கணபதி (சிற்பி)
| வை. கணபதி ஸ்தபதி | |
|---|---|
| பிறப்பு | 30 செப்டம்பர் 1927 பிள்ளையார்பட்டி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் |
| இறப்பு | 5 செப்டம்பர் 2011 (வயது 84)[1] சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| அறியப்படுவது | கோவில் கட்டுநர், சிற்பி, எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோயில் கட்டிடக் கலைஞர் மற்றும் சிற்பி |
| அரசியல் இயக்கம் | வாஸ்து வேத ஆய்வு அறக்கட்டளை |
| விருதுகள் | பத்ம பூசண் |
வை. கணபதி (ⓘ) (செப்டம்பர் 30, 1927 - செப்டம்பர் 5, 2011) புகழ் பெற்ற சிற்பி ஆவார். இவர் கணபதி ஸ்தபதி என்று பலரால் அறியப்படுகிறார். பத்மபூஷன் விருது பெற்ற இவர் புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவர்.[2]
வாழ்க்கை
1927ம் ஆண்டு வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் பிள்ளையார்பட்டியில் பிறந்தார். இவர்கள் குடும்பம் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சிற்பியான குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனின் வழிவந்தவர்கள் என கருதப்படுகிறது.[3] தேவகோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்தார். நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயில இடம் கிடைத்த நிலையில் குடும்பத்தின் பொருளாதாரம் கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருந்ததால் கல்லூரியில் சேரவில்லை. காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் கலைக் கல்லூரி துவங்கியதும் 1947 ஆம் ஆண்டு முதல் மாணவராக இணைந்தார். கல்லூரியில் தேர்ச்சி பெற்ற பிறகு சிலகாலம் கழித்து தேவகோட்டையில் இவர் படித்த பள்ளியிலேயே கணித ஆசிரியராக சேர்ந்தார். பள்ளி ஆசிரியராக ஒரு ஆண்டு பணியாற்றினார்.[4] பின்னர் 1957ல் இவர் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயில் இந்து சமய அறநிலை வாரியத்தில் சிற்பியாக பணியில் சேர்ந்தார். இவரின் தந்தை 1960ல் மறையும் வரை அங்கேயே பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்கு பின் அப்பணியை துறந்துவிட்டு 1957-1960 வரை தன் தந்தை முதல்வராக பணிபுரிந்த மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.[5] 27 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார்.
மறைவு
உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் 2011-ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.[6]
வேலைகள்
இவர் பல்வேறு கோயில்கள் மற்றும் சிலைகளை வடிவமைத்துள்ளார். சில மிகவும் புகழ்பெற்றவை.
- கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை.
- சென்னை வள்ளுவர் கோட்டம்.
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகம்.
- வாசிங்கடன் டி. சி. அருகேயுள்ள சிவா-விஸ்ணு கோயில்
- மதுரையின் நுழைவாயில் வளைவு
- அமெரிக்காவின் அவாய் தீவிலுள்ள சமரச சன்மார்க்க இறைவன் கோயில்
- இவரின் மூத்தோன் என்றும் முதற்சிற்பி என்றும் அறியப்படும் மயன் என்பவருக்கு மாமல்லபுரத்தில் இவர் சிலை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேல்மருவத்துரில் உள்ள ஆதிபராசக்தி சிலையை கட்டியவர் [7]
எழுத்துப் படைப்புகள்
விருதுகள்
- பத்ம பூசண் விருது - 2009.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "ibnlive.in". Archived from the original on 2012-10-17. Retrieved 2011-09-06.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ கணபதி ஸ்தபதி
- ↑ "வாஸ்து விஞ்ஞானி கணபதி ஸ்தபதி". Archived from the original on 2010-07-26. Retrieved 2011-09-06.
- ↑ சிற்பிக்குள் கண்டெடுத்த முத்துகள் (நூல்), இராஜலட்சுமி இராமநாதன், பக்கம் 39
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-26. Retrieved 2011-09-06.
- ↑ "மறைவு". Archived from the original on 2012-10-17. Retrieved 2011-09-06.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ http://www.thinakkural.com/news/all-news/india/8937--133--------.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "List of Padma awardees 2009". The Hindu: p. 1. 26 January 2009 இம் மூலத்தில் இருந்து 5 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090205011649/http://hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm.
- ↑ "Press & Media". Vaastu Shastra. Dr. V. Ganapathi Sthapati & Associates. Archived from the original on 27 ஜூலை 2010. Retrieved 27 August 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)