என். ரமணி
என். ரமணி N. Ramani | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1934 |
பிறப்பிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
இறப்பு | 9 அக்டோபர் 2015 | (அகவை 80)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கருநாடக வாத்தியக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | புல்லாங்குழல் |
இசைத்துறையில் | 1939–2015 |
என். ரமணி (15 அக்டோபர் 1934 - 9 அக்டோபர் 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார்.[1]
பிறப்பும், இசைப் பயிற்சியும்
தமிழ்நாடு திருவாரூரில் 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம்[2] புல்லாங்குழல் இசையைக் கற்கத் தொடங்கினார். ரமணியின் முதல் கச்சேரி சிக்கில் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்தது. அதன்பின்னர் 1950ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தனது உறவினரான புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கத்திடம் மாணவராக இசை பயின்றார்.
இசை வாழ்க்கை
அனைத்திந்திய வானொலியில் இசை நிகழ்ச்சிகளை செய்துள்ளார். வெளிநாடுகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
புதுமை நிகழ்ச்சிகள்
- திருவனந்தபுரம் வெங்கட்ராமன் (வீணை), லால்குடி ஜெயராமன் (வயலின்) இவர்களுடன் இணைந்து இவர் வழங்கிய வேணு - வீணை - வயலின் எனும் சேர்ந்திசை மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.
- தனது இளமைக்கால நண்பரான ஏ. கே. சி. நடராஜனுடன் (கிளாரினெட்) இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.
- கே. வீ. நாராயணசுவாமியின் வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசித்தார்.
- அரிபிரசாத் சௌராசியா, எம். எஸ். கோபாலகிருஷ்ணன், என். ராஜம், பண்டிட் விசுவமோகன் பட், மேண்டலின் உ. ஸ்ரீநிவாஸ் இவர்களுடன் இணைந்து ஜூகல்பந்திகளை நடத்தினார்.
விருதுகள்
- சங்கீத கலாநிதி விருது, 1996; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1998. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- பத்மஸ்ரீ விருது; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- சங்கீத கலாசிகாமணி விருது; 2007 வழங்கியது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- சங்கீத ஆச்சார்யா விருது; வழங்கியது: வாசேர் கல்லூரி, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- மதிப்புறு குடியுரிமை நிலை; வழங்கியுள்ளது: மேரிலன்ட், ஒகையோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- மதிப்புறு முனைவர் பட்டம் (கலை); வழங்கியது: உலக பல்கலைக்கழகம், அரிசோனா[1]
குடும்பம்
இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என நான்கு குழந்தைகள். இவரின் மகன் தியாகராஜனும், பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள் ஆவர்.
மறைவு
புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரமணி 9 அக்டோபர் 2015 அன்று காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Flautist N. Ramani passes away". தி இந்து. 9 அக்டோபர் 2015. http://www.thehindu.com/news/flautist-n-ramani-passes-away/article7743461.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2015.
- ↑ "என். ரமணி". தி இந்து. June 23, 2006 இம் மூலத்தில் இருந்து 2012-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102091536/http://www.hindu.com/fr/2006/06/23/stories/2006062301710200.htm. பார்த்த நாள்: 2008-05-16.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.