மனதிலே ஒரு பாட்டு
மனதிலே ஒரு பாட்டு | |
---|---|
இயக்கம் | ஞானமொழி |
தயாரிப்பு | எஸ். கோவிந்தராஜ் பி. ரவிச்சந்திரம் பி. ஞானமொழி முருகன் |
கதை | ஞானமொழி எஸ். முகிலன்(வசனம்) |
இசை | இளையகங்கை |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜெ. வி. சுரேஷ் |
படத்தொகுப்பு | கே. தனிகாச்சலம் |
கலையகம் | மொழி மூவிஸ் |
வெளியீடு | மார்ச்சு 3, 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனதிலே ஒரு பாட்டு (English : A song in heart) என்பது 1995 தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஞானமொழி இதனை இயக்கியுள்ளார். விக்னேஷ், சாரதா ப்ரீத்தா, சுக்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரகுவரன், வினு சக்ரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், சங்கீதா போன்றோர் நடித்துள்ளனர். 3 மார்ச் 1995 இல் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு இளையகங்கை இசையமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
விக்னேஷ், சாரதா ப்ரீத்தா, சுக்ரன், ரகுவரன், வினு சக்ரவர்த்தி, வெண்ணிறாடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், சங்கீதா, என்னத்த கன்னையா, ஆஷா, சுஜாதா, மயில்சாமி, குமரேசன், ராஜேஷ், விஸ்வநாத் , விஜய், ஜெமினி ஸ்ரீதர், ஈரோடு சுரேஷ், பழனி, பீட்டர் ஹெய்ன்
கதைச்சுருக்கம்
கல்லூரியில் பயிலும் மாணவன் ஆனந்த் (விக்னேஷ்), தன் நண்பன் அக்பருடன் விடுதி ஒன்றில் வசித்து வருகிறான். ஆனந்திற்கு குடும்பம் இல்லாத காரணத்தினால், தன் படிப்பு செலவிற்கு பகுதி நேர வேலை செய்கிறான் ஆனந்த். கல்லூரியில், ஜோதி மற்றும் சுக்ரனை சந்திக்க நேரிடுகிறது. பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த ஜோதி, தன் தாய் (சங்கீதா) மற்றும் அசோக் மாமாவுடன் வாழ்ந்து வருகிறாள். பகலில் பெண்களை கேலி செய்தும், இரவில் மது குடித்தும் நாட்களை கழிக்கிறான் சுக்ரன். ஜோதியும் ஆனந்தும் விரும்பினாலும் காதலை வெளிப்படுத்தவில்லை. சுக்ரனும் ஜோதியை விரும்பினான். ஆனந்தின் படிப்பு செலவிற்கு உதவிய ஜோதியை கண்டு கோபம் கொண்டு ஆனந்துடன் சண்டை இடுகிறான் சுக்ரன். சண்டையை தடுத்தி நிறுத்தி, ஆனந்திடம் ஜோதி காதலை வெளிப்படுத்த, அதை தங்க முடியாமல் ஜோதி வீட்டில் அந்த காதல் விஷயத்தை சொல்லிவிடுகிறேன் சுக்ரன். ஜோதியின் வீட்டில் அந்த காதலை ஏற்கவில்லை. படிப்பை நிறுத்தி வீட்டில் அடைத்து, ஆனந்தை மறக்க சொல்கிறாள் ஜோதியின் தாய். இந்நிலையில், மாமா அசோக் ஜோதியை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இறுதியில், ஜோதியை யார் திருமணம் செய்தார் எனபதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
இப்படத்தின் இசை அமைப்பாளர் இளையகங்கை ஆவார். கலைவாணன் கண்ணதாசன், செம்பையா, மணிமுடி, ஞானமொழி ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். 5 பாடல்களை கொண்ட தொகுப்பு 1995 ஆம் ஆண்டு வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ "Manadhiley Oru Pattu (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
- ↑ "Manathiley Oru Pattu (1995)". gomolo.com. Archived from the original on 2016-11-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.