செந்தாமரை (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செந்தாமரை
பிறப்புகல்யாணராமன் செந்தாமரை
(1935-04-13)13 ஏப்ரல் 1935
காஞ்சிபுரம்
இறப்பு14 ஆகத்து 1992(1992-08-14) (அகவை 57)
தேசியம்இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1957–1990
குறிப்பிடத்தக்க படைப்புகள்தூறல் நின்னு போச்சு
மூன்று முகம்
மலையூர் மம்பட்டியான்
தம்பிக்கு எந்த ஊரு
பெற்றோர்தந்தை : திருவேங்கடம்
தாயார் : வேதம்மாள்
வாழ்க்கைத்
துணை
கௌசல்யா செந்தாமரை

செந்தாமரை (Senthamarai) என்பவர் இந்திய மேடை நாடக, திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படங்களில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் ஐம்பது ஆண்டுகளாக நடித்துள்ளார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், இரசினிகாந்து, பாக்யராஜ், தியராஜன் ஆகியோருடன் செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். மலையூர் மம்பட்டியான் மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டு ராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

செந்தாமரை 1935 ஏப்ரல் 13 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார்.[1] இவரது குடும்பத்தில் இவரது தந்தை திருவேங்கடம், தாயார் வேதம்மாள், சகோதரர் கமலக்கண்ணன் ஆகியோர் அடங்குவர்.[2] செந்தாமரையின் ஏழு வயதில் திருவேங்கடம் இறந்தார். செந்தாமரை சிவாஜி கணேசன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரனுடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார்.[3][4]

முன்னணி பாத்திரத்தில்

1980 களில் இவர் முக்கியமாக வில்லத்தனமான வேடங்களில் நடித்தார், அந்தக் காலத்தின் பல முன்னணி நடிகர்களுக்கு எதிர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். அந்த ஜூன் 16-ஆம் நாள் (1984) திரைப்படத்தில் இவர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார்.

குடும்பம்

தற்போது தமிழ் தொடர்களில் நடித்துவரும் கௌசல்யா என்பவரை செந்தாமரை மணந்தார்.[3][5]

இறப்பு

கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் 1992 ஆகத்து 14 அன்று இறந்தார்.[6]

திரைப்படவியல்

1950 கள்

ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
1957 மாயாபஜர்
1958 மாலையிட்ட மங்கை
1959 நல்ல தீர்ப்பு
1959 வண்ணக்கிளி

1960 கள்

ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
1960 குறவஞ்சி
1961 தாய் சொல்லைத் தட்டாதே காவல் ஆய்வாளர்
1961 தாயில்லா பிள்ளை பொன்னன்
1963 நீதிக்குப்பின் பாசம் பார்வையற்றவர் / ரகசிய முகவர்
1963 இரத்தத் திலகம்
1964 தெய்வத்தாய் மருத்துவர்
1964 தொழிலாளி கணேசன்
1965 ஆசை முகம் மருத்துவர்
1967 அனுபவம் புதுமை
1967 பாலாடை
1967 நெஞ்சிருக்கும் வரை
1967 ஊட்டி வரை உறவு வீரசாமி
1967 திருவருட்செல்வர்
1968 கலாட்டா கல்யாணம் ஜம்பு
1968 தில்லானா மோகனாம்பாள் கடம்பவனம்
1969 அன்பலிப்பு வீரசாமி
1969 அக்கா தங்கை
1969 துணைவன்
1969 நில் கவனி காதலி
1969 அஞ்சல் பெட்டி 520
1969 சிவந்த மண்

1970 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1970 எங்க மாமா பாபு
1970 பாதுகாப்பு
1970 ராமன் எத்தனை ராமனடி அல்லையூர் வாலிபன்
1970 மாணவன்
1970 சொர்க்கம் காவல் ஆய்வாளர்
1970 வியட்நாம் வீடு தேவாலய பாதிரியார்
1971 அருணோதயம்
1971 இருளும் ஒளியும்
1971 சுமதி என் சுந்தரி தொடருந்து நிலைய அதிகாரி
1971 மூன்று தெய்வங்கள் காவல் அதிகாரி
1971 பாபு
1972 அன்னை அபிராமி
1972 காசேதான் கடவுளடா
1972 சக்தி லீலை
1972 திக்குத் தெரியாத காட்டில் காவல் ஆய்வாளர்
1972 பட்டிக்காடா பட்டணமா கிராமத்தான்
1972 மிஸ்டர் சம்பத்
1972 தர்மம் எங்கே
1972 தெய்வம் குமரசன்
1972 வசந்த மாளிகை ஜமீன் திவான்
1972 ஞான ஒளி காவல் அதிகாரி
1972 தவப்புதல்வன் மருத்துவர்
1972 நம்ம வீட்டு தெய்வம்
1973 அரங்கேற்றம் நடேச உடையார்
1973 கௌளரவம் ஆய்வாளர் கருணாகரன்
1973 பாரத விலாஸ் இராமமூர்த்தி
1973 சூரியகாந்தி சிறீராம்
1973 ராஜபார்ட் ரங்கதுரை கருப்பையா
1974 திருமாங்கல்யம்
1974 கடவுள் மாமா
1974 அன்பைத்தேடி
1974 வாணி ராணி வழக்கறிஞர்
1974 தாய் மகாலிங்கம்
1974 நான் அவனில்லை அரசு வழக்கறிஞர்
1974 பிராயசிர்தம்
1974 எங்கம்மா சபதம்
1975 மன்னவன் வந்தானடி
1975 ஆண்பிள்ளை சிங்கம்
1975 சினிமா பைத்தியம்
1975 பட்டாம்பூச்சி Bashyam
1976 பயணம் Prisoner
1976 துணிவே துணை நிலக்கிழார் சிங்காரம்
1976 சித்திரா பௌர்ணமி கடம்பன்
1976 ரோஜாவின் ராஜா சிங்கப்பூர் ராசப்பனின் உதவியாளர்
1976 வாழ்வு என் பக்கம்
1977 முத்தான முத்தல்லவோ
1977 நவரத்தினம் காவல் ஆய்வாளர்
1977 கவிக்குயில் சின்னையா பிள்ளை
1977 சக்கரவர்த்தி
1978 அந்தமான் காதலி மரகதம் மாமா, ஜெயிலர்
1978 சிட்டுக்குருவி
1979 கல்யாணராமன் பெருமாள்
1979 நான் வாழவைப்பேன்

1980 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 கண்ணில் தெரியும் கதைகள்
1980 பொல்லாதவன் ராமையா
1981 கழுகு காவர் ஆய்வாளர்
1981 நண்டு
1982 மெட்டி சண்முகம்
1982 தனிக்காட்டு ராஜா
1982 தூறல் நின்னு போச்சு பொன்னம்ம்பலம்
1982 அழகிய ராணி
1982 மூன்று முகம் ஏகாம்பரம்/அம்பர்
1982 டார்லிங், டார்லிங், டார்லிங்
1982 ஒரு கை பார்ப்போம்
1983 சமயபுரத்தாளே சாட்சி
1983 மலையூர் மம்பட்டியான் நிலக்கிழார் சுந்தரலிங்கம்
1983 அடுத்த வாரிசு திவான்
1983 இளமை காலங்கள்
1983 தங்கைக்கோர் கீதம்
1983 தூங்காதே தம்பி தூங்காதே தோட்ட மேலாளர்
1984 பூவிலங்கு இராஜமாணிக்கம்
1984 நான் மகான் அல்ல ஈஸ்வரன்
1984 தம்பிக்கு எந்த ஊரு கங்காதரன்
1984 நாளை உனது நாள் மரு. நாகராஜ்
1984 நீங்கள் கேட்டவை சண்டைக் கலைஞர்
1984 அன்புள்ள ரஜினிகாந்த்
1984 கொம்பேறி மூக்கன்
1985 காக்கிசட்டை
1985 அடித்தாத்த்து ஆல்பார்ட் அலெக்சாந்தர்
1985 ஸ்ரீ ராகவேந்திரா தமிழப் புலவர்
1985 நீதியின் மறுபக்கம்
1985 உன் கண்ணில் நீர் வழிந்தால் தர்மராஜ்
1985 படிக்காதவன் வழக்கறிஞர்
1986 நான் அடிமை இல்லை சங்கர்
1986 எனக்கு நானே நீதிபதி
1986 மைதிலி என்னைக் காதலி விழுந்தினர் தோற்றம்
1986 பிறந்தேன் வளர்ந்தேன்
1987 எங்க ஊரு பாட்டுக்காரன்
1987 ஒரு தாயின் சபதம்
1987 சின்னப்பூவே மெல்லப்பேசு Michael
1987 சங்கர் குரு
1987 சட்டம் ஒரு விளையாட்டு மத்தாப்பு சுந்தரம்
1987 நீதிக்குத் தண்டனை
1987 ஆயுசு நூறு
1987 கிராமத்து மின்னல்
1988 என் தங்கை கல்யாணி
1988 எங்க ஊரு காவல்காரன்
1988 வீடு
1988 மனசுக்குள் மத்தாப்பூ நாகராஜ்
1988 குரு சிஷ்யன் கந்தசாமி
1989 ராஜநடை

1990 கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 பணக்காரன் ஆறுமுகம்
1990 பெரியா வீட்டு பண்ணைக்காரன்
1990 அதிசயப் பிறவி சின்னசாமி
1990 புதுப் பாட்டு
1991 கும்பக்கரை தங்கய்யா
1991 எங்க ஊரு சிப்பாய்
1991 ருத்ரா
1992 இளவரசன்
1992 தாலி கட்டிய ராசா
1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா
1993 துருவ நாட்சத்திரம் கடைசி படம்

குறிப்புகள்

  1. "மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : செந்தாமரை" (in ta). 20 March 2020 இம் மூலத்தில் இருந்து 2020-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200430121040/https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/20155252/Characteristics-that-win-peoples-minds-Shenthamarai.vpf. 
  2. "Kollywood Movie Actor Senthamarai Biography, News, Photos, Videos" (in en). https://nettv4u.com/celebrity/tamil/movie-actor/senthamarai. 
  3. 3.0 3.1 "`` `நடிகர் செந்தாமரை, பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக் கூடாது!" - நடிகை கெளசல்யா" (in ta). https://cinema.vikatan.com/122818-actor-senthamarai-wife-kausalya-interview. 
  4. "நடிகர் செந்தாமரை பாதுகாத்த டாப் சீக்ரெட்!" (in en). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/549359-senthamarai-birthday-special-article.html. 
  5. Ajju (2018-04-21). "நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !" (in en-US). https://tamil.behindtalkies.com/actor-senthamarai-wife-kausalya-interview/. 
  6. "Senthaamarai" (in en). 16 August 2013. https://antrukandamugam.wordpress.com/2013/08/16/senthaamarai/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செந்தாமரை_(நடிகர்)&oldid=21822" இருந்து மீள்விக்கப்பட்டது