துணைவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
துணைவன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாண்டோ சின்னப்பா தேவர்
கதைவி. பாலமுருகன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். எஸ். வர்மா
படத்தொகுப்பு
  • எம். ஜி. பாலுராவ்
  • எம். ஏ. திருமுகம்
கலையகம்தண்டாயுதபாணி பிலிம்சு
வெளியீடுசூலை 4, 1969 (1969-07-04)[1]
ஓட்டம்156 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணைவன் (Thunaivan) 1969 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் இந்து பக்தித் திரைப்படம் ஆகும். எம். ஏ. திருமுகம் இயக்கிய இத்திரைப்படத்தை சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். கே. வி. மகாதேவன் இசையில் வெளிவந்தது.[1] ஏ. வி. எம். ராஜன், சௌகார் ஜானகி ஆகியோருடன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர். முருகன் பாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2][3] இத்திரைப்படத்தில் முதல் பகுதி கருப்பு-வெள்ளையிலும், மீதிப் பகுதி ஈஸ்ட்மன் வண்ணத்திலும் தயாரிக்கப்பட்டது.[1] இதன் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. சுந்தராம்பாள் பாடிய பாடல் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.[4]

நடிகர்கள்

விருதுகள்

பாடல்கள்

கண்ணதாசன், அ. மருதகாசி ஆகியோரின் பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் புகழேந்தியின் துணையுடன் இசையமைத்திருந்தார்.[1][6]

பாடல்கள்
# பாடல்பாடியோர் நீளம்
1. "நான் யார் என்பதை"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:35
2. "கோகுலத்தில் ஒரு இரவு"  எல். ஆர். ஈஸ்வரி 03:54
3. "மருதமலை மீதிலே"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 08:39
4. "பழனிமலை மீதிலே"  கே. பி. சுந்தராம்பாள் 02:10
5. "ஞானமும் கல்வியும்"  கே. பி. சுந்தராம்பாள் 03:36
6. "அன்று நீ"  கே. பி. சுந்தராம்பாள் 01:17
7. "கூப்பிட்ட குரலுக்கு"  கே. பி. சுந்தராம்பாள் 00:51
8. "கொண்டாடும் திருச்செந்தூர்"  கே. பி. சுந்தராம்பாள் 01:22
மொத்த நீளம்:
24:04

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=துணைவன்&oldid=34226" இருந்து மீள்விக்கப்பட்டது