புலமைப்பித்தன்
புலமைப்பித்தன் | |
---|---|
பிறப்பு | ராமசாமி தேவர் அக்டோபர் 6, 1935 கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 8 செப்டம்பர் 2021 அடையாறு, சென்னை | (அகவை 85)
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர் பாடலாசிரியர் |
வாழ்க்கைத் துணை | தமிழரசி |
பிள்ளைகள் | புகழேந்தி, கண்ணகி |
புலமைப்பித்தன் (Pulamaipithan; 6 அக்டோபர் 1935 – 8 செப்டம்பர் 2021) தமிழ்க் கவிஞரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் 1968 இல் வெளியான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் நான் யார் நீ யார் என்ற பாடல் இயற்றியதில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். 1964-இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். இவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]
அரசியல் வாழ்ககை
இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2]
தமிழக அரசின் விருதுகள்
- -2001 இல் தமிழக அரசின் பெரியார் விருது
சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்
- 1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
- 1980-1981 எங்கம்மா மகாராணி
- 1988- நிறைய திரைப்படங்களுக்கு
- 1993- பத்தினிப் பெண்
மறைவு
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 செப்டம்பர் 08 அன்று தமது 85 ஆவது வயதில் மறைந்தார்.[3]
திரைப்படப் பட்டியல்
இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[4]
1960களில்
- 1968- "குடியிருந்த கோயில்"
- 1969- "அடிமைப் பெண்"
1970களில்
- 1971- "குமரிக்கோட்டம்"
- 1972- "நல்ல நேரம்"
- 1972- "இதய வீணை"
- 1972- "நான் ஏன் பிறந்தேன்"
- 1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
- 1974- "சிரித்து வாழ வேண்டும்"
- 1974- "சிவகாமியின் செல்வன்"
- 1974- "நேற்று இன்று நாளை"
- 1975- "நினைத்ததை முடிப்பவன்"
- 1975- "பல்லாண்டு வாழ்க"
- 1975- "இதயக்கனி"
- 1976- "ஊருக்கு உழைப்பவன்"
- 1976- "உழைக்கும் கரங்கள்"
- 1976- "நீதிக்கு தலைவணங்கு"
- 1976- "ரோஜாவின் ராஜா"
- 1976- "மதன மாளிகை"
- 1976- "வரப்பிரசாதம்"
- 1977- "தீபம்"
- 1978- "புண்ணிய பூமி"
- 1978- "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"
- 1978- "திரிபுரசுந்தரி"
- 1978- "சொன்னது நீதானா"
- "நாடோடி"
- 1979"ரோசாப்பூ ரவிக்கைக்காரி"
- 1979- "பூந்தளிர்"
- 1979- "கன்னிப்பருவத்திலே"
- 1979- "நீயா"
- 1979- "நீ சிரித்தால் நான் சிரிப்பேன்"
- 1979- "திசை மாறிய பறவைகள்"
- 1979- "சக்களத்தி"
1980களில்
- 1980- "காதல் கிளிகள்"
- 1980- "விஸ்வரூபம்"
- 1981- "நெஞ்சினிலே நினைவிருந்தால்"
- 1981- "சொர்க்கத்தின் திறப்பு விழா"
- 1981- "ராணுவ வீரன்"
- 1981- "சங்கர்லால்"
- 1981- "நீதி பிழைத்தது"
- "1981-"கோயில் புறா"
- 1981- "சாதிக்கொரு நீதி"
- 1981- "ஆணிவேர்"
- 1982- "இளஞ்சோடிகள்"
- 1982- "ஆட்டோ ராஜா"
- 1982- "ஊரும் உறவும்"
- 1982- "டார்லிங், டார்லிங், டார்லிங்"
- 1982- "வாலிபமே வா வா"
- 1982- "பட்டணத்து ராஜாக்கள்"
- 1982- "துணை"
- 1982- "அதிசய பிறவிகள்"
- 1982- "மஞ்சள் நிலா"
- 1983- "மெல்லப் பேசுங்கள்"
- 1983- "ஆயிரம் நிலவே வா"
- 1983- "துடிக்கும் கரங்கள்"
- 1983- "தூங்காத கண்ணின்று ஒன்று
- 1983- "முந்தானை முடிச்சு"
- 1983- "மிருதங்க சக்கரவர்த்தி"
- 1983- "சாட்சி"
- 1983- "தங்கமகன்"
- 1983- "காஷ்மீர் காதலி"
- 1984- "கடமை"
- 1984- "பௌர்ணமி அலைகள்"
- 1984- "நீங்கள் கேட்டவை"
- 1984- "குழந்தையேசு"
- 1984- "திருப்பம்"
- 1984- "வெற்றி"
- 1984- "வாழ்க்கை"
- 1984- "வீட்டுக்கு ஒரு கண்ணகி"
- 1984- "சத்தியம் நீயே"
- 1984- "குடும்பம்"
- 1984- "சிரஞ்சீவி"
- 1984- "நூறாவது நாள்"
- 1984- "24 மணி நேரம்
- 1984- "கை கொடுக்கும் கை"
- 1984- "எழுதாத சட்டங்கள்"
- 1984- "நிலவு சுடுவதில்லை"
- 1984- "ஒசை"
- 1984- "வம்ச விளக்கு"
- 1984- "தாவணிக் கனவுகள்"
- 1985- "நீதியின் மறுபக்கம்"
- 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்"
- 1985- "அமுதகானம்"
- 1985- "காக்கிசட்டை"
- 1985- "பந்தம்"
- 1985- "அன்பின் முகவரி"
- 1985- "மண்ணுக்கேத்த பொண்ணு"
- 1985- "ராஜரிஷி"
- 1985- "நான் சிகப்பு மனிதன்"
- 1985- "மங்கம்மா சபதம்"
- 1985- "நேர்மை"
- 1985- "தண்டனை"
- 1985- "மனக்கணக்கு"
- 1986- "விடிஞ்சா கல்யாணம்"
- 1986- "கண்ணத் தொறக்கணும் சாமி"
- 1986- "விடுதலை"
- 1986- "மருமகள்"
- 1986- "மனிதனின் மறுபக்கம்"
- 1986- "மௌனம் கலைகிறது"
- 1986- "வசந்த ராகம்"
- 1986- "சாதனை"
- 1986- "ஆனந்த கண்ணீர்"
- 1986- "நம்பினார் கெடுவதில்லை"
- 1986- "எனக்கு நானே நீதிபதி"
- 1986- "மிஸ்டர் பாரத்"
- 1986- "மகாசக்தி மாரியம்மன்"
- 1986- "மீண்டும் பல்லவி"
- 1986- "பன்னீர் நதிகள்"
- 1986- "கோடை மழை"
- 1987- "வைராக்கியம்"
- 1987- "குடும்பம் ஒரு கோயில்"
- 1987- "காதல் பரிசு"
- 1987- "நாயகன்"
- 1987- "சட்டம் ஒரு விளையாட்டு"
- 1987- "ஊர்க்காவலன்"
- 1987- "முப்பெரும் தேவியர்"
- 1987- "பேர் சொல்லும் பிள்ளை"
- 1987- "தாலிதானம்"
- 1988- "கலியுகம்"
- 1988- "இது நம்ம ஆளு"
- 1988- "உன்னால் முடியும் தம்பி"
- 1988- "தம்பி தங்கக் கம்பி"
- 1988- "அண்ணாநகர் முதல் தெரு"
- 1989- "சிவா"
- 1989- "திருப்புமுனை"
- 1989- "ராஜநடை"
- 1989- "ராஜா ராஜாதான்"
1990களில்
- 1990- "சீதா"
- 1990- "முதலாளி அம்மா"
- 1990- "தைமாசம் பூவாசம்"
- 1990- "அதிசயப் பிறவி"
- 1990- "பணக்காரன்"
- 1990- "வாழ்க்கைச் சக்கரம்"
- 1990- "நடிகன்"
- 1990- "மௌனம் சம்மதம்"
- 1990- "ராஜா கைய வெச்சா"
- 1990- "சிறையில் பூத்த சின்ன மலர்"
- 1991- "நான் புடிச்ச மாப்பிள்ளை"
- 1991- "அழகன்"
- 1991- "ஈரமான ரோஜாவே"
- 1991- "தந்துவிட்டேன் என்னை"
- 1991- "இதய வாசல்"
- 1992- "ஒண்ணா இருக்க கத்துக்கணும்"
- 1992- "எல்லைச்சாமி"
- 1992- "முதல் குரல்"
- 1993- "காத்திருக்க நேரமில்லை"
- 1993- "எங்க தம்பி"
- 1993- "பாரம்பரியம்"
- 1993- "உள்ளே வெளியே"
- 1993- "தர்மசீலன்"
- 1993- "தாலாட்டு"
- 1993- "வள்ளி"
- 1993- "பத்தினிப் பெண்"
- 1994- "வியட்நாம் காலனி"
- 1994- "வீட்ல விசேஷங்க"
- 1994- "அமைதிப்படை
- 1995- "தேடிவந்த ராசா"
- 1996- "ஞானப்பழம்"
- 1996- "சபாஷ்"
- 1998- "தர்மா"
- 1998- "செந்தூரம்"
- 1999- "ஊட்டி"
- 1999- "சின்னத்துரை"
2000த்தில்
- 2000- "இளையவன்"
- 2000-"பாரதி"
- 2001- "சீறிவரும் காளை"
- 2001-"காசி"
- 2001-"நந்தா"
- 2002-"ஜெயம்"
- 2006-"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி"
- 2008- "இந்திரலோகத்தில் நா. அழகப்பன்"
- 2008-"இனிவரும் காலம்"
- 2008-"நேற்று இன்று நாளை"
2010களில்
- 2013- "சித்திரையில் நிலாச்சோறு"
- 2013- "வாலிபன்"
- 2014- "தெனாலிராமன்"
- 2014- "அரிமா நம்பி"
- 2015- "எலி"
இயற்றிய சில பாடல்கள்
வரிசை எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியவர்(கள்) | இசையமைப்பாளர் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|---|
1 | 1968 | குடியிருந்த கோயில் | நான் யார் நான் யார் | டி. எம். சௌந்தரராஜன் | ம. சு. விசுவநாதன் | முதல் பாடல் | |
2 | 1969 | அடிமைப்பெண் | ஆயிரம் நிலவே வா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | கே. வி. மகாதேவன் | ||
3 | 1972 | நல்ல நேரம் | ஓடி ஓடி உழைக்கணும் | டி. எம். சௌந்தரராஜன் | கே. வி. மகாதேவன் | ||
4 | 1973 | உலகம் சுற்றும் வாலிபன் | சிரித்து வாழ வேண்டும் | டி. எம். சௌந்தரராஜன் | ம. சு. விசுவநாதன் | ||
5 | 1974 | நேற்று இன்று நாளை | பாடும்போது நான் தென்றல் காற்று | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ம. சு. விசுவநாதன் | ||
6 | 1979 | கன்னிப்பருவத்திலே | பட்டு வண்ண ரோசாவாம் | மலேசியா வாசுதேவன் | சங்கர் கணேஷ் | ||
7 | 1979 | ரோசாப்பூ ரவிக்கைக்காரி | உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | இளையராஜா |
மேற்கோள்கள்
- ↑ Anusha Parthasarathy (December 28, 2010). "Memories of Madras - Sands of time". The Hindu. http://www.thehindu.com/arts/history-and-culture/article1011305.ece. பார்த்த நாள்: February 19, 2012.
- ↑ https://tamil.oneindia.com/news/2008/02/13/tn-mgr-was-threatened-rajiv-gandhi-pulamaipithan.html
- ↑ "கவிஞா் புலமைப்பித்தன் காலமானார்". https://www.dinamani.com/tamilnadu/2021/sep/08/the-poet-pulamaipithan-passed-away-3695580.html. தினமணி (செப்டம்பர் 08, 2021)
- ↑ "Pulamaipithan" இம் மூலத்தில் இருந்து ஜனவரி 15, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120115044201/http://tfmpage.com/my/lyricist/pulamaipithan.txt. பார்த்த நாள்: March 1, 2012.