ரெண்டு
ரெண்டு | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | குஷ்பூ |
கதை | வேலம் சி. மனோகர் (வசனம்) |
திரைக்கதை | சுந்தர் சி. சுபா |
இசை | டி. இமான் |
நடிப்பு | மாதவன் ரீமா சென் அனுஷ்கா |
ஒளிப்பதிவு | பிரசாத் முரேல்லா |
படத்தொகுப்பு | காசி விஸ்வநாதன் |
கலையகம் | அவினி சினிமேக்ஸ் |
விநியோகம் | ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட் |
வெளியீடு | 24 நவம்பர் 2006 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரெண்டு (Rendu) 2006 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென், அனுஷ்கா மற்றும் வடிவேலு நடிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில், குஷ்பூ தயாரிப்பில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் நகைச்சுவை அதிரடித் திரைப்படம். மாதவன் இரு வேடங்களில் நடித்த திரைப்படம் ஆகும்.[1]
கதைச்சுருக்கம்
சென்னைக்கு வேலை தேடி வரும் சக்தி (மாதவன்) பொருட்காட்சியில் மாயவித்தை தொழில் செய்துவரும் தன் மாமா கிரிகாலனுடன் (வடிவேலு) தங்குகிறான். அதே பொருட்காட்சியில் அவர்களுக்குப் போட்டியாக கடற்கன்னியாக வேடமிட்டு தொழில் செய்துவருபவள் வள்ளி (ரீமாசென்). சக்தியும் வள்ளியும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர்.
இதே சமயம் வெவ்வேறு இடங்களில் நடக்கும் கொலைகளைப் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரிக்கு (பாக்கியராஜ்) அந்தக் கொலையாளியின் புகைப்படம் கிடைக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் கொலையாளியின் உருவம் சக்தியைப் போல இருப்பதால் நிரபராதியான சக்தி கைது செய்யப்படுகிறான். தான் செய்த கொலைகளுக்கு ஒரு நிரபராதி கைது செய்யப்பட்டதை அறியும் கண்ணன், (மாதவன் 2) கிரிகாலன் மற்றும் வள்ளியின் உதவியுடன் சக்தியைக் காப்பாற்றுகிறான். தான் அந்த கொலைகளைச் செய்ததற்கான காரணத்தைக் கூறுகிறான்.
கண்ணனின் குடும்பத்தினர் அனைவரும் அவன் காதலி ஜோதி (அனுஷ்கா) உட்பட ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் தீவிபத்தில் இறக்கின்றனர். அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் கண்ணன் தன் பார்வையை இழக்கிறான். ஆனால் நடந்தது விபத்தல்ல தங்களின் எதிரிகள் திட்டமிட்டு செய்த கொலை என்று அறியும் கண்ணன் அதற்குக் காரணமானவர்களைக் கொன்று பழிதீர்க்கிறான்.
கண்ணன் செய்வது சட்டப்படி தவறாக இருந்தாலும் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை உணரும் சக்தி அவனுக்கு உதவ முடிவுசெய்கிறான். இருவரும் சேர்ந்து எதிரிகளை அழித்தார்களா? என்பதே முடிவு.
நடிகர்கள்
- மாதவன் - சக்தி / கண்ணன்
- ரீமாசென் - வள்ளி
- அனுஷ்கா - ஜோதி
- வடிவேலு - கிரிகாலன்
- கே. பாக்யராஜ் - சி.பி.ஐ
- மணிவண்ணன் - பொருட்காட்சி உரிமையாளர்
- சந்தானம் - சீனு
- நிகிதா பலேக்கர் - மஞ்சுளா
- பாலா சிங் - ரத்னசாமி
- ஷியாம் கணேஷ்
- தேவதர்ஷினி
- தாரிகா
- மயில்சாமி
- மதன் பாப்
- ஏ. சி. முரளிமோகன்
- நீலு
- கிரேன் மனோகர்
- ரவிபிரகாஷ்
- தம்பி ராமையா
- ஹரிராஜ்
தயாரிப்பு
அனுஷ்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[2]
1993 இல் ரசினிகாந்த் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான வள்ளி திரைப்படத்தின் கதாநாயகன் ஹரிராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்தார்.[3]
இசை
படத்தின் இசையமைப்பாளர் டி. இமான். பாடலாசிரியர்கள் பா. விஜய் மற்றும் தபுசங்கர்.[4]
வ.எண் | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | யாரோ எவளோ | ரஞ்சித் |
2 | குறை ஒன்றுமில்லை | ஆதர்ஷ், ஜெய் |
3 | மொபைலா மொபைலா | டி. இமான், மாயா |
4 | நீ என் தோழியா | நரேஷ் ஐயர், சுஜாதா |
5 | வரட்டா வரட்டா | ஆதர்ஷ், லாவண்யா |
மேற்கோள்கள்
- ↑ "மாதவன் இரு வேடங்கள்". http://specials.rediff.com/movies/2006/nov/20sd4.htm.
- ↑ "ரீமா vs அனுஷ்கா". http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-04/28-10-06-madhavan.html.
- ↑ "வள்ளி 1993 நாயகன் ஹரிராஜ்". http://www.indiaglitz.com/hariraj-back-as-a-baddie-tamil-news-26696.html.
- ↑ "ரெண்டு பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2016-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161105223639/http://starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=493.
வெளி இணைப்புகள்
- ரெண்டு பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம்