ராணி சந்திரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராணி சந்திரா
பிறப்பு1949
கொச்சி கோட்டை, திருவிதாங்கூர்-கொச்சி, இந்தியா
இறப்பு12 அக்டோபர் 1976 (அகவை 26–27)
மும்பை, மகாராட்டிரம்
இறப்பிற்கான
காரணம்
விமான விபத்து
அறியப்படுவதுநடிகை
பெற்றோர்சந்திரன், காந்திமதி

ராணி சந்திரா (Rani Chandra, 1949 – 12 அக்டோபர் 1976) என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். கேரளத்தின் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.[1] இவர் பல மலையாள, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் இறந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்

ராணி சந்திரா திருவிதாங்கூர்கொச்சியில் 1949 ஆண்டில் சந்திரன், காந்திமதி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] எர்ணாகுள்ம் புனித தெரேசசு கல்லூரியில் கல்வி கற்றார். இவர் நடனக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.[2] 1972 ஆம் ஆண்டில் கேரள அழகுராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

இவரது முதல் திரைப்படம் அஞ்சுசுந்தரிகள் ஆகும். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் பத்ரகாளி இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.

மறைவு

பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.[4] கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா, அவரது தாயார், மூன்று தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.[5]

இதனால், இவர் நடிக்க இருந்த பத்ரகாளி தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.[6][6][7][8]

விருதுகள்

  • 1975 சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது

நடித்த சில திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 റാണിചന്ദ്ര-നോവിക്കുന്ന ഓര്‍മ്മ
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  3. Imprints On Indian Film Screen: Rani Chandra
  4. "எம்.ஜி.ஆர் பார்முலா இல்லாத எம்.ஜி.ஆர் படம் எடுத்தேன்! - இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர்". Cinema Express (தி நியூ இந்தியன் எக்சுபிரசு). Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2014.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  6. 6.0 6.1 Nair, Sashi (9 செப்டம்பர் 2003). "Their SHOT at fame". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 ஆகஸ்ட் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040801021745/http://www.hindu.com/mp/2003/09/09/stories/2003090900170400.htm. பார்த்த நாள்: 19 April 2014. 
  7. "'பத்ரகாளி' படத்தின் கதாநாயகி நடிகை ராணி சந்திரா விமான விபத்தில் மரணம்". Archived from the original on 28 பெப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  8. Rangarajan, Malathi (25 March 2011). "Moorings and musings". தி இந்து. http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2011032550480100.htm&date=2011/03/25/&prd=fr&. பார்த்த நாள்: 6 April 2014. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராணி_சந்திரா&oldid=23290" இருந்து மீள்விக்கப்பட்டது