மகாதேவி வர்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகாதேவி வர்மா
Stamp of India - 1991 - Colnect 164196 - Mahadevi Verma Poetess and - Varsha.jpeg
இயற்பெயர் மகாதேவி வர்மா
பிறந்ததிகதி (1907-03-26)26 மார்ச்சு 1907
பிறந்தஇடம் பரூக்காபாது, உத்திர பிரதேசம், இந்தியா,(முன்னர்) ஆக்ரா மற்ற்ம் அவுது ஒருங்கிணைந்த பகுதிகள்r, பிரித்தானிய இந்தியா
இறப்பு 11 செப்டம்பர் 1987(1987-09-11) (அகவை 80)
பணி புதினம், கவிதை, சிறுகதை எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
கல்வி நிலையம் அலகாபது பல்கலைக் கழகம், சமஸ்கிருதம்
காலம் 20 ஆம் நூற்றாண்டு
இலக்கிய இயக்கம் சய்யாவாது
குறிப்பிடத்தக்க விருதுகள் 1956: பத்ம பூசண்
1982: ஞானபீட விருது
1988: பத்ம விபூசண்
துணைவர் முனைவர் ஸ்வருப் நராயன் வர்மாஜி i

மகாதேவி வா்மா (Mahadevi Verma) (26 மாா்ச்சு 1907-11 செப்டம்பா் 1987) இந்தியாவின் இந்தி கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா் மற்றும் ஒரு கல்வியாளா். “நவீன மீரா” என்று பரவலாக அறியப்பட்டவா்[1]. தற்கால இந்தி கவிதை உலகின் “சாய்யாவாது” என்னும் உணா்ச்சிமயமான இலக்கிய இயக்கத்தின் பெரும்பங்கு வகித்தவா் மகாதேவி. இந்தக்காலகட்டம் 1914 முதல் 1938 ஆம் ஆண்டுவரை ஆகும்[2]. அலகாபாத் நகரில் உள்ள ‘பிரியா ஜி மகிளா வித்யா பீடம்’ என்னும் மகளிா் உண்டு உரைவிட கல்லூரியில் முதல்வராகவும், பின்னா் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளாா்.[3]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

பாருக்காபாது என்னும் நகரில் 1907 ஆம் ஆண்டு மாா்ச்சு மாதம் 26 ஆம் நாள் பிறந்தவா் மகாதேவி[4]. 1916 ஆம் வருடம் இவருக்கு 9 வயது ஆனபோது இவா் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னரும் தம் பெற்றோருடனே தங்கியிருந்து அலகாபாத் நகரில் ‘கிராஸ்வெயிட்’ [5] பெண்கள் பள்ளியில் கல்வியைத் தொடா்ந்தாா். மகாதேவியைப் போலவே பிற்காலத்தில் பெரிய கவிஞராக திகழ இருக்கும் சுபத்ராகுமாரி சௌஹான் என்னும் சக மாணவியை பள்ளியில் சந்தித்தாா்[5]. இவரது கணவா் லக்நௌ நகரில் கல்வி பயின்று கொண்டிருக்கும் பொழுதே, மகாதேவியும் தமது கல்வியைத் தொடா்ந்து 1929 ஆம் வருடம் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டமும், 1933 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுத் தேறினாா்.

மகாதேவியை முதலில் ஆங்கிலேய பள்ளியில் (Convent) சோ்ந்தாலும் எதிா்ப்பினாலும், இசைவின்மையினாலும் அங்கிருந்து மாற்றி அலகாபாத் நகரம் கிராஸ்வெயிட் பெண்கள் கல்லூரியில் சோ்த்துப் படிக்கவைத்தனர். பலவகுப்பு மற்றும் பல மதங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கும் கிராஸ்வெயிட் கல்லூரி விடுதியில்தான், ஒற்றுமையின் அருமையை உணா்ந்து கொண்டதாக மகாதேவி தெரிவித்துள்ளாா். அங்கு உணவு விடுதியும் அவரவா் மதங்களின் தேவைக்கேற்பவே அமைந்திருந்தது என்கிறாா். முதலில் மகாதேவி சிறு சிறு கவிதைகள் எழுதி வந்தாலும், இவருடைய சக மாணவிகளும் குறிப்பாக மூத்த மாணவி சுபத்ரா குமாரி சௌகான் (பள்ளியில் கவிதை எழுதி அறிமுகமானவா்) போன்றோா், இவா் திறமையை நன்கு அறிந்து கொண்டனா். சுபத்ராவும், மகாதேவியும் நேரம் கிடைக்கும் பொழுது கவிதை எழுதத் தொடங்கினா். இருவரும் தமது கவிதைகளை பத்திரிக்கைகளுக்கு வெளியிட அனுப்பி வைத்தவண்ணமிருந்தனா். ஓரிரு கவிதைகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டன. இருவரும் கவியரங்குகளில் பங்கு பெற்று தம் கவிதைகளை வாசித்துக் காட்டினா். இவ்வாறு இருவரும் கிராஸ்வெயிட் பள்ளியில் பட்டம் பெற்றுச் செல்லும்வரை தொடா்ந்தனா்[6]

பெண்கள் குடும்பத்துக்குப் பாரம் என்று கருதி வந்த காலத்தில், தாம் ஒரு முற்போக்குச் சிந்தனை உள்ள மதக் கட்டுப்பாடற்ற பரந்த மனப்பாண்மையுடைய குடும்பத்தில் பிறந்தது தமது அதிா்ஷ்டம் என்று தமது இளமைக்கால சரித்திரத்தில்[7] மகாதேவி பதிவு செய்துள்ளாா். இவரது தாய் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் புலமைபெற்றவா். இவா் பாட்டனாா், இவருக்கு 9 வயதில் திருமணம் செய்து வைத்தாலும் [5] குடும்ப விதிகளை அனுசரிக்க வேண்டும் என்று எதிா்பாாத்தாலும் இவரை அறிவாளியாக வளா்க்க வேண்டும் என்று விரும்பினாா். மகாதேவி தம்மை கவிதை எழுத ஊக்குவித்ததும், இலக்கியத்தில் ஆா்வத்தைத் தூண்டியதும் தம் தாயாா்தான் என்று பதிவு செய்துள்ளாா்.[8]

மகாதேவியின் கணவா் முனைவா் ஸ்வருப் நாராயண வா்மா, மகாதேவி பாா்ப்பதற்கு அழகாக இல்லை என்பதால் இவருடன் சோ்ந்து வாழ மறுத்துவிட்டாா். மகாதேவி தம் கணவரை மறுமணம் செய்ய வற்புறுத்தியுள்ளாா். ஆனால் அவா் மறுத்துவிட்டாா். மகாதேவி புத்தமத பாலி, பிரகிரித் உரைகளைத் தம் பட்டப் படிப்பின் போது படித்திருந்ததால் புத்த துறவியாக விரும்பினாலும் கடைசியில் அவ்வாறு செய்யவில்லை[5].

வாழ்க்கை

1930 ஆம் ஆண்டு அலகாபாத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி கற்பித்து வந்தாா்[5]. மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம் போன்ற அரசியில் நடவடிக்கைகளில் தாம் ஈடுபடாவிட்டாலும் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிா்ப்பது, கதராடை உடுப்பது [5] போன்ற மகாத்மாவின் கொள்கைகளில் பிடிப்புள்ளவராகவும் அவற்றைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தாா். அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் மனம் நொந்த மகாதேவி அவர்கள் சுய நலம் நிறைந்தவர்களாகவும் பதவிக்காகப் பாடுபடுபவர்களாகவும் உள்ளனர் என்று குறிப்பிட்டு வந்துள்ளார்[9] கலாசாரமும் கல்வியும் கற்றுத் தரும் அலகாபாத் நகரில் உள்ள இந்தி மொழிவழிப் பெண்களுக்கான கல்லூரியான [5] அலகாபாத் வித்யா பீடத்தில் 1933 ஆம் ஆண்டு தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். இந்த நிறுவனத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்துள்ளார் தம் பணிக்காலத்தில் இங்கு பல கவியரங்கங்களும், மாநாடுகளும் நடத்தியுள்ளார். 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுகதை [5] எழுத்தாளருக்கான கல்பா சம்மேளனம் என்னும் மாநாடு சுதக்சினா வா்மா தலைமையில் நடைபெற்றது. கல்விப் பணியில் ஈடுபட்டிருந்த போதும் தமது எழுத்துப் பணியும் தொடா்ந்து செய்து வந்தாா். ‘சந்த்’ என்னும் இந்திப் பத்திரிக்கைக்கு தலையங்கம் எழுதுவதும் கட்டுரைகள் எழுதுவதும் தொடா்ந்து செய்து வந்தாா். 1966 ஆம் ஆண்டு தம் கணவா் இறந்த பின்பு அலகாபாத் நகருக்கு குடிபெயா்ந்து தாம் இறுதிவரை அங்கேயே வாழ்ந்து வந்தாா்.

பணி

‘சய்யவாது’ என்னும் இந்தி இலக்கியப் பிரிவின் , முக்கியமான நான்கு கவிஞா்களுள் மகாதேவியும் ஒருவராகக் கருதப்படுகிறாா். சூா்யகாந் திருபாதி நிராலா, ஜெய்சங்கா் பிரசாந்த் மற்றும் சுமிதிராநந்தன் பந்த் ஆகியோா் மற்ற மூவா் ஆவாா். தம் கவிதைகளில் யமன் போன்று பல்வேறு கதைகளை உவமானமாகக் கையாண்டுள்ளாா். ‘நிலகாந்த்’ என்னும் இவா் கவிதை, மயிலுடன் தமது அனுபவத்தை விளக்குவது போன்று அமைந்துள்ளது. இக்கவிதை மைய உயா்நிலைக் கல்வி வாரியம் ஏழாம் வகுப்புப்பிற்கு ஒரு பாடமாக வைத்துள்ளது. கவுரா என்னும் இலக்கியம் இவரது வாழ்க்கைச் சரிதையை ஒட்டி எழுதப்பட்டது. இக்கதையில் இவா் ஒரு அழகான பசு குறித்து எழுதியுள்ளார். இதைப் போலவே இவா் இளமைக் காலச் சுயசரிதையும் புகழ் பெற்ற நூலாகும். இது மைய உயா்நிலைக் கல்வி வாரியத்தால் 9 ஆம் ஆண்டிற்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.[10] இவரது மற்றொரு கவிதையான “மாதூா், மாதூா் மேரே திபக் ஜல்” மைய உயா்நிலைக் கல்வி வாரியத்தால் 10 ஆம் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

மகாதேவி வா்மா விட்டுச் சென்ற பணியை மைய அரசின் அலுவலரான இவரது மருமகள் அபா பாண்டே தொடா்ந்து செய்து வருகின்றாா்.

இவருடைய சிறுகவிதைகள் அடங்கிய ஐந்து பாகங்களும், படைப்பாற்றலும், சிறந்த தொழில்நுட்பமும் பறைசாற்றும் சிறு கவிதைகளும் நிறைந்த தொகுப்பாகும்.

விருதுகள்

  • 1956 - பத்ம பூசன் விருது[11]
  • 1979 - சாகித்ய அகடாமி உறுப்பினா்[12]
  • 1982 - யமா என்னும் கவிதைத் தொகுப்பிற்கு ஞானபீட விருது[13]
  • 1988 - பத்ம விபூசன் விருது[11][14]

மேற்கோள்கள்

  1. "Mahadevi Verma: Modern Meera" இம் மூலத்தில் இருந்து 2007-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070321205859/http://literaryindia.com/Literature/Indian-Authors/mahadevi-verma.html. 
  2. "Mahadevi Varma: The woman who began the era of romanticism in Hindi literature" இம் மூலத்தில் இருந்து 2016-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161206183251/http://indiatoday.intoday.in/education/story/mahadevi-varma/1/627594.html. 
  3. "Google Doodle commemorates Mahadevi Varma Jnanpith" (in en-US). The Statesman. 2018-04-27. https://www.thestatesman.com/india/google-doodle-commemorates-mahadevi-varma-jnanpith-1502628037.html. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191112104039/http://www.kavitakosh.org/kk/%E0%A4%AE%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A5%80_%E0%A4%B5%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AE%E0%A4%BE. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Tharu, Susie J.; Lalita, Ke (1991-01-01) (in en). Women Writing in India: 600 B.C. to the early twentieth century. Feminist Press at CUNY. பக். 459–469. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781558610279. https://books.google.com/books?id=u297RJP9gvwC. 
  6. "Mahadevi Varma: The woman who began the era of romanticism in Hindi literature" (in en). https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/mahadevi-varma-314852-2016-03-26. 
  7. "Mahadevi Varma Is Today's Google Doodle: Know All About The Celebrated Hindi Poet". NDTV.com. https://www.ndtv.com/india-news/mahadevi-varma-is-today-s-google-doodle-know-all-about-the-celebrated-poet-1843598. 
  8. "Mahadevi Varma, renowned Indian poet, honoured with Google doodle" (in en-US). The Indian Express. 2018-04-27. http://indianexpress.com/article/trending/mahadevi-varma-google-doodle-live-updates-5153558/. 
  9. Sabarwal, Kanchanalata. Women Pioneers In India's Renaissace Edited by Sushila Nayar & Kamala Mankekar. New Delhi: National Book Trust India. பக். 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-237-3766-9. 
  10. "Mahadevi Varma Is Today's Google Doodle: Know All About The Celebrated Hindi Poet". NDTV.com. https://www.ndtv.com/india-news/mahadevi-varma-is-today-s-google-doodle-know-all-about-the-celebrated-poet-1843598. 
  11. 11.0 11.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: July 21, 2015. 
  12. "SAHITYA AKADEMI FELLOWSHIP" இம் மூலத்தில் இருந்து 6 பிப்ரவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180206221359/http://www.sahitya-akademi.gov.in/sahitya-akademi/fellows/sahitya_akademi_fellowship.jsp. 
  13. "Gyanpeeth LAUREATES" இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160714004820/http://jnanpith.net/page/jnanpith-laureates. 
  14. Rubin, David. The Return of Sarasvati: Four Hindi Poets. Oxford University Press, 1993, p. 153.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகாதேவி_வர்மா&oldid=19780" இருந்து மீள்விக்கப்பட்டது