பழனி திகாம்பரம்
பழனி திகாம்பரம் Palani Digambaram | |
---|---|
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 2020 | |
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – ஆகத்து 2015 | |
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் | |
பதவியில் 21 ஆகத்து 2014 – 10 டிசம்பர் 2014 | |
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
மத்திய மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
பின்னவர் | ஜி. எம். எம். பியசிறி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சனவரி 1967 |
அரசியல் கட்சி | தொழிலாளர் தேசிய சங்கம் |
இனம் | மலையகத் தமிழர் |
எஸ். உடையப்பன் பழனி அழகன் திகாம்பரம் (S. Udeiappan Palani Alagan Digambaram, பிறப்பு: 10 சனவரி 1967)[1] என்பவர் இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார்.
திகாம்பரம் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும், தொழிலாளர் தேசிய சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார்.[2][3]
திகாம்பரம் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு மத்திய மாகாண சபைக்குத் தெரிவானார்.[4] இவர் 2009 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]
2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[6][7] தேசியப் பட்டியல் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக திகாம்பரம் அக்கூட்டணியில் இருந்து 2010 ஏப்ரல் 22 இல் விலகினார்.[8] திகாம்பரம் பின்னர் எக்கூட்டணியிலும் சேராமல் சுயேட்சையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.[9]
2014 ஆகத்து 21 இல் இவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10][11] பின்னர் 2014 டிசம்பர் 10 இல் ஆளும் கூட்டணியில் இருந்து விலகி 2-015 அரசுதலைவர் தேர்தலில் பொது எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.[12][13] தேர்தலின் பின்னர் புதிய அரசுத்தலைவர் சிறிசேன இவரை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நியமித்தார்.[14][15]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 105,528 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[16][17][18] 2015 செப்டம்பர் 4 அன்று மைத்திரிபால சிறிசேனவின் அரசில் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[19][20] [21]
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: Thigambaram, Palany". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3160.
- ↑ "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (23 ஏப்ரல் 2010). "Decline of Tamil representation outside the North and East". dbsjeyaraj.com இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713175119/http://dbsjeyaraj.com/dbsj/archives/1446.
- ↑ "Results of Provincial Council Elections 2004". இலங்கை தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/2004Provincial.pdf.
- ↑ "Preferences Nuwara Eliya". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091210040252/http://www.slelections.gov.lk/Provincial/2009/Central/district/neliyapref.pdf.
- ↑ "Parliamentary General Election - 2010 Nuwara Eliya Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்கள்ம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513034353/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Nuwara%20Eliya_pref_GE2010.pdf.
- ↑ "General Elections 2010 - Preferential Votes". சண்டேடைம்சு. 11 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf.
- ↑ Perera, Yohan (23 ஏப்ரல் 2010). "Workers Union leaves UNF". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/news/front-page-news/8813.html.
- ↑ Indrajith, Saman (23 ஏப்ரல் 2010). "NUW to back govt.". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303195043/http://www.island.lk/2010/04/23/news19.html.
- ↑ Somawardana, Melissa (21 ஆகத்து 2014). "Prabha Ganesan and Digambaran sworn in as Deputy Ministers". நியூஸ் ஃபர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213190450/http://newsfirst.lk/english/2014/08/praba-ganesan-p-digambaran-sworn-deputy-ministers/50251.
- ↑ "Two more Deputy Ministers take oaths before President in Si Lanka". Colombo Page. 21 ஆகத்து 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213220627/http://www.colombopage.com/archive_14B/Aug21_1408629270CH.php.
- ↑ Ferdinando, Shamindra (11 டிசம்பர் 2014). "Two deputy ministers quit; CWC suffers split". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213153721/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=115736.
- ↑ Srinivasan, Meera (11 டிசம்பர் 2014). "2 more MPs leave Rajapaksa government". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/2-more-mps-leave-rajapaksa-government/article6680195.ece.
- ↑ "New Cabinet ministers sworn in". டெய்லிமிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in.
- ↑ "New Cabinet takes oaths". தெ நேசன். 12 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2015.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2003-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031204130931/http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150906144228/http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in.
- 1967 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ்த் தொழிலதிபர்கள்
- இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கையின் துணை அமைச்சர்கள்
- இலங்கை மாகாண சபை அமைச்சர்கள்
- தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல்வாதிகள்
- நுவரெலியா மாவட்ட நபர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்