காடு (2014 திரைப்படம் )
காடு (ஆங்கிலம்: Kaadu) என்பது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்ப் படமாகும். இதை ஸ்டாலின் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் நேரு நகர் நந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் விதார்த் மற்றும் சம்ஸ்கிருதி ஷெனாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முத்துக்குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், இசையமைத்தவர் கே என்பராவார்.. இந்த படம் 21 நவம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது.[1]
கதை
வேலு அருகிலுள்ள காட்டை அடிப்படையாகக் கொண்டு, காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட விறகுகளை தனது வாழ்வாதரத்திற்காக உள்ளூர்வாசிகளுக்கு விற்கிறார். அவர் இயற்கையை நம்புகிறார், அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அனைத்து வளங்களையும் வழங்க நினைக்கிறார். பள்ளி மாணவியான பூங்கொடி அருகிலுள்ள ஊரில் வசிக்கிறாள். அவள் வேலுவை காதலிக்கிறாள். வேலுவும் அவளை விரும்புகிறான். வேலுவின் நண்பரான கருணா வன அதிகாரியாக ஆசைப்படுகிறான். ஆனால் ஏழையாக இருப்பதால், தேர்வாளர்களுக்குத் தேவையான லஞ்சத்தை அவனால் அளிக்க முடியவில்லை. விரக்தியில், அவர் வேறு ஒருவருக்காக சந்தன மரத்தை கடத்த முயற்சிக்கிறான். ஆனால் வனத்துறைக் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறான். தனது கனவு வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விடாதிருக்க வேலுவை தனக்கு பதிலாக சிறைக்குச் செல்லுமாறு அவன் கேட்டுக்கொள்கிறான். நட்புக்காக வேலு ஒப்புக்கொள்கிறான். அவனது நண்பன் தான் நினைக்கக்கூடிய உண்மையாக இருக்கக் கூடிய மனிதனாக இல்லை என்பதை வேலு உணரவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட வேலு அங்கு ஒரு அரசியல் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான நந்தாவை சந்திக்கிறான். நந்தாவின் வழிகாட்டுதலின் கீழ் வேலு வேறு மனிதனாக மாறுகிறான். இங்கே, விஷயங்கள் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.
இதற்கிடையில், கருணா மாவட்ட வன அலுவலரை ஏமாற்றி, வன அதிகாரியாகிவிடுகிறான். தன்து பதைவியை வைத்து, வனத்தில் வசிக்கும் மக்களை விரட்டுவதன் மூலம் தனது தனிப்பட்ட லாபத்திற்காக காட்டை கையகப்படுத்த முயற்சிக்கிறான். அரசாங்கத்திற்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான மோதலில், கிராமவாசிகள் இரு பக்கங்களிலிருந்தும் மோசமாக சுரண்டப்படுகிறார்கள். வேலுக்கு பிணை கிடைத்து சிறையிலிருந்து வெளியில் வந்து, கருணா மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிராக போராடுகிறான். கிராமவாசிகள் நகரத்திற்கு குடிபெயர்வதிலிருந்து தடுப்பதிலும் கடத்தல்காரர்களிடமிருந்து காட்டை காப்பாற்றுவதற்கும் போராடுகிறான்.
நாம் காடுகளை பாதுகாக்காமல் அதை தொடர்ந்து அழ்த்து வந்தால் இயற்கையானது மனிதகுலத்தால் அதன் தாக்குதலைத் தாங்க முடியாத அளவுக்கு அதன் சக்தியால் நம்மைத் தாக்கும் என்ற செய்தியுடன் படம் முடிகிறது.
நடிகர்கள்
வேலுவாக விதார்த்
பூங்கொடியாக சம்ஸ்க்ருதி ஷெனாய்
கருணாவாக முத்துக்குமார்
நந்தாவாக சமுத்திரக்கனி
வன அலுவல்ராக ஆடுகளம் நரேன்
செட்டியாராக தம்பி ராமையா
கோட்டையனாக ஜியார்ஜ் மரியான்
மதுரையாக சிங்கம்புலி
வேலுவின் தாயாக டி. கே. கலா
நீதியரசராக வீ. க. தனபாலன்
ஆர். என். ஆர். மனோகர்
விச்சு விஸ்வநாத்
வன காவலர் கோபாலாக 'பூ' ராம்
பூங்கொடியின் தாயாராக லட்சுமி
பூங்கொடியின் மாமனாக ஆதிரவன்
ரவிச்சந்திரனாக இரவி வெங்கட்ராமன்
ஆப்பர் குட் கண்ணன்
தயாரிப்பு
விதார்த் படத்தில் தனது பகுதிகளை 2014 ஜனவரியில் தொடங்கினார், தர்மபுரியில் நடைபெற்ற ஒரு படபிடிப்பு அட்டவணையில் பங்கேற்றார். இது ஒரு மாதம் நீடித்தது.[2] இந்த படக்குழு பின்னர் 2014 முழுவதும் படபிடிப்பு அட்டவணைகளை நிறைவு செய்தது மற்றும் விளம்பர நடவடிக்கைகள் அக்டோபர் 2014 இல் தொடங்கியது.
வெளியீடு
இந்தத் திரைப்படம் வெளியாகும் காலத்தில் வேறு பல வெளியீடுகள் இருந்ததால், 21 நவம்பர் 2014 அன்று தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட வெளியீட்டையேக் கொண்டிருந்தது. இது கலவையான விமர்சனங்களுக்குத் வழி வித்திட்டத. தி நியூ இந்தியன் எக்சுபிரசு தனது விமர்சனத்தில் படத்திற்கு ஒரு நேர்மறையான விமர்சனத்தை அளித்தது. "மிகவும் நேர்த்தியாக கதை உருவாக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது. காடு ஒரு அறிமுக தயாரிப்பாளரிடமிருந்து மிகவும் நம்பிக்கைக்குரிய முயற்சி ஆகும்" என்றது.[3]
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்தின் ஒலிப்பதிவை இசையமைப்பாளர் கே மேற்கொண்டார்.
குறிப்புகள்
- ↑ http://www.behindwoods.com/tamil-movies/kaadu/kaadu-review.html
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Vidharth-shoots-for-Kaadu/articleshow/29297343.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.