மேல்மருவத்தூர்
மேல்மருவத்தூர் | |
அமைவிடம் | 12°25′49″N 79°49′54″E / 12.4302°N 79.8316°ECoordinates: 12°25′49″N 79°49′54″E / 12.4302°N 79.8316°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | மதுராந்தகம் வட்டம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேல்மருவத்தூர் (Melmaruvathur) இந்தியாவின், தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்நகரமானது தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இருந்து 92 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்நகரில் உலக புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உள்ளது.
போக்குவரத்து
இந்நகரின் வழியே சென்னை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 45 கடக்கிறது. இங்கிருந்து சென்னை 92 கி.மீ மற்றும் விழுப்புரம் 54 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கும் வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, பெங்களூரு, ஓசூர், விழுப்புரம், சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் இதன் மிக அருகிலேயே மேல்மருவத்தூர் தொடர் வண்டி நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நிறுத்தப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
- ஆதிபராசக்தி பொறியியல் கல்லூர்
- ஆதிபராசக்தி பாலிடெக்னிக்
- ஆதிபராசக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உயர்நிலைப் பள்ளி
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.