சுனிதா சாரதி
சுனிதா சாரதி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுனிதா சாரதி |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணி, மேல்நாட்டுச் செந்நெறி இசை, கோஸ்பெல் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 2002 முதல் தற்போது வரை |
சுனிதா சாரதி (Sunitha Sarathy) இந்திய சமகால மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசை வகைகளில் பாடும் ஒரு இந்திய பாடகி மற்றும் நடிகர் ஆவார்.[1] அவர் பல்வேறு தேவாலயக் குழுவில் பாடும் ஒரு சுவிசேஷ பாடகர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் சேனல் வி மற்றும் விர்ஜின் ரெகார்ட்ஸின் கூட்டு முயற்சியான "விர்ஜின் வாய்ஸ் சாய்ஸ்" போட்டியை வென்ற பிறகு, 2002 ஆம் ஆண்டில் மீண்டும் திரைப்படப் பாடல்களை பாட ஆரம்பித்தார்.
தமிழ் திரைப்படமான ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே என்ற படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முன்னணி பாடகர்களான ஸ்ரீனிவாஸ் மற்றும் சுஜாதா மோகன் ஆகியோருடன் "இனி நானும் நானில்லை'' என்ற பாடலில் முன்னோடி மற்றும் இடைவேளையின் பகுதிகளில் பாடினார்.[2] சாரதி 200 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுளார்.[3]
ஆரம்ப வாழ்க்கை
சாரதி மேற்கத்திய இசை (கிளாசிக்கல் ஜாஸ்) நன்கு அறிந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்துள்ளார், தனது 4 வயதிலிருந்தே குழுவிசையில் பாடினார். அவரது தாயார் சுசீலா சாரதி சாந்தோம் சர்ச்சில் மற்றும் லாசரஸ் சர்ச்சில் ஒரு முன்னணி மெட்ராஸ் குழுவிசை மற்றும் பியானே வாசிப்பவரும் ஆவார்.
தொழில்
திறமையான பாடகர்களை தேடி வந்த போது பின்னணி பாடகர் ஸ்ரீனிவாசன் சுனிதா சாரதியை கவனித்தார்.[சான்று தேவை] அவர் ஒரு பாடல் ஒரு சிறிய பகுதியை வழங்கினார், ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே என்ற படத்தில் ஒரு பாடலின் முன்னோடி மற்றும் இடைவேளையின் பகுதிகளில் பாடினார், பின்னர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் தனது தெலுங்கு படமான வசுக்கள் என்ற படத்தில் காதல் மற்றும் நடனக் கருவுக்காக இவரது குரலைப் பதிவு செய்தார். இருப்பினும், அதே வருடத்தில் தமிழ் திரைப்படமான காக்க காக்க படத்தில் இடம்பெற்ற "தூது வருமா" என்ற பாடலை தனிப்பாடலாகப் பாடிய பிறகு பரவலான அங்கீகாரம் இவருக்குக் கிடைத்தது.
2006 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாரதி பாடியுள்ளார்.[4]
ஜூலை 2014 இல், சுனிதா சாரதி பாடகர்கள் ஆர்வமாக செயல்படும் ஒரு செயல்திறன் சார்ந்த மையத்தைத் துவங்கினார்.[சான்று தேவை]
குறிப்புகள்
- ↑ Frederick, Prince (20 October 2011). "Sunitha Sarathy". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/music/article2555165.ece?homepage=true.
- ↑ "My First Break – Sunitha Sarathy". The Hindu (Chennai, India). 1 April 2010 இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120430075646/http://www.thehindu.com/arts/cinema/article364742.ece.
- ↑ "Soaring notes". The Hindu (Chennai, India). 20 October 2011. http://www.thehindu.com/arts/music/article2555165.ece?homepage=true.
- ↑ "Sunitha Sarathy – Climbing greater heights" இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061128071401/http://www.indiaglitz.com/channels/tamil/article/27192.html. பார்த்த நாள்: 2 October 2010.