புலமைப்பித்தன்

புலமைப்பித்தன் (Pulamaipithan; 6 அக்டோபர் 1935 – 8 செப்டம்பர் 2021) தமிழ்க் கவிஞரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் 1968 இல் வெளியான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் நான் யார் நீ யார் என்ற பாடல் இயற்றியதில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

புலமைப்பித்தன்
புலவர் புலமைப்பித்தன்.jpg
பிறப்புராமசாமி தேவர்
(1935-10-06)அக்டோபர் 6, 1935
கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 2021(2021-09-08) (அகவை 85)
அடையாறு, சென்னை
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்
பாடலாசிரியர்
வாழ்க்கைத்
துணை
தமிழரசி
பிள்ளைகள்புகழேந்தி, கண்ணகி

வாழ்க்கைக் குறிப்பு

புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். 1964-இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். இவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]

அரசியல் வாழ்ககை

இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2]

தமிழக அரசின் விருதுகள்

சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்

  1. 1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. 1980-1981 எங்கம்மா மகாராணி
  3. 1988- நிறைய திரைப்படங்களுக்கு
  4. 1993- பத்தினிப் பெண்

மறைவு

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 செப்டம்பர் 08 அன்று தமது 85 ஆவது வயதில் மறைந்தார்.[3]

திரைப்படப் பட்டியல்

இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[4]

1960களில்

  1. 1968- "குடியிருந்த கோயில்"
  2. 1969- "அடிமைப் பெண்"

1970களில்

  1. 1971- "குமரிக்கோட்டம்"
  2. 1972- "நல்ல நேரம்"
  3. 1972- "இதய வீணை"
  4. 1972- "நான் ஏன் பிறந்தேன்"
  5. 1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
  6. 1974- "சிரித்து வாழ வேண்டும்"
  7. 1974- "சிவகாமியின் செல்வன்"
  8. 1974- "நேற்று இன்று நாளை"
  9. 1975- "நினைத்ததை முடிப்பவன்"
  10. 1975- "பல்லாண்டு வாழ்க"
  11. 1975- "இதயக்கனி"
  12. 1976- "ஊருக்கு உழைப்பவன்"
  13. 1976- "உழைக்கும் கரங்கள்"
  14. 1976- "நீதிக்கு தலைவணங்கு"
  15. 1976- "ரோஜாவின் ராஜா"
  16. 1976- "மதன மாளிகை"
  17. 1976- "வரப்பிரசாதம்"
  18. 1977- "தீபம்"
  19. 1978- "புண்ணிய பூமி"
  20. 1978- "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"
  21. 1978- "திரிபுரசுந்தரி"
  22. 1978- "சொன்னது நீதானா"
  23. "நாடோடி"
  24. 1979"ரோசாப்பூ ரவிக்கைக்காரி"
  25. 1979- "பூந்தளிர்"
  26. 1979- "கன்னிப்பருவத்திலே"
  27. 1979- "நீயா"
  28. 1979- "நீ சிரித்தால் நான் சிரிப்பேன்"
  29. 1979- "திசை மாறிய பறவைகள்"
  30. 1979- "சக்களத்தி"

1980களில்

  1. 1980- "காதல் கிளிகள்"
  2. 1980- "விஸ்வரூபம்"
  3. 1981- "நெஞ்சினிலே நினைவிருந்தால்"
  4. 1981- "சொர்க்கத்தின் திறப்பு விழா"
  5. 1981- "ராணுவ வீரன்"
  6. 1981- "சங்கர்லால்"
  7. 1981- "நீதி பிழைத்தது"
  8. "1981-"கோயில் புறா"
  9. 1981- "சாதிக்கொரு நீதி"
  10. 1981- "ஆணிவேர்"
  11. 1982- "இளஞ்சோடிகள்"
  12. 1982- "ஆட்டோ ராஜா"
  13. 1982- "ஊரும் உறவும்"
  14. 1982- "டார்லிங், டார்லிங், டார்லிங்"
  15. 1982- "வாலிபமே வா வா"
  16. 1982- "பட்டணத்து ராஜாக்கள்"
  17. 1982- "துணை"
  18. 1982- "அதிசய பிறவிகள்"
  19. 1982- "மஞ்சள் நிலா"
  20. 1983- "மெல்லப் பேசுங்கள்"
  21. 1983- "ஆயிரம் நிலவே வா"
  22. 1983- "துடிக்கும் கரங்கள்"
  23. 1983- "தூங்காத கண்ணின்று ஒன்று
  24. 1983- "முந்தானை முடிச்சு"
  25. 1983- "மிருதங்க சக்கரவர்த்தி"
  26. 1983- "சாட்சி"
  27. 1983- "தங்கமகன்"
  28. 1983- "காஷ்மீர் காதலி"
  29. 1984- "கடமை"
  30. 1984- "பௌர்ணமி அலைகள்"
  31. 1984- "நீங்கள் கேட்டவை"
  32. 1984- "குழந்தையேசு"
  33. 1984- "திருப்பம்"
  34. 1984- "வெற்றி"
  35. 1984- "வாழ்க்கை"
  36. 1984- "வீட்டுக்கு ஒரு கண்ணகி"
  37. 1984- "சத்தியம் நீயே"
  38. 1984- "குடும்பம்"
  39. 1984- "சிரஞ்சீவி"
  40. 1984- "நூறாவது நாள்"
  41. 1984- "24 மணி நேரம்
  42. 1984- "கை கொடுக்கும் கை"
  43. 1984- "எழுதாத சட்டங்கள்"
  44. 1984- "நிலவு சுடுவதில்லை"
  45. 1984- "ஒசை"
  46. 1984- "வம்ச விளக்கு"
  47. 1984- "தாவணிக் கனவுகள்"
  48. 1985- "நீதியின் மறுபக்கம்"
  49. 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்"
  50. 1985- "அமுதகானம்"
  51. 1985- "காக்கிசட்டை"
  52. 1985- "பந்தம்"
  53. 1985- "அன்பின் முகவரி"
  54. 1985- "மண்ணுக்கேத்த பொண்ணு"
  55. 1985- "ராஜரிஷி"
  56. 1985- "நான் சிகப்பு மனிதன்"
  57. 1985- "மங்கம்மா சபதம்"
  58. 1985- "நேர்மை"
  59. 1985- "தண்டனை"
  60. 1985- "மனக்கணக்கு"
  61. 1986- "விடிஞ்சா கல்யாணம்"
  62. 1986- "கண்ணத் தொறக்கணும் சாமி"
  63. 1986- "விடுதலை"
  64. 1986- "மருமகள்"
  65. 1986- "மனிதனின் மறுபக்கம்"
  66. 1986- "மௌனம் கலைகிறது"
  67. 1986- "வசந்த ராகம்"
  68. 1986- "சாதனை"
  69. 1986- "ஆனந்த கண்ணீர்"
  70. 1986- "நம்பினார் கெடுவதில்லை"
  71. 1986- "எனக்கு நானே நீதிபதி"
  72. 1986- "மிஸ்டர் பாரத்"
  73. 1986- "மகாசக்தி மாரியம்மன்"
  74. 1986- "மீண்டும் பல்லவி"
  75. 1986- "பன்னீர் நதிகள்"
  76. 1986- "கோடை மழை"
  77. 1987- "வைராக்கியம்"
  78. 1987- "குடும்பம் ஒரு கோயில்"
  79. 1987- "காதல் பரிசு"
  80. 1987- "நாயகன்"
  81. 1987- "சட்டம் ஒரு விளையாட்டு"
  82. 1987- "ஊர்க்காவலன்"
  83. 1987- "முப்பெரும் தேவியர்"
  84. 1987- "பேர் சொல்லும் பிள்ளை"
  85. 1987- "தாலிதானம்"
  86. 1988- "கலியுகம்"
  87. 1988- "இது நம்ம ஆளு"
  88. 1988- "உன்னால் முடியும் தம்பி"
  89. 1988- "தம்பி தங்கக் கம்பி"
  90. 1988- "அண்ணாநகர் முதல் தெரு"
  91. 1989- "சிவா"
  92. 1989- "திருப்புமுனை"
  93. 1989- "ராஜநடை"
  94. 1989- "ராஜா ராஜாதான்"

1990களில்

  1. 1990- "சீதா"
  2. 1990- "முதலாளி அம்மா"
  3. 1990- "தைமாசம் பூவாசம்"
  4. 1990- "அதிசயப் பிறவி"
  5. 1990- "பணக்காரன்"
  6. 1990- "வாழ்க்கைச் சக்கரம்"
  7. 1990- "நடிகன்"
  8. 1990- "மௌனம் சம்மதம்"
  9. 1990- "ராஜா கைய வெச்சா"
  10. 1990- "சிறையில் பூத்த சின்ன மலர்"
  11. 1991- "நான் புடிச்ச மாப்பிள்ளை"
  12. 1991- "அழகன்"
  13. 1991- "ஈரமான ரோஜாவே"
  14. 1991- "தந்துவிட்டேன் என்னை"
  15. 1991- "இதய வாசல்"
  16. 1992- "ஒண்ணா இருக்க கத்துக்கணும்"
  17. 1992- "எல்லைச்சாமி"
  18. 1992- "முதல் குரல்"
  19. 1993- "காத்திருக்க நேரமில்லை"
  20. 1993- "எங்க தம்பி"
  21. 1993- "பாரம்பரியம்"
  22. 1993- "உள்ளே வெளியே"
  23. 1993- "தர்மசீலன்"
  24. 1993- "தாலாட்டு"
  25. 1993- "வள்ளி"
  26. 1993- "பத்தினிப் பெண்"
  27. 1994- "வியட்நாம் காலனி"
  28. 1994- "வீட்ல விசேஷங்க"
  29. 1994- "அமைதிப்படை
  30. 1995- "தேடிவந்த ராசா"
  31. 1996- "ஞானப்பழம்"
  32. 1996- "சபாஷ்"
  33. 1998- "தர்மா"
  34. 1998- "செந்தூரம்"
  35. 1999- "ஊட்டி"
  36. 1999- "சின்னத்துரை"

2000த்தில்

2010களில்

இயற்றிய சில பாடல்கள்

வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்(கள்) இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1968 குடியிருந்த கோயில் நான் யார் நான் யார் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன் முதல் பாடல்
2 1969 அடிமைப்பெண் ஆயிரம் நிலவே வா எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா கே. வி. மகாதேவன்
3 1972 நல்ல நேரம் ஓடி ஓடி உழைக்கணும் டி. எம். சௌந்தரராஜன் கே. வி. மகாதேவன்
4 1973 உலகம் சுற்றும் வாலிபன் சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன்
5 1974 நேற்று இன்று நாளை பாடும்போது நான் தென்றல் காற்று எஸ். பி. பாலசுப்பிரமணியம் ம. சு. விசுவநாதன்
6 1979 கன்னிப்பருவத்திலே பட்டு வண்ண ரோசாவாம் மலேசியா வாசுதேவன் சங்கர் கணேஷ்
7 1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா இளையராஜா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புலமைப்பித்தன்&oldid=9353" இருந்து மீள்விக்கப்பட்டது