தூங்காத கண்ணின்று ஒன்று

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தூங்காத கண்ணின்று ஒன்று
சுவரொட்டி
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புகே. கோபிநாதன்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமோகன்
அம்பிகா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புஏ. செல்வநாதன்
கலையகம்பகவதி கிரியேசன்ஸ்
வெளியீடு4 பெப்ரவரி 1983 (1983-02-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தூங்காத கண்ணின்று ஒன்று (Thoongatha Kannindru Ondru) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் [1] இயக்கிய இப்படத்தை கே. கோபிநாதன் தயாரித்தார். இப்படத்தில் மோகன், அம்பிகா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சேகர் மற்றும் பலரும் நடித்தனர்.[2][3]

நடிகர்கள்

பின்னணிக் குரல்

இப்படத்தில் நடிகர் மோகனுக்கு எஸ். என். சுரேந்தர் பின்னணி பேசியிருந்தார்.[4]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[5][6] பாடல் வரிகளை முத்துலிங்கம், அ. மருதகாசி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றினர்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்/கள் நீளம்
1. "நீ அழைத்தது போல்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:09
2. "ஆடி வெள்ளம்"  அ. மருதகாசிமலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:31
3. "இதயவாசல்"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:32
4. "மழைவிழும்"  முத்துலிங்கம்கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:03
மொத்த நீளம்:
18:15

வெளியீடும் வரவேற்பும்

கல்கி இதழின் விமர்சகர் திரைஞானம், "இத்திரைப்படத் தலைப்பை உச்சரிப்பதில் உள்ள சிரமம் பார்ப்பதிலும் உண்டு" என்று எழுதியிருந்தார்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தூங்காத_கண்ணின்று_ஒன்று&oldid=34268" இருந்து மீள்விக்கப்பட்டது