சிவகுமார்

சிவகுமார் (Sivakumar) புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர் இவர் கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் 100 ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.[3]

சிவகுமார்
சிவகுமார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சிவகுமார் பழனிச்சாமி
பிறப்புபெயர் ராக்கையா.கவுண்டர் பழநிச்சாமி [1]
பிறந்ததிகதி 27 அக்டோபர் 1941 (1941-10-27) (அகவை 83)[2]
பிறந்தஇடம் கோவை மாவட்டம் சூலூர் அருகில் காசிகவுண்டன் புதூர்
துணைவர் இலட்சுமி சிவகுமார்
பிள்ளைகள் சூர்யா, கார்த்தி மற்றும் பிருந்தா

திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

தொழில்

சிவகுமார் தற்போதைய தமிழ்த் திரைப்படத்தின் பல்துறை நடிகர்களில் ஒருவர். நான்கு தலைமுறைகளாக நீடிக்கும் முன்னணியிலும், ஆதரவாகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. புகழ்பெற்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் (1965) திரைப்படத்தில் அறிமுகமானார். தொழிலில் நுழைந்ததால் பழனிச்சாமி சிவகுமார் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த படம் 19 ஜூன் 1965 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் திறமையான நடிகருக்கான கதவுகள் திறந்தது. இவர் அனைத்து வகைகளிலும் எந்த பாத்திரத்தையும் நேர்த்தியுடன் கொண்டு செல்ல முடியும்.

சிவகுமார் நடிப்பின் திறன்களை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. நடிப்பிற்கான இவரது அர்ப்பணிப்பு இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களான சரஸ்வதி சபதம் (1966), கந்தன் கருணை (1967), திருமால் பெருமை (1968) மற்றும் உயர்ந்த மனிதன் (1968) போன்றவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டதாகும். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் வெற்றி பெற்ற ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) மற்றும் மிகவும் பிரபலமான கே பாலசந்தரின் சிந்து பைரவி (1985) திரைப்படங்களில் நடித்துள்ளார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), வண்டிச்சக்கரம் (1980) ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை (தெற்கு) வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது -(2007)ஆம் ஆண்டில் பெற்றார். இவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அவன் அவள் அது (1980) மற்றும் அக்னி சாட்சி (1982) ஆகிய திரைப்படங்களுக்குப் பெற்றார்.

இவர் மூன்று தலைமுறைகளில், எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரசினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், பிரபு கணேசன், கார்த்திக், மோகன், அர்ஜுன் சர்ஜா, அஜித் குமார், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ராதிகாவுடன் இணைந்து சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

2012 ஆம் ஆண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜெயா தொலைக்காட்சி வாழ்நாள் சாதனையாளர் விருதை சிவகுமாருக்கு வழங்கி கௌரவித்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகிற்கு இவர் செய்த பாராட்டத்தக்க பங்களிப்புக்காக இவரை கௌரவிப்பதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டது.

சமீபத்திய காலங்களில், இந்து இறையியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தனது கருத்தைத் தெரிவித்த இவர் பொதுப் பேச்சில் இறங்கினார். இவருடைய சரளமான பேச்சுகளுக்காக பாராட்டப்பட்டார்.[4][5]

தனிப்பட்ட வாழ்க்கை

சிவகுமார் கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் இலட்சுமி குமாரி என்பவரை மணந்தார், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் என இரண்டு மகன்களும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். பிருந்தா ஒரு பின்னணி பாடகியாவார்[6]. இவர் ஒரு பக்தியுள்ள இந்து மற்றும் ஸ்ரீ முருகனின் பக்தராவார். சிவகுமாரின் மூத்த மருமகள் ஜோதிகா ஒரு திரைப்பட நடிகையாவார்.[7]

கம்பராமாயண சொற்பொழிவு

கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.[8]

திரைப்படப் பட்டியல்

1960களில்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1965 காக்கும் கரங்கள் சுரேந்தர் அறிமுகம்
1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை கோபால்
தாயே உனக்காக ராஜு (ராணுவ வீரர்)
சரஸ்வதி சபதம் கடவுள் விஷ்ணு
1967 கந்தன் கருணை கடவுள் முருகன்
காவல்காரன் சந்திரன்
கண் கண்ட தெய்வம் பரிமாறுபவர்
1968 பணமா பாசமா சங்கரின் மைத்துனன்
திருமால் பெருமை கடவுள் விஷ்ணு
பால் மனம்
ஜீவனாம்சம் சபாபதி
உயர்ந்த மனிதன் சத்யமூர்த்தி
1969 காவல் தெய்வம் மாணிக்கம்
கன்னிப் பெண்
அன்னையும் பிதாவும்

1970களில்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1970 விளையாட்டுப் பிள்ளை மாணிக்கம்
எதிரொலி சுந்தரம்
கஸ்தூரி திலகம்
திருமலை தென்குமரி சேகர்
நவக்கிரகம்
1971 திருமகள் ராமு
கண்காட்சி
தேரோட்டம்
மூன்று தெய்வங்கள் குமார்
அன்னை வேளாங்கண்ணி ரங்கய்யா
பாபு பிரேம்
1972 அகத்தியர் தொல்காப்பியர்
சக்தி லீலை நாரத முனி
இதய வீணை கிரிமணி
அன்னை அபிராமி
தெய்வம் சுப்பிரமணியம்
1973 கங்கா கௌரி மகாதேவன்
அரங்கேற்றம் தங்கவேலு
பாரத விலாஸ் சங்கர்
ராஜ ராஜ சோழன் இளவரசர் இராசேந்திர சோழன்
சண்முகப்பிரியா விருந்தினர் தோற்றம்
பொண்ணுக்கு தங்க மனசு ராமு
சொந்தம்
திருமலை தெய்வம் கடவுள் விஷ்ணு / ஸ்ரீனிவாசன்
கட்டிலா தொட்டிலா சம்பாசிவம்
காரைக்கால் அம்மையார் கடவுள் சிவா
பெண்ணை நம்புங்கள்
சொல்லத்தான் நினைக்கிறேன் ராகவன்
1974 திருமாங்கல்யம் முரளி
டைகர் தாத்தாச்சாரி
மாணிக்கத் தொட்டில் விருந்தினர் தோற்றம்
சிசுபாலன் விருந்தினர் தோற்றம்
கண்மணி ராஜா செல்வம்
தீர்க்க சுமங்கலி
வெள்ளிக்கிழமை விரதம் நாகராஜன்
குமாஸ்தாவின் மகள்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
பாதபூஜை
எங்கம்மா சபதம்
தாய் பாசம்
பணத்துக்காக ரமேஷ்
1975 எங்க பாட்டன் சொத்து
புதுவெள்ளம்
தேன்சிந்துதே வானம் ராஜா
யாருக்கும் வெட்கமில்லை
மேல்நாட்டு மருமகள் மோகன்
தங்கத்திலே வைரம் ரவி
உறவு சொல்ல ஒருவன் விருந்தினர் தோற்றம்
இப்படியும் ஒரு பெண்
ஆண்பிள்ளை சிங்கம் அசோக்
பட்டிக்காட்டு ராஜா ராஜா
1976 உங்களில் ஒருத்தி
கிரஹப்பிரவேசம் இரவி
அன்னக்கிளி தியாகராஜன் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
மதன மாளிகை
சந்ததி
உறவாடும் நெஞ்சம்
பத்ரகாளி கணேஷ்
1977 எதற்கும் துணிந்தவன்
சொன்னதைச் செய்வேன்
பெண்ணை சொல்லி குற்றமில்லை
பெருமைக்குறியவள்
கவிக்குயில் கோபால்
சொர்க்கம் நரகம்
துணையிருப்பாள் மீனாட்சி
புவனா ஒரு கேள்விக்குறி நாகராஜன்
ஸ்ரீ கிருஷ்ண லீலா கடவுள் கிருஷ்ணன்
ஆட்டுக்கார அலமேலு விஜய் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
துர்க்கா தேவி
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
1978 ராதைக்கேற்ற கண்ணன்
மாரியம்மன் திருவிழா
கைபிடித்தவள்
சிட்டுக்குருவி
கண்ணாமூச்சி
கண்ணன் ஒரு கைக்குழந்தை
மச்சானை பாத்தீங்களா
அதை விட ரகசியம்
1979 என்னடி மீனாட்சி
கடவுள் அமைத்த மேடை
ரோசாப்பூ ரவிக்கைக்காரி செம்பட்ட 100வது திரைப்படம்
வெற்றி, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
யாருக்கு யார் காவல்
பூந்தளிர் அசோக்
தேவதை
முதல் இரவு
ஏணிப்படிகள் மாணிக்கம்

1980களில்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1980 ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
குருவிக்கூடு
காதல் கிளிகள்
அவன் அவள் அது ராமு
சாமந்திப்பூ
வண்டிச்சக்கரம் கஜா வெற்றி, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
ராமன் பரசுராமன் இரண்டு கதாபாத்திரங்கள்
துணிவே தோழன்
1981 கோடீஸ்வரன் மகள்
ஆணிவேர்
நெல்லிக்கனி
நெருப்பிலே பூத்த மலர்
அன்று முதல் இன்று வரை
1982 ஆனந்த ராகம்
ஆயிரம் முத்தங்கள் முரளி
துணைவி
தீர்ப்புகள் திருத்தப்படலாம்
தாய்மூகாம்பிகை
நிஜங்கள்
அக்னி சாட்சி அரவிந்தன் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
நம்பினால் நம்புங்கள்
1983 உறங்காத நினைவுகள்
சாட்டை இல்லாத பம்பரம் பழனிசாமி
தம்பதிகள்
வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்
சஸ்டி விரதம்
இன்று நீ நாளை நான் பழனியப்பன்
தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
தங்கைக்கோர் கீதம் ஹரிச்சந்திரன்
1984 குவா குவா வாத்துகள்
அம்மா இருக்கா
நான் பாடும் பாடல் சி. ஆர். சுப்பிரமணியம்
நிலவு சுடுவதில்லை ரவி
உன்னை நான் சந்தித்தேன் ரகுராமன்
1985 புதுயுகம் ராஜசேகர்
பௌர்ணமி அலைகள்
சுகமான ராகங்கள்
கற்பூரதீபம்
பிரேம பாசம்
சிந்து பைரவி ஜே. கே. பாலகணபதி பரிந்துரை, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்,
மீண்டும் பராசக்தி
1986 ஜீவநதி
கண்மணியே பேசு
கண்ணத் தொறக்கணும் சாமி சேகர்
யாரோ எழுதிய கவிதை
இசை பாடும் தென்றல்
மனிதனின் மறுபக்கம் ரவி வர்மா
உனக்காகவே வாழ்கிறேன் ரவிசங்கர்
பன்னீர் நதிகள்
1987 இனி ஒரு சுதந்திரம் சத்யமூர்த்தி
சின்னக்குயில் பாடுது ராஜா
1988 பூவும் புயலும்
ஒருவர் வாழும் ஆலயம் சிவகுருநாதன்
பாசப் பறவைகள் டாக்டர். சுகுமார்
இல்லம் மயில்சாமி கவுண்டர்
பாடாத தேனீக்கள்

1990களில்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1990 பகலில் பௌர்ணமி
உறுதிமொழி
நீ சிரித்தால் தீபாவளி
நியாயங்கள் ஜெயிக்கட்டும்
1991 மறுபக்கம் வேம்பு ஐயர்
மனித ஜாதி
பிள்ளை பாசம்
சார் ஐ லவ் யூ
1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா ராக்கையா
ஒண்ணா இருக்க கத்துக்கணும் சிவராமன்
1993 தசரதன்
பொன்னுமணி கதிர்வேலு
பொறந்த வீடா புகுந்த வீடா ரவி
1994 சிறகடிக்க ஆசை சிவா
வாட்ச்மேன் வடிவேலு வடிவேலு
மேட்டுப்பட்டி மிராசு மேட்டுப்பட்டி மிராசு, சிவா
1995 பசும்பொன் கதிரேசதேவர்
தேவா காந்திதாசன்
டியர் சன் மருது விஸ்வநாதன்
1996 நாட்டுப்புறப் பாட்டு பழனிசாமி
1997 ராமன் அப்துல்லா ஹஜீர்
காதலுக்கு மரியாதை சந்திரசேகர்
1999 உன்னை தேடி ஆதி நாராயணன்
கும்மி பாட்டு தர்மராசு
மலபார் போலீஸ் நாகராஜன்
மறவாதே கண்மணியே தர்மராசு
சேது
கண்ணுபடப்போகுதய்யா பரமசிவம்

2000த்தில்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2000 உயிரிலே கலந்தது ஆய்வாளர் சேது விநாயகம்
இளையவன் டி. பாபு
2001 பூவெல்லாம் உன் வாசம் அருணாசலம்

பின்னணிக் குரல்

2010களில்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் நடிகர்
2015 36 வயதினிலே இந்தியக் குடியரசுத் தலைவர் சித்தார்த்த பாசு

தொலைக்காட்சித் தொடர்கள்

  • கையளவு மனசு (1990)
  • ரேவதி
  • புஸ்பாஞ்சலி
  • வீட்டுக்கு வீடு வாசப்படி
  • பந்தம் (1994)
  • ௭த்தனை மனிதர்கள் (1997)
  • ஆட்சி இன்டர்நேஷனல் (1997-1998)
  • திக் திக் திக் (1999)
  • சித்தி (1999-2001)
  • காவேரி (1999-2001)
  • அண்ணாமலை (2002-2005)
  • லட்சுமி (2006-2008)

விருதுகள்

சிவகுமார் மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் தெற்கில் பெற்றவர் மற்றும் இரண்டு முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர் .

பிலிம்பேர் விருதுகள் தெற்கு

  • 1979 – சிறந்த நடிகர் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி- (தமிழில்)
  • 1980 – சிறந்த நடிகர் – வண்டிச்சக்கரம் - (தமிழில்)
  • 2007 - பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்

  • 1979 – சிறந்த நடிகர் விருது - அவன் அவள் அது
  • 1982 - சிறந்த நடிகர் விருது - அக்னி சாட்சி

அண்ணா நூற்றாண்டு நூலகம்

  • 2012 - வாழ்நாள் சாதனையாளர் விருது

நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்

  • 2015 - நார்வே தமிழ்த் திரைப்பட விழா--கலைச்சிகரம் விருது

விஜய் விருதுகள்

  • 2018 - தமிழ் சினிமாவுக்கு பங்களித்ததற்காக விஜய் விருது

நூல்கள்

  • இது ராஜபாட்டை அல்ல
  • கம்பன் என் காதலன்
  • டைரி(1945-1975)
  • தமிழ் சினிமாவில் தமிழ்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified Retrieved on 21 சூன் 2019.
  2. Rao, Subha J (1 February 2011). "Memories of Madras — Shades of a bygone era". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article1145813.ece. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150321004901/http://www.maalaisudar.com/newsindex.php?id=27241%20&%20section=22. 
  4. Rangarajan, Malathi (8 April 2011). "Saying it with sincerity". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/saying-it-with-sincerity/article1610080.ece. 
  5. "Actor Sivakumar finishes narrating Mahabharatham in just 2 hours and 15 minutes.". 27 October 2015 இம் மூலத்தில் இருந்து 10 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170110092438/http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/actor-sivakumar-finishes-mahabharatham-in-just-2-hours-and-15-minutes.html. 
  6. http://www.woodsdeck.com/stories/10015-now-it-s-brinda-from-actor-sivakumar-family
  7. https://jfwonline.com/article/5-most-adorable-father-in-law-daughter-in-law-duos-in-south-cinema/3/
  8. நடிகர் சிவகுமாரின் 79-வது பிறந்த நாள்: உதாரணக் கலைஞன். தினமணி. 27 அக்டோபர் 2020. https://www.dinamani.com/cinema/special/2020/oct/27/sivakumar-79th-birthday-3493039.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிவகுமார்&oldid=6955" இருந்து மீள்விக்கப்பட்டது