பத்ரகாளி (திரைப்படம்)
பத்ரகாளி | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | டி. பாரதி சினி பாரத் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் ராணி சந்திரா |
வெளியீடு | திசம்பர் 10, 1976 |
நீளம் | 3831 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பத்ரகாளி (Bhadrakali) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். எழுத்தாளர் மகரிஷி எழுதிய தமிழ்ப் புதினம் ஒன்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் இதே பெயரில் தெலுங்கில் 1977 இல் தயாரிக்கப்பட்டது.
பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.[1] கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதனால், அவர் நடிக்க இருந்த மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.[2][2][3][4]
பாடல்கள்
இப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடல்களுக்கும் இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகள் கவிஞர் வாலியால் எழுதப்பட்டது. "கேட்டேளா" பாடலின் வரிகள் பிராமணர்களுக்கு எதிரானதாகக் கருதப்பட்டதால் அகில இந்திய வானொலியில் தடை செய்யப்பட்டது.
எண் | பாடல் | பாடகர்(கள்) | நேரம் |
---|---|---|---|
1 | "ஆனந்த பைரவி" | குழுவினர் | 03:50 |
2 | "கண்ணன் ஒரு" | கே. ஜே. யேசுதாஸ், | 04:40 |
3 | "ஓடுகின்றாள்" | சீர்காழி கோவிந்தராஜன் | 03:21 |
4 | "ஒத்த ரூபா" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 03:12 |
5 | :"கேட்டேளா" | பி. சுசீலா | 04:40 |
மேற்கோள்கள்
- ↑ "எம்.ஜி.ஆர் பார்முலா இல்லாத எம்.ஜி.ஆர் படம் எடுத்தேன்! - இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர்". Cinema Express (தி நியூ இந்தியன் எக்சுபிரசு) இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303235526/http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D!+-+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8F.%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&artid=109661&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO=. பார்த்த நாள்: 6 ஏப்ரல் 2014.
- ↑ 2.0 2.1 Nair, Sashi (9 செப்டம்பர் 2003). "Their SHOT at fame". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 ஆகஸ்ட் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040801021745/http://www.hindu.com/mp/2003/09/09/stories/2003090900170400.htm. பார்த்த நாள்: 19 April 2014.
- ↑ "'பத்ரகாளி' படத்தின் கதாநாயகி நடிகை ராணி சந்திரா விமான விபத்தில் மரணம்" இம் மூலத்தில் இருந்து 28 பெப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120228030522/http://cinema.maalaimalar.com/2012/02/17200935/pathrakali-film-actress-dead-p.html. பார்த்த நாள்: 17 சூன் 2016.
- ↑ Rangarajan, Malathi (25 March 2011). "Moorings and musings". தி இந்து. http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2011032550480100.htm&date=2011/03/25/&prd=fr&. பார்த்த நாள்: 6 April 2014.[தொடர்பிழந்த இணைப்பு]