நியாயங்கள் ஜெயிக்கட்டும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நியாயங்கள் ஜெயிக்கட்டும்
இயக்கம்சிவசந்திரன்[1]
கதைசிவசந்திரன்[2]
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
இலட்சுமி
ஐசுவரியா
கலையகம்கவிதா சித்ரா பிலிம்ஸ்[1]
வெளியீடு1 சூன் 1990 (1990-06-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நியாயங்கள் ஜெயிக்கட்டும் (Nyayangal Jayikkattum) என்பது 1990ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சிவசந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தில் சிவகுமார், லட்சுமி , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்தனர். இது 1990 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது.

கதை

சத்யபாரதி, தமிழ்கண்ணன் ஆகிய இரண்டு அரசியல்வாதிகளுக்கு இடையிலான பகையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நடிப்பு

தயாரிப்பு

நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்பது ஐஸ்வர்யாவின் முதல் தமிழ் படம் ஆகும்.[3] இதற்கு முதலில் பெத்தவங்க மத்தவங்க என்று பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் பெயர் மாற்றப்பட்டது.[4]

இசை

இப்படத்திற்கு சங்கர் -கணேஷ் இசையமைக்க, பாடல்களை வாலி எழுதினார்.[5]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "யானைகட்டி"  மனோ, பி. சுசீலா, சித்ரா 4:36
2. "காகங்கள் பறந்தாலும்"  கே. ஜே. யேசுதாஸ் 4:18
3. "மோகம்போ மோகம்போ"  வாணி ஜெயராம் 4:41
4. "புதுமுகம் பூமுகம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:16

வெளியீடும், வரவேற்பும்

நியாயங்கள் ஜெயிக்கட்டும் 1990 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது. தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என்.கிருஷ்ணசாமி எழுதிய விமர்சனத்தில், "சிவச்சந்திரனின் திரைக்கதை பார்வையாளர்களை திரைப்படத்தில் ஒன்றுபடவைத்து அதன் கதாபாத்திரங்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறது."

குறிப்புகள்

  1. 1.0 1.1 "நியாயங்கள் ஜெயிக்கட்டும் - 1990 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்". Protamil. Archived from the original on 17 December 2019. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  2. Krishnaswamy, N. (8 June 1990). "Nyayangal Jayikkattum". இந்தியன் எக்சுபிரசு: p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900608&printsec=frontpage&hl=en. 
  3. தீனதயாளன், பா. (12 September 2015). "சூப்பர் ஸ்டார்களின் கதாநாயகி!". The Hindu (Tamil). https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/58903-.html. 
  4. ""அந்தத் துணிச்சல்தான் 'அம்மு'!"". ஆனந்த விகடன். 11 December 2014. https://www.vikatan.com/oddities/miscellaneous/101571-. 
  5. "Nayangal [sic] Jeyikattum (1990)". Raaga.com. Archived from the original on 17 December 2019. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.

வெளி இணைப்புகள்