கண்ணில் தெரியும் கதைகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணில் தெரியும் கதைகள்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஏ. எல். ராகவன்[1]
ராஜ மீனாட்சி பிலிம்
இசைஇளையராஜா
சங்கர் கணேஷ்
ஜி. கே. வெங்கடேஷ்
கே. வி. மகாதேவன்
அகத்தியர்
நடிப்புசரத் பாபு
ஸ்ரீபிரியா
வெளியீடுமார்ச்சு 14, 1980
நீளம்3742 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணில் தெரியும் கதைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை தேவராஜ்-மோகன் இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தில் சரத் பாபு, வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா மற்றும் செந்தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[2]

நடிகர்கள்

கதை

வார்ப்புரு:கதைச் சுருக்கம் செந்தாமரை ஊரின் பண்ணையக்காராக இருக்கின்றார். அவர் பண்ணையார்களுக்கே உரிதான பெண்பித்தராகவும், ஏழேகளை கொடுமை செய்பவராகவும், கொடுமையான தண்டனை தரக்கூடியவராகவும் உள்ளார்.

பண்ணையாரின் மகள் நல்ல குண நலன்களை பெற்றுள்ளார். சிறுவயதில் தன்னுடன் படிக்கும் வைரம் என்ற சிறுவனின் திறமையை கண்டு அவனுடைய ரசிகையாக உள்ளார். ஆனால் பண்ணையார் வைரத்தின் தந்தையிடம் கொடுத்த கடனுக்காக வைரத்தை தன்னுடைய பண்ணைகள் ஆடு மேய்க்க கூடிய சிறுவனாக அழைத்து வந்து விடுகிறார். அதனால் வைரமும் படிப்பினை விட்டு ஆடு மேய்க்கும் தொழிலை செய்கின்றான். பள்ளிகளில் வைரம் சிறந்த மாணவனாக மதிப்பெண் எடுத்தமைக்காக பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு பேனாவினை பரிசாக அளிக்கின்றார். வைரம் பள்ளிக்கு வராத காரணத்திற்காக பண்ணையாரின் மகள் அதனை வாங்கிக் கொண்டு வந்து வைரத்திடம் தருகின்றார். அதை ஏற்க மறுக்கும் வைரம் இனி தனக்கு இந்த பேனா தேவைப்படாது எனவும் நான் ஆடு மேய்ப்பது ஆகவும் கூறி விடுகின்றார்.

ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் வைரத்தின் வயதை ஒத்த ஒரு சிறுவன் பண்ணையாறின் ஆடு ஒன்றினை தவற விட்டு விடுகிறான் அதனால் பண்ணையார் கடுமையாக அவனை தண்டிக்கின்றார். அவனுக்கு இளநீர் கேட்டுச் சென்ற வைரத்திடம் பண்ணையார் இளநீர் தர மறுத்து விடுகின்றார். அதனால் தாகம் கொண்டு அந்த சிறுவன் இறந்து விடுகின்றான். இதனால் கோபம் கொண்ட சிறுவன் வைரம் பண்ணையாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் உள்ள அனைத்து இளநீரையும் வெட்டி வீழ்த்தி விடுகிறான். பண்ணையார் நியாயம் கேட்க பஞ்சாயத்து நீ கூட்டுகின்றார் அதில் சக சிறுவர்களின் சிறுமிகளும் வைரத்தின் மீது சிறுநீர் கழித்து அவனை கேவலப்படுத்துகின்றனர். வைரத்தின் தந்தைக்கு ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படுகின்றது. வைரம் அந்த கிராமத்திலிருந்து ஓடி அருகில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைகின்றான் அங்கு நன்றாக படித்து நல்ல வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்து விட்டு மீண்டும் கிராமத்திற்கு வருகின்றான். தன்னுடன் ஆடு மேய்க்க சக சிறுமியான வள்ளி தற்பொழுது பெரியவளாக வளர்ந்திருப்பது கண்டு அவள் மேல் காதல் கொள்கின்றான். மற்றொரு பக்கம் பண்ணையாரின் மகள் இன்னும் வைரத்தினை நினைத்து அவன் மேல் ஒரு தலை காதலாகவே இருக்கின்றாள்.

நகரத்தில் நன்றாக பணம் சம்பாதித்து விட்டு வரக்கூடிய வைரம் தென்னந்தோப்பு ஏலத்தில் பண்ணையாரை விட அதிகமாக ஏலம் எடுத்து தென்னந்தோப்பை சொந்தமாகி கொள்கின்றார் ஊரில் உள்ள அனைவருக்கும் தேங்காய் விலை குறைவாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறுகின்றார். ஏழு ஊருக்கு சொந்தமான தேர் இழுக்கக்கூடிய விழாவில் அத்தனை செல்வத்தையும் தானே தருவதாக உறுதியளிக்கின்றார். இவையெல்லாம் பண்ணையாரை கோபம் கொள்ள செய்கின்றன. வைரத்தின் காதலியாக இருக்கக்கூடிய வள்ளியை தன்னுடைய பண்ணையில் வேலை செய்யும் பொழுது பண்ணையார் வன்புணர்வு செய்து விடுகிறார். அதனை அறிந்து வைரம் அவரை வெட்டப் போகையில் அவரை தடுத்து பஞ்சாயத்து கூட்டுமாறு பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

பஞ்சாயத்தை வைரம் கூட்டுவதற்கு முன்பாகவே வள்ளியை ஆற்றில் கல்லைக் கட்டி இறக்கி பண்ணையாரின் நாட்கள் கொன்று விடுகிறார்கள். அதனை அறிந்த ஊர் மக்கள் வருத்தப்படுகிறார்கள். வைரம் பண்ணையாரின் மகளை நிர்வாணமாக்கி பண்ணையாரி பார்த்து மகிழ சொல்கிறார். இதுவரை ஊரில் உள்ள பெண்களின் நிர்வாண உடலை கண்டு தன் காமவெறியை தீர்த்துக் கொண்ட பண்ணையார் மகளை நிர்வாணமாக காண கூசி நிற்கிறார். தன்னுடைய மகளை வைரத்தையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு பாறையில் இருந்து கீழே விழுந்து இறக்கின்றார். வைரமும் பண்ணையாரின் மகளும் திருமணம் செய்து கொண்டு அந்த ஊரை விட்டு ரயிலேறி செல்கின்றனர்.

படக்குழு

  • மூலக்கதை - கிருஷ்ணா ஆலனஹள்ளி
  • வசனம் - அழகாபுரி அழகப்பன், அமுதவன்
  • பாடல்கள் - கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வாசுகிநாதன்
  • பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்திரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, எஸ். ஜானகி, ஜக்கி, வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா, சசிரேகா
  • ஒப்பனை - எம். சபாபதி, சஞ்சீவி, சம்பத், உமாசங்கர்.
  • உடைகள் - ஏ. டி. கலியமூர்த்தி, சி. கே. கண்ணன்
  • நடனம் - ஏ. கே. சோப்ரா
  • படத்தொகுப்பு - டி. கிருஷ்ணா (உதவி - கே. ஜி. நரசிம்மன், துரை)
  • ஒளிப்பதிவு - மார்க்கஸ் பார்ட்லே
  • உதவி இயக்குனர் - மேலூர் கோபி, ஜெயம்கொண்டான், எம். சி. சுப்பிரமணியம்
  • இசை- சங்கர் கணேஷ், ஜி. கே. வெங்கடேஷ், இளையராஜா, கே. வி. மகாதேவன், அகத்தியர்
  • இயக்குனர் - தேவராஜ் மோகன்

பாடல்கள்

ஒலிப்பதிவு ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. கே.வி.மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஷ் , சங்கர் கணேஷ் , அகத்தியர் மற்றும் இளையராஜா ஆகியோர் தலா ஒரு பாடலுக்கு இசையமைத்தனர். மோகனம் என்று அழைக்கப்படும் கர்நாடக இராகத்தில் "நான் ஒரு பொன்னோவியம்" பாடல் அமைக்கப்பட்டுள்ளது .

பாடல் இசை பாடியவர்(கள்) வரிகள் பாடல் அளவு
"நான் ஒரு பொன்னோவியம்" இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா புலமைப்பித்தன்
"நான் உன்ன நினைச்சேன்" சங்கர் கணேஷ் [2] எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் மற்றும் ஜிக்கி வாலி
"ஒன்னு ரண்டு மூனு" அகத்தியர் எஸ். பி. சைலஜா மற்றும் பி. ௭ஸ். சசிரேகா வாசுகிநாதன்
"வேட்டைக்காரன்" கே.வி.மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
"நான் பார்த்த ரதிதேவி" ஜி.கே.வெங்கடேஷ் ஏ.எல்.ராகவன் முத்துலிங்கம்

மேற்கோள்கள்

  1. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/2787148
  2. 2.0 2.1 2.2 "'செந்தாழம் பூ முதல் 'நான் உன்ன நெனைச்சேன்' வரை - காலத்தால் அழியாத பாடல்களில் சரத்பாபு". Hindu Tamil Thisai. 22 May 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்ணில்_தெரியும்_கதைகள்&oldid=31766" இருந்து மீள்விக்கப்பட்டது