விவேக் (நடிகர்)
விவேக் | |
---|---|
2019 இல் விவேக் | |
பிறப்பு | விவேகானந்தன்[1][2] 19 நவம்பர் 1961 [3] சங்கரன்கோவில், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 17 ஏப்ரல் 2021[4] சென்னை,தமிழ்நாடு, இந்தியா | (அகவை 59)
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், சமூக செயற்பாட்டாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1987–2021 |
பெற்றோர் | அங்கையா, மணியம்மாள் |
வாழ்க்கைத் துணை | அருள்செல்வி |
பிள்ளைகள் | அமிர்தா நந்தினி தேஜசுவினி பிரசன்னா குமார் (இ. 2015) |
விருதுகள் | பத்மசிறீ (2009) மதிப்புறு முனைவர் பட்டம் (2015) |
விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021)[5] தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
பிறப்பு
இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார்.[6] விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு.[7] இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[8] ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார்.[7] சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார்.[7] ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர்.[7] மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்காற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது.[7] இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் (1987) படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார்.[7] அதன் பின்னர், சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் குடியேறினார்.[7] அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி,[7] பிரசன்னா குமார் (இறப்பு: 2015 அக்டோபர் 29) என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
திரைப்பட வாழ்க்கை
1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலப்படுத்தியது.
இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.[9]
விருதுகள்
விஜய் விருதுகள்
- அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகர் விருது.
பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – ரன் (2002)
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – சாமி (2003)[10]
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – பேரழகன் (2004)
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – சிவாஜி (2007)
தமிழக அரசு விருதுகள்
- சிறந்த நகைச்சுவை நடிகர் விருது– உன்னருகே நான்னிருந்தால்
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – ரன் (2002)
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – பார்த்திபன் கனவு (2003)
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – சிவாஜி (2007)
மற்ற விருதுகள்
- சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
- சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
- சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
- சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்
- சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல்
பண்பலை வானொலி விருதுகள் - சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)
நன்மதிப்பு
- பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா
நடிகராக
1980 ஆண்டுகளில்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1987 | மனதில் உறுதி வேண்டும் | அறிமுகம் | |
1989 | புதுப்புது அர்த்தங்கள் | விட்டல் |
1990 ஆண்டுகளில்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | ஒரு வீடு இரு வாசல் | ||
புது மாப்பிள்ளை | |||
கேளடி கண்மணி | |||
1991 | இதய வாசல் | ||
புத்தம் புது பயணம் | |||
ஜென்ம நட்சத்திரம் | |||
எம் ஜி ஆர் நகரில் | |||
அன்பு சங்கிலி | |||
இதய ஊஞ்சல் | |||
நண்பர்கள் | |||
1992 | வெற்றி முகம் | ||
உரிமை ஊஞ்சலாடுகிறது | |||
தம்பி பொண்டாட்டி | |||
கிழக்கு வீதி | |||
கலி காலம் | |||
புதுசா படிக்கிறேன் | |||
இன்னிசை மழை | |||
1993 | உழைப்பாளி | ||
பாஸ் மார்க் | |||
பட்டுக்கோட்டை பெரியப்பா | |||
1994 | வீரா (1994) | ||
புதிய மன்னர்கள் | |||
வாச்மென் வடிவேல் | |||
வனஜா கிரிஜா | |||
வா மகளே வா | |||
வாங்க பாட்னார் வாங்க | |||
நம்ம அண்ணாச்சி | |||
பொங்கலோ பொங்கல் | |||
எங்க முதலாளி | பாண்டுரங்கன் | ||
1995 | நந்தவனத் தெரு | ||
மாயாபஜார் 1995 | |||
தாயகம் | |||
தொட்டில் குழந்தை | |||
முத்துக் குளிக்க வாரீயளா | |||
இளைய ராகம் | சாமி | ||
காந்தி பிறந்த மண் | |||
பெரிய இடத்து மாப்பிள்ளை | |||
1996 | காலமெல்லாம் காதல் வாழ்க | ||
மைனர் மாப்பிள்ளை | கிச்சா | ||
அவதாரப் புருசன் | |||
எனக்வொரு மகன் பிறப்பான் | |||
சுபாஷ் | |||
1997 | நேருக்கு நேர் | ||
தினமும் என்னைக் கவனி | பாலராமன் | ||
பகைவன் | |||
சிஷ்யா | |||
பெரிய இடத்து மாப்பிள்ளை | ராமு | ||
1998 | காதல் மன்னன் | ||
மறுமலர்ச்சி | நாகராஜன் | ||
காதலே நிம்மதி | |||
உன்னுடன் | |||
சொல்லாமல் | |||
கண்ணெதிரே தோன்றினாள் | |||
அரிச்சந்திரா | |||
நாம் இருவர் நமக்கு இருவர் | பார்த்தசாரதி | ||
1999 | நினைவிருக்கும் வரை | ||
பூமகள் ஊர்வலம் | சக்தி | ||
வாலி | விக்கி | ||
ஒருவன் | |||
விரலுக்கேத்த வீக்கம் | ராமனாதன் | ||
உனக்காக எல்லாம் உனக்காக | மதி | ||
முகம் | |||
அதான்டா இதான்டா | புண்ணியகோடி | ||
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா | |||
உன்னருகே நானிருந்தால் | வெற்றி: சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது | ||
ஆசையில் ஒரு கடிதம் | ராமலிங்கம் |
2000'களில்
2010 ஆண்டுகளில்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2010 | தம்பிக்கு இந்த ஊரு | 'சோல' குமார் | [11] |
சிவப்பு மழை | [12] | ||
மகனே என் மருமகனே | 'சிங்கபட்டி' சிங்காரம் | [13] | |
சிங்கம் | 'ஏட்டு' எரிமலை | [14] | |
பெண் சிங்கம் | திருப்பதி | [15] | |
பலே பாண்டியா | லண்டன் | [16] | |
வாடா | எம்.ஆர்.ராதா கிருஷ்னா | ||
உத்தம புத்திரன் | ஏகாம்பரம் | [17] | |
2011 | சீடன் | கிம்பிடி சாமி | [18] |
பவானி ஐ. பி. எஸ் | கிரிவலம் | ||
மாப்பிள்ளை | குழந்தை சின்னா | [19] | |
ஒரு நுனாக்காத | இன்ஸ்பக்டர் சிங்கம் | மலையாளம் திரைப்படம் | |
வெடி | வருன் சன்தோஸ் | [20] | |
2014 | வேலையில்லா பட்டதாரி | அழகுசுந்தரம் | |
2015 | என்னை அறிந்தால் |
தயாரிப்பில்
எண் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1 | கந்தா | தயாரிப்பில் |
2 | நான்காம் முறை | தயாரிப்பில் |
3 | கடமை கன்னியம் கட்டுப்பாடு | தயாரிப்பில் |
4 | நல்வரவு | தயாரிப்பில் |
5 | சித்திரம் | தயாரிப்பில் |
6 | வழிப்போக்கன் | தயாரிப்பில், கன்னடம் முதல் முறை வில்லனாக |
7 | இத்தனை நாளாய் எங்கிருந்தாய் | தயாரிப்பில் |
8 | இளமை இதோ இதோ | தயாரிப்பில் |
9 | சொல்லி அடிப்பேன் | தாமதம் |
மறைவு
இவர் 16 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி 17 ஏப்ரல் 2021 அதிகாலை 4.30 மணிக்கு காலமானார்.[21][22] பிறகு இவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம். ஜீ இந்துஸ்தான் தமிழ். 17 ஏப்ரல் 2021. https://zeenews.india.com/tamil/lifestyle/great-life-of-actor-vivek-and-his-biography-361514.
- ↑ "Chennaimath.Org: Category – Sri Ramakrishna Vijayam" இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161106001341/http://www.chennaimath.org/category/media/magazines/sri-ramakrishna-vijayam.
- ↑ "Exclusive biography of @Actor_Vivek and on his life.". https://www.filmibeat.com/celebs/vivek/biography.html.
- ↑ "Exclusive biography of @Actor_Vivek and on his life.". https://m.timesofindia.com/city/chennai/vivek-tamil-film-actor-dies-in-chennai-hospital/amp_articleshow/82111036.cms.
- ↑ Vivek, Tamil film actor dies in Chennai hospital, Times of India, 17 April 2021.
- ↑ நடிகர் விவேக் காலமானார். நியூஸ்18 தமிழ். 17-ஏப்ரல் -2021. https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-vivek-passed-away-01-vjr-448995.html. "நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர்."
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 லோகநாயகி (26 நவம்பர் 2000). "இன்னமும் காலேஜ் போறான் என் மகன்". ஆனந்த விகடன்.
- ↑ தி இந்து நடிகர் விவேக்கின் தந்தை மரணம் 26.நவம்பர்.2014
- ↑ http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html
- ↑ 51st Annual Manikchand Filmfare Award winners – Times Of India பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம். Articles.timesofindia.indiatimes.com (2004-06-04). Retrieved on 2012-02-05.
- ↑ "Thambikku Indha Ooru". Sify. 6 March 2010 இம் மூலத்தில் இருந்து 30 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161230010055/http://www.sify.com/movies/thambikku-indha-ooru-review-tamil-pclx3Abeeaigb.html.
- ↑ Rangarajan, Malathi (16 April 2010). "For the record — Sivappu Mazhai". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/For-the-record-Sivappu-Mazhai/article15693887.ece.
- ↑ "Magane En Marumagane". Sify. 21 May 2010 இம் மூலத்தில் இருந்து 10 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170510164729/http://www.sify.com/movies/magane-en-marumagane-review-tamil-pclx9Kibebcfd.html.
- ↑ Devi Ravi, Bhama (29 May 2010). "Singam Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 21 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170321075847/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/singam/movie-review/5987899.cms.
- ↑ Kumar, S. R. Ashok (3 June 2010). "Penn Singam: Family fare". The Hindu. http://www.thehindu.com/features/cinema/Penn-Singam-Family-fare/article16240683.ece.
- ↑ Srinivasan, Pavithra (2010). "Bale Pandiya could have been better". Rediff இம் மூலத்தில் இருந்து 25 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160325224937/http://www.rediff.com/movies/review/south-tamil-review-bale-pandiya/20100903.htm.
- ↑ "Uthamaputhiran". Sify. 4 November 2010 இம் மூலத்தில் இருந்து 3 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151003103815/http://www.sify.com/movies/uthamaputhiran-review-tamil-pclxJwbecgdij.html.
- ↑ Srinivasan, Pavithra (25 February 2011). "Review: Seedan is no match to the original". Rediff இம் மூலத்தில் இருந்து 30 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161230184039/http://www.rediff.com/movies/report/south-review-seedan/20110225.htm.
- ↑ Srinivasan, Pavithra (8 April 2011). "Review: Mappillai is a bad copy of the original". Rediff இம் மூலத்தில் இருந்து 20 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170120082204/http://www.rediff.com/movies/report/south-review-mappillai/20110408.htm.
- ↑ Srinivasan, Pavithra (3 October 2011). "Review: Sameera stands out in Vedi". Rediff இம் மூலத்தில் இருந்து 4 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160804023435/http://www.rediff.com/movies/report/south-review-sameera-stands-out-in-vedi/20111003.htm.
- ↑ நடிகர் விவேக் காலமானார். தினமணி இதழ். 17-ஏப்ரல் -2021. https://www.dinamani.com/tamilnadu/2021/apr/17/actor-vivek-has-passed-away-3605777.html.
- ↑ நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
வெளி இணைப்புகள்
- 1961 பிறப்புகள்
- 2021 இறப்புகள்
- தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
- தமிழ் நகைச்சுவை நடிகர்கள்
- மலையாளத் திரைப்பட நடிகர்கள்
- மதுரைத் திரைப்பட நடிகர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- தூத்துக்குடி மாவட்ட நபர்கள்
- தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
- தமிழ்நாட்டுப் பாடகர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்