கை கொடுக்கும் கை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கை கொடுக்கும் கை
இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புஆர், விஜயகுமார்
ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ரேவதி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடுசூன் 15, 1984
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை கொடுக்கும் கை (Kai Kodukkum Kai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில்[1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பின்புலம்

ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க நடிகர் விஜயகுமார் முடிவு செய்தார். இப்படத்திற்கு இயக்குனராக மகேந்திரன் பெயரை ரஜினிகாந்த் பரிந்துரைத்தார்.[4] இப்படம் 1975 இல் புட்டன கனகல் இயக்கிய தொகுப்பு படமான கதா சங்கமாவின் மூன்றாவது பகுதியான முனிதாயி என்பதன் நீட்டிக்கப்பட்ட ஆக்கமாகும். கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[4] கதையில் சிறு மாற்றங்களுடன் இப்படத்திற்கு மகேந்திரன் திரைக்கதையை எழுதினார். மகேந்திரனின் ஆஸ்தான குழுவான இளையராஜா, அசோக் குமார் மற்றும் படத்தொகுப்பு கலைஞர்களான பி. லெனின் - வி. டி. விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[சான்று தேவை] மாலைமலர் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் ரஜினிகாந்தின் ஜோடி மானபங்கப்படுத்தப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் படத்தின் கிளைமாக்ஸ் தனக்கு பிடிக்கவில்லை என்று விஜயகுமார் கூறியிருந்தார். ஆனால் கிளைமாக்ஸை மாற்ற மகேந்திரன் விரும்பவில்லை.[5]

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினர்.[4][6]

எண் பாடல் பாடியவர்கள் வரிகள் நீளம்
1 "ஆத்தா பெத்தாலே" மலேசியா வாசுதேவன் வாலி 04:28
2 "கண்ணுக்குள்ளே யாரோ" எஸ். பி. சைலஜா, பி. சுசீலா நா. காமராசன் 04:20
3 "தாழம் பூவே வாசம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:13
4 "பாத்தா படிச்சபுள்ள" எஸ். ஜானகி, சாய்பாபா கங்கை அமரன் 04:08

ஆதாரங்கள்

வார்ப்புரு:மகேந்திரன்

"https://tamilar.wiki/index.php?title=கை_கொடுக்கும்_கை&oldid=32552" இருந்து மீள்விக்கப்பட்டது