கலகலப்பு (2012 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கலகலப்பு | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | குஷ்பூ |
இசை | விஜய் எபினேசர் |
நடிப்பு | விமல் சிவா ஓவியா |
ஒளிப்பதிவு | செந்தில் |
கலையகம் | அவினி சினிமேக்ஸ் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1] |
வெளியீடு | மே 11 2012[2] |
நாடு | வார்ப்புரு:Film India |
மொழி | தமிழ் |
கலகலப்பு என்பது சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதில் விமல், சிவா, ஓவியா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஜெர்மன் திரைப்படமான சோல் கிட்சென் என்ற திரைப்படத்தைத் தழுவி உருவானதாகக் கூறப்படுகிறது.
நடிப்பு
- விமல் சீனு, மசாலா கஃபே தற்போதைய உரிமையாளராக
- சிவா ரகுவாக, சீனுவின் சகோதரர் மற்றும் பங்குதாரர்
- ஓவியா மாயாவாகவும், மசாலா கஃபே சமையல்காரரின் பேத்தியாகவும், ரகுவின் காதலியாகவும்
- அஞ்சலி மாதவி, சுகாதாரத் துறை அதிகாரி மற்றும் சீனுவின் காதலி
- சந்தானம் வெட்டுப்புலி, கிராமத் தலைவர் வேட்பாளர் மற்றும் மாதவியின் முறை மாமன்
- ஜான் விஜய் தர்மராஜன், சீனுவின் நண்பன் மற்றும் கும்பகோணம் இன்ஸ்பெக்டர்
- சுப்பு பஞ்சு அருணாச்சலம் மாணிக்கம், தங்கக் கடை உரிமையாளர் மற்றும் முக்கிய எதிரியாக
- இளவரசு அஞ்சுவாட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக சீனுவுக்கு பணம் கொடுத்து கடைசி வரை கஷ்டப்பட்டார்.
- மனோபாலா மருதமுத்து, வெட்டுப்புலியின் எதிர் வேட்பாளராக
- கருணாகரன் இன்ப குமாராக, மாணிக்கத்தின் மைத்துனர்.
- வி. எஸ். ராகவன் நடராஜன், சீனு மற்றும் மாயாவின் தாத்தாவாக
- காளி வெங்கட் ரகுவின் நண்பராக
- சண்முகசுந்தரம் (நடிகர்) அமைச்சர் சுந்தரம்
- விச்சு விசுவநாத் மாணிக்கத்தின் உதவியாளராக
- சமையல் கலைஞராக பாலாஜி கே.மோகன்
- மண்டகசாயமாக பாவா இலட்சுமணன்
- தளபதி தினேஷ் திமிங்கலமாக
- உணவக விருந்தினராக கவுதமி வேம்புநாதன்
- யோகி பாபு 'மலைக்கோட்டை' சங்கர்
- ஜார்ஜ் மரியன் கான்ஸ்டபிள் பச்சைப் பெருமாள்
- பேய் கிருஷ்ணன் - பேயாக
- கல்லூரி வினோத் பிக்பாக்கெட்டாக
ஒலிப்பதிவு
இந்த திரைப்படத்திற்கு இசை விஜய் எபினேசரால் அமைக்கப்பட்டது. இவர் இதற்கு முன்பு கண்டேன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப் படத்தின் அனைத்து பாடல்களையும் பா. விஜய் எழுதியுள்ளார்.
கலகலப்பு (2012) ஒலித்தட்டு | |
---|---|
ஒலித்தட்டு
| |
ஒலிப்பதிவு | 2011 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | விஜய் எபினேசர் |
பாடல் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஏஞ்சலீனா" | கிரிஷ், டாக்டர் பர்ன் & மிலி நாயர் | ||||||||
2. | "இவளுங்க இம்ச தாங்க முடியல" | அமிதாப் நாராயண் | ||||||||
3. | "மசாலா காஃபே" | ராகுல் நம்பியார், ஷீபா ட்ரூமன் & ஸ்டீவெவாட்ஸ் | ||||||||
4. | "மொக்கமனுசா" | ஸ்டீவெவாட்ஸ், சுசித்ரா | ||||||||
5. | "உன்னைப்பற்றி உன்னிடமே" | தேவன், ப்ரசான்தினி | ||||||||
6. | "அவ திரும்பிப்பார்த்து" | கார்த்திக், அனிதா |
வெளி இனைப்புகள்
- ↑ "UTV joins hands with Sundar C & Khushboo Sundar". IndiaGlitz இம் மூலத்தில் இருந்து 18 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111018051711/http://www.indiaglitz.com/channels/tamil/article/72154.html. பார்த்த நாள்: 17 October 2012.
- ↑ "Kalakalappu release date". Behindwoods. http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-12-04/kalakalappu-vimal-24-04-12.html. பார்த்த நாள்: 24 April 2012.