தேவதர்சினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவதர்சினி
இயற்பெயர்/
அறியும் பெயர்
தேவதர்சினி
பிறப்புபெயர் தேவதர்சினி நீலகண்டன்
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி நடிகை
செயற்பட்ட ஆண்டுகள் 1997 – தற்போது வரை
செயற்பட்ட ஆண்டுகள் 1997 – தற்போது வரை
துணைவர் சேத்தன்

தேவதர்சினி (Devadarshini) என்பவர் ஒரு தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன், தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மர்மதேசம் மற்றும் அத்திப்பூக்கள் (2007-2012) போன்ற பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும், திரைப்படங்களில் முக்கியமாக துணை வேடங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகிறார்.

வாழ்க்கை வரலாறு

தேவதர்ஷினி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் கல்லூரியில் வணிகவியல் படித்தார், பின்னர் பயன்பாட்டு உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும்போதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். பின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடரான கனவுகள் இளவசத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, இது நாகாவின் மர்மதேசம் என்ற மர்மத் தொடரில் இவருக்கு நடிக்க வழிவகுத்தது. அதை தொடர்ந்து நாகா இயக்கிய ரமணி விஸ் ரமணி பாகம் 2ல் அறிமுகமானார். பின்னர் விடாது கருப்பு என்ற தொடரிலும் நடித்தார். இது இவரது வாழ்க்கையில் ஒரு "பெரிய திருப்புமுனை" என்று அவர் கருதுகிறார்.

இவர் 2003 இல் வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தில் நடித்தார், இதில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருவிருதை வென்றார். அதை தொடர்ந்து அண்ணாமலை (2002-2005), சித்தமபுர ரகசியம் (2004-2006), கோலங்கள் (2004-2005), அத்திப்பூக்கள் (2007-2012) போன்ற பல தொடர்களில் நடித்தார்.

காஞ்சனா (2011) படத்திற்குப் பிறகு, இவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் 2002 இல், தேவதர்ஷினி ஒரு தொலைக்காட்சி நடிகரான சேத்தன்|சேத்தனை திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்கள் முதன் முதலில் மர்மதேசம் - விடத்து கருப்பு படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இவர்களது மகள், நியாதி கடம்பி, 96 இல் தனது தாயின் கதாபாத்திரத்தின் இளைய வடிவத்தை சித்தரித்து அறிமுகமானார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 காக்க காக்க சுவாதி சிறீக்காந்து தமிழ்
எனக்கு 20 உனக்கு 18 சிறீதரின் அக்கா தமிழ்
காதல் கிறுக்கன் மருத்துவர் தமிழ்
பார்த்திபன் கனவு அமுதா தமிழ் தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது
2004 அழகிய தீயே தமிழ்
2005 குருதேவா தமிழ்
6'2 மீனாட்சி தமிழ்
பொன்னியின் செல்வன் தமிழ்
கண்ட நாள் முதல் கிருஷ்ணாவின் அக்கா தமிழ்
2006 சரவணா சரவணணின் அண்ணி தமிழ்
ரெண்டு மாதவனின் அக்கா தமிழ்
2007 தீபாவளி சுமதி தமிழ்
கிரீடம் தமிழ்
எவனோ ஒருவன் தமிழ்
2008 'பிரிவோம் சந்திப்போம் சேரனின் அண்ணி தமிழ்
சரோஜா தேவதர்சினி தமிழ் சிறப்புத் தோற்றம்
2009 படிக்காதவன் கவுசல்யா தமிழ்
புதிய பயணம் தமிழ்
சொல்ல சொல்ல இனிக்கும் தமிழ்
2010 கொல கொலயா முந்திரிக்கா தமிழ்
எந்திரன் லதா தமிழ்
2011 காஞ்சனா ராகவனின் அண்ணி தமிழ்
மகான் கணக்கு சானகி தமிழ்
2012 சகுனி தமிழ்
ஈகா தெலுங்கு
நான் ஈ தமிழ்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா மாமி தமிழ்
கருப்பம்பட்டி சிவகாமி தமிழ்
தீயா வேலை செய்யனும் குமாரு குமாரின் சகோதரியாக தமிழ்
சம்திங் சம்திங் தெலுங்கு
தில்லு முல்லு வங்கி அலுவலர் தமிழ்
யா யா ஐஸ்வர்யா தமிழ்
கோலாகலம் தமிழ்
நவீன சரஸ்வதி சபதம் பார்வதி தமிழ்
2014 வீரம் தமிழ்
தெனாலிராமன் தமிழ்
அம்மா அம்மம்மா தமிழ்
வாலிப ராஜா தமிழ்
நம்பியார் தமிழ்
காதல் 2 கல்யாணம் தமிழ்
2016 சாகசம் தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

  1. மர்மதேசம்
  2. சிதம்பர ரகசியம்
  3. ரமணியும் ரமணி 2 ம்
  4. அண்ணாமலை
  5. கோலங்கள்
  6. பெண்
  7. சின்னப் பாப்பா பெரியப் பாப்பா
  8. எத்தனை மனிதர்கள்
  9. கனவுகள் இலவசம்
  10. பெண்மனம்
  11. உறவுகள் ஒரு தொடர்கதை
  12. கண்ணாடிக் கதவுகள்
  13. அது மட்டும் ரகசியம்
  14. லட்சுமி
  15. அஞ்சலி
  16. சொல்லத்தான் நினைக்கிறேன்
  17. இதயம்
  18. அத்திப் பூக்கள்
  19. பூவிலங்கு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தேவதர்சினி&oldid=22945" இருந்து மீள்விக்கப்பட்டது