மெல்லத் திறந்தது கதவு
Jump to navigation
Jump to search
மெல்லத் திறந்தது கதவு | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | ம. சு. விசுவநாதன் இளையராஜா |
நடிப்பு | மோகன் ராதா அமலா விசு நம்பியார் செந்தில் குண்டு கல்யாணம் சார்லி |
ஒளிப்பதிவு | ராஜ ராஜன் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
விநியோகம் | எவிஎம் தயாரிப்புக்கள் |
வெளியீடு | 12 செப்டெம்பர் 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மெல்லத் திறந்தது கதவு (Mella Thirandhathu Kadhavu) 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்க மோகன், ராதா, அமலா மற்றும் செந்தில் போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.[1]
இத்திரைப்படத்திற்கு இளையராஜாவும் எம். எஸ் விஸ்வநாதனும் இணைந்து இசை அமைத்தனர். இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் மற்றும் விஷ்வதுளசி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தனர்.
நடிப்பு
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
மோகன் | சுப்ரமணி |
ராதா | துளசி |
விசு | துளசியின் தந்தை |
செந்தில் | விசுவின் துணை உதவியாளர் |
அமலா | நூர்யஹான் |
எம். என். நம்பியார் | ஹிந்தி ஆசிரியரும் நூர்யஹானின் தந்தையும் |
சார்லி | சுப்ரமணியின் நண்பன் |
குண்டு கல்யாணம் | சுப்ரமணியின் நண்பன் |
இசை
பாடல்கள்[2] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர் (கள்) | நீளம் | ||||||
1. | "வா வெண்ணிலா" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4.39 | ||||||
2. | "தேடும் கண் பார்வை" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4.43 | ||||||
3. | "தில் தில் தில் மனதில்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 4.41 | ||||||
4. | "குழலூதும் கண்ணனுக்கு" | வாலி | சித்ரா | 4.38 | ||||||
5. | "ஊரு சனம்" | கங்கை அமரன் | எஸ். ஜானகி | 4.38 | ||||||
6. | "சக்கர கட்டிக்கு" | கங்கை அமரன் | சித்ரா, எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா | 5.18 | ||||||
7. | "வா வெண்ணிலா" | வாலி | எஸ். ஜானகி | 2.8 |
மேற்கோள்கள்
- ↑ "cinesouth" இம் மூலத்தில் இருந்து மார்ச் 10, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120310091628/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mella%20thirandhadhu%20kadhavu. பார்த்த நாள்: March 21, 2012.
- ↑ "Mella Thirandhathu Kadhavu songs". http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000097. பார்த்த நாள்: March 21, 2012.