ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)

ஸ்ரீகாந்த் (Srikanth, மார்ச் 19, 1940 -அக்டோபர் 12, 2021) 1960களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.[1] நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர்,[2] திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிசெய்தார்.[3] இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.[4]

ஸ்ரீகாந்த்
பிறப்புராஜா வெங்கட்ராமன்
(1940-03-19)19 மார்ச்சு 1940
ஈரோடு, தமிழ்நாடு
இறப்புஅக்டோபர் 12, 2021(2021-10-12) (அகவை 81)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965–2009
பிள்ளைகள்1

நடித்த சில திரைப்படங்கள்

ஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வருவன:

மறைவு

உடல்நலக் குறைவு காரணமாக இவர், சென்னையில் 2021 அக்டோபர் 12 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்