சீனிவாசன் வரதராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சீனிவாசன் வரதராஜன்
பிறப்புமார்ச்சு 31, 1928 (1928-03-31) (அகவை 96)
தமிழ் நாடு, இந்தியா
பணிவேதியியலாளர்
கூட்டாண்மை தலைவர்
அரசுப் பணியாளர்
விருதுகள்பத்ம பூசன்

சீனிவாசன் வரதராஜன் (பிறப்பு: மார்ச் 31, 1928) ஒரு இந்திய வேதியியல் அறிஞர் ஆவார். இவர் வேதியியலாளராக மட்டுமின்றி ஆட்சிப் பணியாளராக, கூட்டாண்மை அதிகாரியாக பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் 1928 மார்ச் 31 அன்று பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திர பல்கலைக்கழகங்களில் இரண்டு முதுகலைப் பட்டங்களும், தில்லி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் இரண்டு முனைவர் பட்டங்களும் பெற்று தில்லிப் பல்கலைக்கழகம் (1949-53), மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (1956-57), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (1957-59) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (1983), அறிவியல் இந்திய கல்வி நிறுவனம் (1972)[1]

அன்ட் சயின்ஸ் உலக அகாடமி (1997) ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக 1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது வழங்கி இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகனாக கௌரவிக்கப்பட்டார்.[2]

இவர் 1983ல் இந்திய தேசிய அறிவியல் அகாடமியிலும், 1972ல் இந்திய அறிவியல் கல்வி கூட்டமைப்பிலும், 1997ல் உலக அறிவியல் கூட்டமைப்பிலும் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[3] இவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை கெளரவிப்பதற்கென இந்திய அரசு தனது மூன்றாவது மிகப்பெரிய விருதான பத்ம பூசன் விருதினை 1985 இல் இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.[2]

இவர் இந்திய பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IPCL), பெட்ரோஃபில்ஸ் (Petrofils) கூட்டுறவு லிமிடெட், இந்தியப் பொறியாளர்கள் லிமிடெட் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்டார்.[4]

மேற்கோள்கள்

  1. "IAS Fellow". Indian Academy of Sciences. 2016. http://www.ias.ac.in/describe/fellow/Varadarajan,_Dr_Srinivasan. பார்த்த நாள்: 2-05-2016. 
  2. 2.0 2.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  3. "TWAS Fellow". The World Academy of Sciences. 2016 இம் மூலத்தில் இருந்து 2016-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160404001909/http://twas.org/network/members/v. பார்த்த நாள்: 2 மே 2016. 
  4. "Indian Fellow". Indian National Science Academy. 2016. http://www.insaindia.org.in/detail.php?id=N83-0861. பார்த்த நாள்: 2-05-2016. 
"https://tamilar.wiki/index.php?title=சீனிவாசன்_வரதராஜன்&oldid=25791" இருந்து மீள்விக்கப்பட்டது