வெண்ணிற ஆடை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெண்ணிற ஆடை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா
கதைஸ்ரீதர்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஸ்ரீகாந்த்
ஜெயலலிதா
வெளியீடுஏப்ரல் 14, 1965
நீளம்5140 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெண்ணிற ஆடை (Vennira Aadai) 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று தமிழில் வெளிவந்த முக்கோண காதல் திரைப்படமாகும்.[1] ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2]

இப்படமே ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படமாகும். இப்படத்தில் முதலில் தோன்றியதால் நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்றும் மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தி என்றும் அறியப்பட்டனர்.

கதைச்சுருக்கம்

பள்ளி மாணவி ஒருவருக்கு விடலைப்பருவத்திலேயே திருமணம் நடந்துவிடுகிறது. அவரது கணவன் ஒரு நேர்ச்சியில் இறந்துவிடுகிறான். கணவன் இறந்த அதிர்ச்சியில் அவளது மனநிலை பாதிக்கப்படுகிறது. அவளுக்கு மருத்துவம்பார்க்கும் மருத்துவரை அவள் காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் அந்த மருத்துவர் ஏற்கனவே வேரொரு பெண்ணைக் காதலித்துவருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை முடிவு.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வெண்ணிற_ஆடை&oldid=37778" இருந்து மீள்விக்கப்பட்டது