ஊருக்கு உழைப்பவன்
ஊருக்கு உழைப்பவன் Oorukku Uzhaippavan | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | எஸ். கிருஷ்ணமூர்த்தி வீனஸ் பிக்சர்ஸ் டி. கோவிந்தராஜ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் வாணிஸ்ரீ |
வெளியீடு | நவம்பர் 11, 1976 |
நீளம் | 4539 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஊருக்கு உழைப்பவன் (Oorukku Uzhaippavan) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எம். கிருஷ்ணன் எழுதி இயக்கினார். வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1970 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பாலு பெளகித்து படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 12 நவம்பர் 1976 இல் வெளியிடப்பட்டது.[2][3]
கதை
இரகசிய உளவாளி செல்வம். சில காரணங்களினால் அவரைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பணக்கார தொழிலதிபரான இராஜாவைப் போலவே நடிக்கிறார். இதனால் செல்வம் தன்வீட்டையும் இராஜாவின் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். தன் சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து இராஜாவின் சிக்கல்களை செல்வம் எப்படி தீர்க்கிறார் என்பதே கதை.
நடிகர்கள்
- செல்வம் மற்றும் இராஜாவாக ம. கோ. இராமச்சந்திரன்
- மல்லிகாவாக வாணிஸ்ரீ
- காஞ்சனாவாக வெண்ணிற ஆடை நிர்மலா
- மல்லிகாவின் தாயாக எம். என். ராஜம்
- குமுதா மற்றும் ராதா என்ற ரீட்டாவாக குமாரி பத்மினி
- ராஜாவின் மகள் இராணியாக குழந்தை நட்ச்சத்திரம் ராஜகுமாரி
- செல்வத்தின் உதவியாளர் பாண்டுரங்கன் ஜேம்ஸ்பாண்ட்டாக தேங்காய் சீனிவாசன்
- காவல் ஆய்வாளராக வி. கோபாலகிருட்டிணன்
- நாகப்பனாக பி. எஸ். வீரப்பா
- மாலிகாவின் தந்தை ராஜவேலுவாக கே. கண்ணன்
- கூலியாளாக எம். பி. செட்டி
- குப்பத்துப் பெண்ணாக சண்முகசுந்தரி
- கரிகோல் ராஜு
தயாரிப்பு
ஊருக்கு உழைப்பவன் கர்நாடகத்தின் மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[4]
இசை
இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[5]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "இதுதான் முதல் இராத்திரி" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 4:27 | |
2. | "இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்" | கே. ஜே. யேசுதாஸ் | 2:13 | |
3. | "இட்ஸ் ஈசி டு ஃபூல் யூ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உஷா உதூப் | 5:21 | |
4. | "இரவுப் பாடகன் ஒருவன்" (மறுமுறை) | கே. ஜே. யேசுதாஸ் | 2:13 | |
5. | "அழகெனும் ஓவியம் இங்கே" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | 3:02 | |
6. | "இரவுப் பாடகன் ஒருவன்" (மறுமுறை) | கே. ஜே. யேசுதாஸ், வாணிஸ்ரீ (உரையாடல்) | 2:13 | |
7. | "இரவுப் பாடகன் ஒருவன்" (இசைக்கருவி) | — | 2:13 | |
8. | "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" | கே. ஜே. யேசுதாஸ் | 3:29 |
வரவேற்பு =
கல்கியின் காந்தன் நடிகர்கள், பாடல்கள், ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.[6]
மேற்கோள்கள்
- ↑ "Dr Rajkumar's 91st birth anniversary: 12 films of the actor that were released in 1970 and so complete 50 years this year". 24 April 2020. slide 10. https://www.cinemaexpress.com/photos/slideshows/2020/apr/24/dr-rajkumars-91st-birth-anniversary-12-films-of-the-actor-that-were-released-in-1970-and-so-comple-1010--10.html.
- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்" (in ta). 2 April 2011 இம் மூலத்தில் இருந்து 14 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181114041813/http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Cinema.jsp.
- ↑ Sachi Sri Kantha (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s" இம் மூலத்தில் இருந்து 31 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201031005730/https://sangam.org/mgr-remembered-part-54/.
- ↑ சுவாமிநாதன், ஸ்ரீதர் (5 March 2016). "எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!" (in ta). இந்து தமிழ் (நாளிதழ்) இம் மூலத்தில் இருந்து 10 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211210083624/https://www.hindutamil.in/news/blogs/74553-100-15.html.
- ↑ "Oorukku Uzhaippavan". 31 December 1976 இம் மூலத்தில் இருந்து 10 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211210083622/https://www.jiosaavn.com/album/oorukku-uzhaippavan/PGIQQrAK4EI_.
- ↑