96 (திரைப்படம்)
96 | |
---|---|
திரைப்பட சுவரிதழ் | |
இயக்கம் | சி. பிரேம் குமார் |
தயாரிப்பு | நந்தகோபால் |
கதை | சி. பிரேம் குமார் |
இசை | கோவிந் மேனன் |
நடிப்பு | விஜய் சேதுபதி திரிசா |
ஒளிப்பதிவு | சண்முக சுந்தரம் |
படத்தொகுப்பு | ஆர். கோவிந்தராஜ் |
கலையகம் | மெட்ராஸ் என்டர்பிரைஸ் |
வெளியீடு | 4 அக்டோபர் 2018 |
ஓட்டம் | 2 மணி 37 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
96 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் காதல் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிசா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சி. பிரேம் குமார் எழுதி, இயக்க நந்தகோபாலால் தயாரிக்கப்பட்டது. கோவிந்மேனனின் இசையமைப்பு மற்றும் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 04, 2018 அன்று வெளியானது.[2]
நடிகர்கள்
- விஜய் சேதுபதி - கே. இராமச்சந்திரன் (இராம்)
- திரிசா - ஜானகி தேவி (ஜானு)
- வர்சா பொல்லம்மா - பிரபா
- ஆதித்யா பாஸ்கர் - பள்ளி மாணவன் இராம்
- கௌரி ஜி கிசான் - பள்ளி மாணவி ஜானு
- தேவதர்சினி - சுபாசினி
- சனகராஜ் - வாட்ச்மேன்
- பகவதி பெருமாள் - முரளி
- முருகதாஸ் - சதீஸ்
- நியாதி கடம்பி - பள்ளி மாணவி சுபாசினி
- சியாம் பிரசாத்
- கௌதம் ராஜ் -இளம் வயது (சதீஷ் பள்ளி மாணவன்)
கதைச் சுருக்கம்
1996 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு ஒன்றாக பள்ளியில் படித்த ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (திரிசா) ஆகியோர் காதலர்களாக இருந்தனர். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக 10ஆம் வகுப்புக்குப் பிறகு ராம் பள்ளியை விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றுவிடுகிறார். அதன்பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்க முடியாமல் போகிறது. ஒரு பயண புகைப்படக்காரராகும் ராம் 22 ஆண்டுகளுக்கு பின்னர், ராம் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு தனது சிறு பருவத்தில் இருந்து எல்லா இடங்களையும் பார்க்கவும், தனது பள்ளித் தோழர்களுடன் தொடர்பு கொள்ளவும் செல்கிறார். மேலும் அவர்கள் இரண்டு மாதங்கள் கழித்து சென்னையில் ஒருவரையொருவர் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள். ராம் ஆச்சரியப்படும்படியாக, ஜானு சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின்பு '96 ஆம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்களின் மறு சந்திப்பில் கலந்துக் கொள்கிறார். ராம் மற்றும் ஜானு 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைகிறார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
வெளியீடு
இப்படத்தின் முன்னோட்டமானது ஆகஸ்ட் 24, 2018 அன்று வெளியானது. பின்பு இத்திரைப்படம் அக்டோபர் 04, 2018 அன்று வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ "ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள '96' திரைப்படம்". நியூஸ் 18 தமிழ்
- ↑ "96' திரைப்படம் வெளியீடு - ரூ.1.50 கோடி விவகாரம் - விஷால் முடிவு".தினத்தந்தி (அக்டோபர் 06, 2018)