தேன்சிந்துதே வானம்
தேன் சிந்துதே வானம் | |
---|---|
இயக்கம் | ரா. சங்கரன் |
தயாரிப்பு | வி. சி. கணேசன் (சுதர்சன் எண்டர்பிரைஸ்) |
கதை | டாக்டர் பாலகிருஷ்ணன் |
திரைக்கதை | ஆர். சங்கரன் |
வசனம் | 'காரைக்குடி' நாராயணன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | சிவகுமார் கமல்ஹாசன் ஜெயசித்ரா |
ஒளிப்பதிவு | கே. எஸ். பாஸ்கர் ராவ் |
படத்தொகுப்பு | எம். எஸ். உமாநாத் எம். மணி |
நடனம் | சலீம் |
வெளியீடு | ஏப்ரல் 11, 1975 |
நீளம் | 3988 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேன் சிந்துதே வானம் (Then Sindhudhe Vaanam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- சிவகுமார் - ராஜா[2]
- ஜெயசித்ரா - லில்லி[2]
- கமல்ஹாசன் - ரவி[3]
- ராணி சந்திரா - ரமா
- ஸ்ரீகாந்த் - கோபு
- சோ ராமசாமி - பாவாடை
- மனோரமா - முத்தம்மா
- கே. ஏ. தங்கவேலு - சிங்காரம் பிள்ளை
- நீலு - வக்கீல், குண்டு குஞ்சுமணி ஐயர்
- மேஜர் சுந்தரராஜன் - ராமலிங்கம் பிள்ளை
- சுகுமாரி - பெண்கள் விடுதி பணியாளர்
- எஸ். என். லட்சுமி - பெண்கள் விடுதி பணியாளர்
- சி. ஆர். பார்த்திபன்[4]
பாடல்கள்
வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டது. 'உன்னிடம் மயங்குகிறேன்' எனும் பாடல் கே. ஜே. யேசுதாஸ் அவர்களால் பாடப்பட்ட பிரபலமான பாடலாகும்.[5] மேலும் இப்பாடலுக்கு இளையராஜா அவர்கள் கிடார் வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.[6] நடிகை மனோரமா அவர்களும் இப்படத்தில் 'வா வா குட்டப்பா' எனும் பாடல் பாடியுள்ளார்.
'எழுதாத பாடல் ஒன்று' என்று தொடங்குற பாடல் காட்சியை ஊட்டி பொட்டானிகல் கார்டனில் படமாக்கப்பட்டது. சலீம்தான் நடன ஆசிரியர் என்றாலும், கமல்தான் இந்தப் பாடலுக்கு நடனம் உருவாக்கி ராணிசந்திராவுடன் ஆடினார். அடிப்படையில் கமலும் நடன ஆசிரியர் என்பதால், மூன்று நாள் எடுக்க வேண்டிய பாடலை வேகமாக படமாக்கி ஒன்றரை நாளிலேயே முடித்தார்.[7]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "உன்னிடம் மயங்குகிறேன்" | கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 04:43 |
2 | "வா வா குட்டப்பா" | மனோரமா | 03:42 | |
3 | "எழுதாத பாடல்" | டி. எம். சௌந்தரராஜன், கே.சுவர்ணா | 04:08 | |
4 | "இயற்கை எழில் கொஞ்சுகின்ற" | பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ "தேன் சிந்துதே வானம்". vravi coumar. 5 சனவரி 2020. https://youtube.com/watch?v=EGQKN6oBeZU. பார்த்த நாள்: 1 September 2020.
- ↑ 2.0 2.1 "சிவகுமார் பற்றி நடிகைகள் !". தினமணி. 8 நவம்பர் 2016. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/nov/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--2593116.html. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2020.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021.
- ↑ "'ஜாக்ஸன் துரை'யாக நடித்த பழம்பெரும் திரைப்பட நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைவு". இந்து தமிழ். 26 சனவரி 2021. https://www.hindutamil.in/amp/news/todays-paper/tnadu/625995-.html. பார்த்த நாள்: 21 மே 2021.
- ↑ "50 ஆயிரம் பாடல்.... ‛காந்த குரலோன் யேசுதாஸ் : மோடி பிறந்தநாள் வாழ்த்து". தினமலர். 10 சனவரி 2020. https://dinamalar.com/cinema_detail.php?id=84711. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "இளையராஜா கிடார் வாசித்த பாடல்". குங்குமம். 25 மார்ச் 2013 இம் மூலத்தில் இருந்து 2021-05-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210521104941/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5112&id1=67&issue=20130325. பார்த்த நாள்: 21 மே 2021.
- ↑ "கமலின் எக்ஸ்பிரஸ் வேகம்!". குங்குமம். 21 சனவரி 2013. http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=4766&id1=3&issue=20130121. பார்த்த நாள்: 22 மே 2021.