ந. முத்துசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ந. முத்துசாமி
ந. முத்துசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ந. முத்துசாமி
பிறந்ததிகதி மே 25, 1936
இறப்பு அக்டோபர் 24, 2018

Na.Muthusamy (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018)[1] என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.

ஆக்கங்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • நீர்மை

நாடகங்கள்

  • காலம் காலமாக
  • அப்பாவும் பிள்ளையும்
  • நாற்காலிக்காரர்
  • சுவரொட்டிகள்
  • படுகளம்
  • உந்திச்சுழி
  • கட்டியக்காரன்
  • நற்றுணையப்பன்

கட்டுரைத் தொகுப்பு

  • அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ந._முத்துசாமி&oldid=4809" இருந்து மீள்விக்கப்பட்டது