மனசுக்குள் மத்தாப்பூ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மனசுக்குள் மத்தாப்பூ
இயக்கம்ராபர்ட் - ராஜசேகர்
தயாரிப்புதக்காளி சீனிவாசன்
மூலக்கதைதலாவட்டம்
படைத்தவர் பிரியதர்சன்
திரைக்கதைராபர்ட் - ராஜசேகர்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவுராபர்ட் - ராஜசேகர்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
விநியோகம்ஒன் லான்ட் ஆர்ட்ஸ்
வெளியீடுசூன் 24, 1988 (1988-06-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனசுக்குள் மத்தாப்பூ (Manasukkul Mathappu) 1988 இல் தக்காளி சி. சீனிவாசனின் தயாரிப்பில் ராபர்ட் மற்றும் ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் பிரபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்திருந்தனர். 1986 இல் வெளிவந்த தலாவட்டம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[2] இதுவும் "ஒன் புலோ ஓவர் த குகூஸ் நெஸ்ட்" என்ற ஆங்கில புதினத்தைத் தழுவியது.[3]

கதை

தனது காதலி அனிதா (லிஸ்சி) ஒரு மின்சார விபத்து காரணமாக இறந்த பிறகு சேகருக்கு (பிரபு) மனநிலை பாதிக்கப்படுகிறது. சேகர் நாகராஜால் (செந்தாமரை) நிர்வகிக்கப்படும் ஒரு இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கே நாகராஜின் மகளான இளம் மருத்துவர் கீதா (சரண்யா பொன்வண்ணன்), மற்றும் அவரது நண்பர் ராஜா (சரத் பாபு), இருவரும் சேகருக்கு உதவுகிறார்கள். சேகர் மெதுவாக தனது பழைய நினைவுகளை மீண்டும் பெறுகிறார். சேகர் மற்றும் கீதா இருவருக்கிடையே காதல் ஏற்படுகிறது. ஆனால் நாகராஜ் ஏற்கனவே வேறொருவருடன் கீதாவின் திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார், அதனால் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். கீதா மற்றும் சேகர் பிடிவாதமாக இருப்பதை நாகராஜ் கண்டு, அவர் சேகருக்கு மூளையின் செயற் திறனை மாற்ற செய்யும் அறுவை சிகிச்சையினை (லோபோட்டோமி) மேற்கொள்கிறார். அதனால் அவர் நினைவிழப்பு (கோமா) நிலையில் செல்கிறார். ஒரு நோயாளியாக அதே இல்லத்தில் மீண்டும் அனுமதிக்கப்படுகிறார்.

நடிகர்கள்

தயாரிப்பு

மனசுக்குள் மத்தாப்பூ 1986 இல் வெளியான மலையாள "தலாவட்டம்" (1986) என்ற திரைப்படத்திலிருந்து மறு ஆக்கம் செய்யப்பட்டது. இதுவும் "ஒன் புலோ ஓவர் த குகூஸ் நெஸ்ட்" என்ற ஆங்கில புதினத்தைத் தழுவியது.[4]

ஒலித்தொகுப்பு

இப்படத்தின் இசையமைப்பு எஸ். ஏ. ராஜ்குமார்.[5]

வரவேற்பு

1988 ஜூலை 1 அன்று, இந்தியன் எக்சுபிரசு நேர்மறையான விமர்சனத்தை எழுதியது. பாடல்களும், காட்சிகளும் நன்கு படமாக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தது.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மனசுக்குள்_மத்தாப்பூ&oldid=36363" இருந்து மீள்விக்கப்பட்டது