வைரம் (திரைப்படம்)
வைரம் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | விஜயா அண்ட் சூரி கம்பைன்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | மே 24, 1974 |
நீளம் | 4363 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வைரம் (Vairam) 1974 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அதிரடி உளவுத் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கிய, டி. கே. பாலு எழுதிய,இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா ஆகியோர் நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு, எஸ். ஏ. அசோகன், ஆர். எஸ். மனோகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 இல் வெளியான விக்டோரியா நெம்பர் 203 என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இப்படம் 1974 மே 24 அன்று வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.[1][2]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "இரு மாங்கனி போல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜெயலலிதா | 03:13 | |
2. | "இரவு முழுதும் விருந்து" | எம். ஆர். விஜயா | 04:51 | |
3. | "பார்த்தேன் ஒரு அழகி" | டி. எம். சௌந்தரராஜன் | 04:48 | |
4. | "தானா கிடச்சதய்யா (இது சாவி)" | கோவை சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
வரவேற்பு
கல்கி கந்தன் இப்படத்தை அசல் இந்தித் திரைப்படத்துடன் சாதகமற்ற முறையில் ஒப்பிட்டார்.[4]
தாக்கம்
அரசியலில் ஜெயலலிதாவின் எதிரிகள், இவரது பிம்பத்தை களங்கப்படுத்த இப்படத்திலிருந்து ஜெயலலிதாவின் குத்துப்பாட்டு நடனக் கலைஞராகக் காட்டும் ஒரு படத்தை வெளியிட்டனர்.[5]
மேற்கோள்கள்
- ↑ "வைரம் / Vairam (1974)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "Jayalalithaa The Actress 'Hated' The limelight, But Starred In Over 140 Films". NDTV. 6 December 2016. Archived from the original on 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
- ↑ "Vairam Tamil Film EP Vinyl Record by T R Papa". Macsendisk. Archived from the original on 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑
- ↑ Dickey, Sara (2005). Living Pictures: Perspectives on the Film Poster in India. Open Editions. pp. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-949004-15-4.