கன்னிப்பருவத்திலே
கன்னிப் பருவத்திலே | |
---|---|
ஒலிப்பேழை அட்டை | |
இயக்கம் | பி. ஏ. பாலகுரு |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
திரைக்கதை | பாக்கியராஜ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜேஷ் பாக்கியராஜ் வடிவுக்கரசி |
வெளியீடு | செப்டம்பர் 21, 1979 |
நீளம் | 3891 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கன்னிப் பருவத்திலே என்பது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] படத்திற்கான கதையை வைரவன் எழுத, திரைக்கதையை பாக்யராஜ் எழுதினார்.[2] இது கிராமத்து சல்லிக்கட்டு நிகழ்வில் காளையை அடக்கச் சென்று காயப்பட்டதால் ஆண்மையை இழந்த கணவன் (ராஜேஷ்) மற்றும் அவனது மனைவி (வடிவுக்கரசி) பற்றிய படம். சமூகத்தின் அன்றாட அழுத்தங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பெண்ணுடன் (வடிவுகரசி) திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை விரும்பும் மற்றொரு ஆணைச் (பாக்யராஜ்) சுற்றி கதை சுழல்கிறது.
நடிகர்கள்
- இராஜேஷ் - சுப்பய்யா
- பாக்யராஜ் - சீனு
- வடிவுக்கரசி - கண்ணம்மா
- ஜி. சீனிவாசன்
- முத்துபாரதி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன் முத்துபாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஆவாரம் பூமேனி" | எஸ். ஜானகி | |||
2. | "பட்டுவண்ண ரோசாவாம்" (ஆண்குரல்) | புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் | ||
3. | "நடைய மாத்து" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | |||
4. | "பட்டுவண்ண ரோசாவாம்" (பெண்குரல்) | புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | ||
5. | "அடி அம்மாடி" | எஸ். ஜானகி |
வரவேற்ப்பு
கல்கியின் கௌசிகன், தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் முந்தைய படங்களான 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகியவை நிகழ்த்திய மாயாஜலத்தை மீண்டும் உருவாக்கத் தவறியதாகக் விமர்சித்தார்.[5]
மேற்கோள்கள்
- ↑ Ashok Kumar, S. R. (18 March 2005). "Veteran on a rewind". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 May 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050504130630/http://www.hindu.com/fr/2005/03/18/stories/2005031800540400.htm.
- ↑ "'நடையை மாத்து உன் நடையை மாத்து'; 'பட்டுவண்ண ரோசாவாம்..'; பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசியின் 'கன்னிப்பருவத்திலே' – 41 ஆண்டுகளாகியும் மறக்கமுடியாத ஹிட் லிஸ்ட் படம்!" (in ta). 21 September 2020 இம் மூலத்தில் இருந்து 3 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201003012710/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/581567-kanniparuvathile.html.
- ↑ "Kanni Paruvathile" இம் மூலத்தில் இருந்து 3 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131003015439/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001305.
- ↑ "Kanni Paruvathile" இம் மூலத்தில் இருந்து 13 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210913094305/https://isaishop.com/item/kanni-paruvathile.
- ↑