என். கே. விசுவநாதன்

என். கே. விஸ்வநாதன் (N. K. Vishwanathan, இறப்பு 25 மார்ச் 2017) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் பணியாற்றியவர். [2] [3] 1980 களில் தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்கிய பின்னர், திரைப்பட இயக்குநராக கிளைத்து 1990 களில் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கினார்.

என். கே. விஸ்வநாதன்
பிறப்பு(1941-04-23)23 ஏப்ரல் 1941
இறப்புஏப்ரல் 25, 2017(2017-04-25) (அகவை 76)[1]
பணிஇயக்குநர், ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1978-2017

தொழில்

விஸ்வநாதன் 1970 களில் இருந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முக்கியமாக ராம நாராயணன் இயக்கிய படங்களில் பணியாற்றினார். மேலும் சட்டம் என் கையில் (1978) படத்தில் முதல் முதலில் நடிக்க நடிகர் சத்தியராஜை பரிந்துரைத்து உதவினார்.[4] படத்தின் இயக்குனர் டி. என். பாலு படப்பிடிப்பின் போது இறந்தபோது கமல்ஹாசனின் வற்புறுத்தலின் பேரில், சங்கர்லால் (1981) படத்தை இயக்கினார். [5] 1990 களில் குடும்ப நாடகப் படங்களில் பணிபுரிந்த இவர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.

2000 களின் முற்பகுதியில், ஒளிப்பதிவாளராக பல பக்தி படங்களில் பணியாற்றிய இவர், சிஜிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றிய தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.[6] விஸ்வநாதன் 1978 ஆம் ஆண்டய ஜகன்மோகினி படத்தின் மறு தயாரிப்பான ஜெகன்மோகினி (2009) படத்தை இயக்கினார், நமீதாவும், நிலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வெளியீட்டிற்கு முன்னர் கவனத்தை உருவாக்கிய போதிலும், இது கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. [7] [8]

இறப்பு

மாரடைப்பு காரணமாக இவர் 25 ஏப்ரல் 2017 அன்று இறந்தார். [9]

திரைப்படவியல்

இயக்குநராக

ஆண்டு படம் குறிப்புகள்
1990 பெரியவீட்டுப் பண்ணக்காரன்
1990 இணைந்த கைகள்
1992 நாடோடிப் பாட்டுக்காரன்
1993 பொறந்தாலும் அம்பளையா பொறக்கக் கூடாது
1994 பொண்டாட்டியே தெய்வம்
1994 புதுப்பட்டி பொன்னுதாயி
1994 பெரிய மருது
1995 வாரார் சண்டியர்
1996 புருஷன் பொண்டட்டி சிறந்த படத்திற்கான தமிழக மாநில அரசின் திரைப்பட விருது (3 வது பரிசு)
2009 ஜெகன்மோகினி

ஒளிப்பதிவாளராக

மேற்கோள்கள்

  1. http://tamil.filmibeat.com/news/veteran-cinematographer-director-nk-viswanathan-passes-away-.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://spicyonion.com/director/n-k-viswanathan-movies-list/
  3. http://timesofindia.indiatimes.com/others/news-interviews/Casting-a-spell/articleshow/4978144.cms
  4. "The Hindu : Tamil Nadu News : He is still going strong". The Hindu. Archived from the original on 28 September 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  5. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/grillmill/article3022046.ece
  6. "The Hindu : Focus is on graphics". The Hindu. Archived from the original on 22 February 2002. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  7. http://www.indiaglitz.com/jaganmohini-tamil-movie-review-10320.html
  8. http://www.sify.com/movies/will-jaganmohini-revive-namithas-career-news-tamil-kkfr5Jeedjbsi.html
  9. http://cinema.dinamalar.com/tamil-news/58648/cinema/Kollywood/photographer-n.k.-viswanathan-expire.htm
"https://tamilar.wiki/index.php?title=என்._கே._விசுவநாதன்&oldid=20832" இருந்து மீள்விக்கப்பட்டது