ஏக் பல் | அனாமிகா | ||
2007 | ராம் கோபால் வர்மா கி ஆக் | ஜிப்சி நடனக்காரி | கவர்ச்சி நடனம் |
ஓம் ஷாந்தி ஓம் | தாமாகவே | சிறப்புத் தோற்றம் | |
ஸ்பீட் | ரிச்சா | ||
2008 | கர்ஜ்ஜ்ஜ்ஜ் | காமினி | |
2009 | அப் தில்லி தூர் நஹின் | பரூட்டிற்கான குரல் | அறிவிக்கப்பட்டுள்ளது. அசைவூட்டப் படம். |
நான் ஸ்டாப் ஃபன் | இசை ஆசிரியர் | ||
குலெல் | தயாரிப்பிற்கு முந்தைய நிலையில்[14] |
மேற்கோள்கள்
- ↑ Verma, Sukanya (2002). "Star of the Week". ரெடிப்.காம். http://www.rediff.com/entertai/2002/oct/24list.htm. பார்த்த நாள்: 2008-11-10.
- ↑ Verma, Sukanya (29 May 2003). "'My knuckles would turn white'". Rediff.com. http://www.rediff.com/movies/2003/may/29urmila.htm. பார்த்த நாள்: 2008-11-10.
- ↑ Srinivasan, V S (16 January 1998). "Rangeela Re!". Rediff.com. http://www.rediff.com/entertai/1998/jan/16mat.htm. பார்த்த நாள்: 2008-11-11.
- ↑ Kulkarni, Ronjita (2008). "Bollywood's top 5, 2003: Urmila Matondkar". Rediff.com. http://in.rediff.com/movies/2003/dec/11sld1.htm. பார்த்த நாள்: 2008-11-11.
- ↑ http://ibosnetwork.com/asp/filmbodetails.asp?id=Rangeela[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304102130/http://www.planetbollywood.com/Film/rangeela.html.
- ↑ "Box Office 1997" இம் மூலத்தில் இருந்து 2011-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110121001213/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=203&catName=MTk5Nw==.
- ↑ "Filmfare Nominations 1997" இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225193743/http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/368659.cms.
- ↑ "Box Office 1999" இம் மூலத்தில் இருந்து 2012-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120713020608/http://news.naver.com/main/read.nhn?mode=LSD&mid=sec&sid1=106&oid=117&aid=0000007806.
- ↑ "Filmfare Nominations 1995" இம் மூலத்தில் இருந்து 2012-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709124932/http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/368630.cms.
- ↑ "Filnfare Nominations 1998" இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225193802/http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/368676.cms.
- ↑ "Filmfare Winners 2003" இம் மூலத்தில் இருந்து 2012-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709111513/http://filmfareawards.indiatimes.com/articleshow/512087.cms.
- ↑ "Rajiv Gandhi Awards". Rajivgandhiawards.com இம் மூலத்தில் இருந்து 2008-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080528171800/http://www.rajivgandhiawards.com/past_awardees.htm. பார்த்த நாள்: 2008-11-22.
- ↑ India.fm. "Gulel Cast And Crew". http://www.bollywoodhungama.com/movies/cast/14127/index.html.