ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்)
ஆட்டுக்கார அலமேலு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி என இரண்டு மொழியிலும் மீண்டும் படமாக்கப்பட்டது. தெலுங்கு மொழியில் கொட்டேலு பொன்னம்மா என்ற பெயரில் எடுத்தபோது அதில் ஸ்ரீபிரியா நடித்தார்.[1]
ஆட்டுக்கார அலமேலு | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவகுமார் ஸ்ரீபிரியா |
வெளியீடு | நவம்பர் 10, 1977 |
நீளம் | 4132 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவகுமார் - விஜய்
- ஸ்ரீப்ரியா - அலமேலு
- ஜெய்கணேஷ் - பாலு
- சுருளி ராஜன் - வேலு
- எஸ். ஏ. அசோகன் - தர்மலிங்கம்
- கவிதா - ராதா
- மேஜர் சுந்தரராஜன் - ஆறுமுகம்
- தேங்காய் சீனிவாசன் - "நாட்டு வைத்தியர்" நல்லமுத்து
- நாகேஷ் - வரதாச்சாரி
- ஜெயமாலினி -
துணுக்குகள்
- 25 வாரங்கள் தொடர்ந்து திரையிடப்பட்ட சாதனையைப் பெற்றது இத்திரைப்படம்.
மேற்கோள்கள்
- ↑ "ஆட்டுக்கார அலமேலு படத்தின் கதாநாயகியாக ஸ்ரீபிரியாதான் நடிக்க வேண்டும் - தேவர் கண்டிப்பு". மாலை மலர். 28 செப்டம்பர் 2018. https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2018/09/28211332/1194472/cinima-history-sripriya.vpf. பார்த்த நாள்: 2 அக்டோபர் 2020.