நந்தா (திரைப்படம்)
நந்தா | |
---|---|
இயக்கம் | பாலா |
தயாரிப்பு | கணேஷ் ரகு, கார்த்திக் ராதாகிருஷ்ணன், வெங்கி நாராயணன், ராஜன் ராதாகிருஷ்ணன் |
கதை | பாலா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா லைலா ராஜ்கிரன் சரவணன் ராஜஸ்ரீ கருணாஸ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 300 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நந்தா(Nandha) 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாலா எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.[1] சூர்யா,[2] லைலா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வகை
நாடகப்படம்
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடு செல்கின்றான். ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே,தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான். அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.
பாடல்கள்
- ஒராயிரம் யானை கொண்றால் பரணி
- எங்கெங்கோ எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் -
- கள்ளி அடி கள்ளி
- முன் பனியா
- அம்மா என்றாலே
மேற்கோள்கள்
- ↑ "Nandha - audiocassette released" இம் மூலத்தில் இருந்து 6 November 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011106221441/http://www.chennaionline.com/eevents/nanda.asp.
- ↑ "All conquering Nandaa". The Hindu. 13 June 2002 இம் மூலத்தில் இருந்து 17 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201017030713/https://www.thehindu.com/todays-paper/tp-life/all-conquering-nandaa/article28601266.ece.