விச்சு விசுவநாத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விச்சு விசுவநாத்
பிறப்புவிசுவநாதன்
16 மே 1960 (1960-05-16) (அகவை 64)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது வரை

விச்சு விஸ்வநாத் (Vichu Vishwanath) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார். நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் பணியாற்றிய இவர், பெரும்பாலும் இயக்குனர் சுந்தர் சி. படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2]

தொழில்

விச்சு விஸ்வநாத் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் பிறந்தவர். ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலயம் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். விச்சு ஹேமலதாவை மணந்தார். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் உள்ளார்.[1] சந்தனக் காற்று (1990) படத்தில் அறிமுகமான இவர், சரத்குமார் மற்றும் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோருடன் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] இப்படத்தின் தயாரிப்பின் போது, படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுந்தர் சி. உடன் பழகினார். பின்னர் சுந்தர் சி.யின் முறை மாமனில் (1996) முறையாக நடித்தார். அதே நேரத்தில் நடிகை ராதிகா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைப்பில் இருந்தார்.[1][4]

2017 ஆம் ஆண்டில், சுந்தர் சி யின் தொலைக்காட்சி தொடரான நந்தினியில் பணிபுரிந்தார்.[5]

குறிப்பிடத்தக்க திரைப்படவியல்

படங்கள்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பாத்திரம் அலைவரிசை
1997-1998 மர்மதேசம் விடாது கருப்பு வீர பாகு சன் தொலைக்காட்சி
2009–2013 செல்லமே சோலைமலை
2017–2018 நந்தினி விச்சு
2020 லட்சுமி ஸ்டோர்ஸ் வரதராஜன்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விச்சு_விசுவநாத்&oldid=22142" இருந்து மீள்விக்கப்பட்டது