உமையாள்புரம் கே. சிவராமன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
உமையாள்புரம் கே. சிவராமன் |
---|---|
பிறந்ததிகதி | டிசம்பர் 17, 1935 |
அறியப்படுவது | மிருதங்க வாசிப்பாளர் |
உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் (பி. டிசம்பர் 17, 1935), ஒரு மிருதங்க வாசிப்பாளர், அறிஞர். இந்தியக் குடியரசின் படைத்துறை-சாராத விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதை 2010-ஆம் ஆண்டு பெற்றார்; அவருக்கு கலைத்துறையில் இவ்விருது அளிக்கப்பட்டது. அருபதி நடேசன், தஞ்சாவூர் வைத்தியநாதன், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், கும்பகோணம் ரங்கு ஆகியோரிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார். சிவராமன் தனது பத்தாவது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். மிருதங்க வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளைப் புகுத்தியவர்; வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியவர்.
ஆராய்ச்சி, புதுமை
சிவராமன் மிருதங்கக் கலையில் மூல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மிருதங்க வாசிப்பில் பல நுணுக்கங்களையும் பிறர் அறிந்திட வகுப்புகளும் எடுத்து வருபவர். முதன்முதல் இழைக்கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்திய இவர், பதனிட்ட தோல், பதனிடாத தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிருதங்கங்களை தனித்தனியே ஆராய்ச்சி செய்துள்ளார். மிருதங்க வாசிப்பில் கிடைக்கும் வெவ்வேறு மேற்சுரங்களுக்கு மிருதங்கத்தில் உள்ள கருந்திட்டுப் பகுதி எவ்வாறு காரணமாயுள்ளது என்று ஆய்வு செய்துள்ளார்.
விருதுகள்
- 1981-தமிழக அரசின் மாநில இசைக்கலைஞர் விருது.
- 1984-தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது.
- 1986-சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் சங்கீத சூடாமணி விருது
- 1988-இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது.
- 1992-தமிழக அரசின் கலைமாமணி விருது.
- 1998-இந்திய குடியரசுத்தலைவரின் தேசிய குடிமகன் விருது.
- 2001-மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது[1]
- 2003-இந்திய அரசின் பத்ம பூசண் விருது.
- 2010-இந்திய அரசின் பத்ம விபூசண் விருது.[2]
- 2014-வாழும் பெருங்கலைஞர் விருது; வழங்கியது: சென்னை ரோட்டரி கிளப், டி. நகர் [3]
- 2018-இசைப்பேரறிஞர் விருது, வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்[4]
- 2022-முனைவர் பட்டம் (கவுரவ பட்டம்). திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்[5]
மேற்கோள்கள்
- ↑ `Sangita Kalanidhi' conferred on Umayalpuram Sivaraman
- ↑ உமையாள்புரம் சிவராமனின் வலைத்தளம்
- ↑ Music keeps me young, says mridangam maestro
- ↑ "Musicians honoured by Tamil Isai Sangam". தி இந்து. 22 டிசம்பர் 2018. https://www.thehindu.com/news/cities/chennai/musicians-honoured-by-tamil-isai-sangam/article25803466.ece. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ https://patrikai.com/music-director-ilayaraja-umayalpuram-sivaraman-awarded-honorary-doctorate-prime-minister-modi-presented-at-gandhi-grama-university-function/
வெளியிணைப்புகள்
- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- மிருதங்கக் கலைஞர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்
- சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்
- சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்
- சங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்
- 1935 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கருநாடக இசைக் கலைஞர்கள்