சின்னா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சின்னா
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புஸ்ரீநிவாசா ராஜா
கதைசுந்தர். சி
திரைக்கதைசுந்தர். சி
இசைடி. இமான்
நடிப்புஅர்ஜுன், சினேகா, விஜயகுமார், விக்ரமாதித்யா
ஒளிப்பதிவுபிரசாத் முரெல்லா
படத்தொகுப்புமு. காசிவிசுவநாதன்
கலையகம்ஸ்ரீ ஸ்ரீ சித்ரா
வெளியீடு15 சூலை 2005 (2005-07-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னா (Chinna) என்பது 2005 ஆம் ஆண்டு சுந்தர் சி.யின் எழுத்து இயக்கத்தில் வெளியான காதல் திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜுன், சினேகா மற்றும் விக்ரமாதித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 15 சூலை 2005 இல் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்றது.[1]

இது பின்னர் தெலுங்கில் "கொடி" என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், ஒடியா மொழியில் "கிரிமினல்" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கதை

காயத்ரியை (சினேகா) ஏதோவொரு நினைவில் மூழ்கி இருக்கும் போது அவள் அறியாமலேயே அவளின் விருப்பமின்றி ஒரு நீர்ப்பாசனப் பொறியியலாளர் (விக்ரமாதித்யா) அவளது கழுத்தில் தாலி கட்டி அவளைத் திருமணம் செய்வதிலிருந்து படம் துவங்குகிறது. திருமணம் ஆன கையோடு காயத்ரி அவளது கணவருடன் ஊட்டிக்கு அழைத்து வரப்படுகிறாள். அங்கு முதலிரவில் அவள் அவளது கணவருடன் தாம்பத்திய வாழ்க்கையை துவங்க விருப்பமின்றி தனியே உறங்குகிறாள். அப்போது அவளின் கடந்தகால நினைவுகள் ஓடுகின்றன. அவர் பவளப் பாறைகள் மற்றும் ஏனைய கடல் சூழல் அமைப்புக்கள் சம்பந்தமாக படிப்பதற்கு இராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அவருடைய மாமனார் வினுசக்ரவர்த்தி மீனவ தொழில் செய்து வருகிறார்.

அங்கு காயத்ரி சின்னா (அர்ஜுன்) மற்றும் அவரது உதவியாளர்களான மன்சூர் அலி கான் உள்ளிட்டவர்களை சந்திக்கின்றனர். இவர்கள் உள்ளூரில் வன்செயல் புரியும் குழு ஒன்றுக்கு வேலை செய்பவர்களாவர். காயத்ரி சின்னாவை உள்ளூர் எஸ்.பி. (விஜயகுமார்) இடம் சிக்க வைக்க எத்தனிக்க, அவரது மாமா தடுத்து விடுகிறார்.

கடல் பற்றி அறிய காயத்ரியின் மாமா அவரை சின்னாவிடம் அனுப்பி வைக்கிறார். சில நாட்களில் இருவரும் காதல் வயப்படுகின்றனர். ஆனால், காயத்ரியின் பெற்றோர் அவரை ஒரு நீர்ப்பாசன பொறியியலாளருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பகுதியில் சின்னா, காயத்ரியை அடைந்து கொள்வதற்காக பலரை கொலை செய்கிறார். இறுதியில் காயத்ரியுடன் இணைந்தாரா என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

இந்த படத்திற்கு டி. இமான் என்பவர் இசையமைத்துள்ளார்.[2]

பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பெயிலரே பெயிலரே"  சுனிதா சாரதி 4:25
2. "காலங்கதள"  கிருஷ்ணகுமார் குன்னத், அனுராதா ஸ்ரீராம் 4:30
3. "ஒஸ்தர பிலுஸ்துனர"  கார்த்திக், தேவன் ஏகாம்பரம், ரஞ்சித் 4:25
4. "தோலைதூற நிலவே"  டி. இமான் 4:30
5. "யார் யாரோ"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:15

மேற்கோள்கள்

  1. "Chinna Review". IndiaGlitz.com. 18 July 2005. Archived from the original on 12 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  2. "Chinna (2005)". Raaga.com. Archived from the original on 18 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சின்னா_(திரைப்படம்)&oldid=33408" இருந்து மீள்விக்கப்பட்டது