ஏ. கே. சி. நடராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. கே. சி. நடராஜன்
ஏ. கே. சி. நடராஜன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஏ. கே. சி. நடராஜன்
பிறந்ததிகதி 30 மார்ச்சு 1931 (1931-03-30) (அகவை 93)
பிறந்தஇடம் திருச்சிலாப்பள்ளி
இந்தியா
அறியப்படுவது கிளாரினெட்
கருநாடக இசை


ஏ. கே. சி. நடராஜன் (A. K. C. Natarajan) என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஆவார்.

தொழில் வாழ்க்கை

ஆலத்தூர் வெங்கடேசய்யரிடம் வாய்ப்பாட்டும், இலுப்பூர் பஞ்சமியின் சகோதிரர் நடேசனிடம் நாதசுவரமும் நடராஜன் பயின்றார். நாதசுவரம், வாய்பாட்டு போன்றவற்றில் கச்சேரி செய்யும் நிலைக்கு வந்தார். அதன்பிறகு ஐரோப்பிய வாத்தியமான கிளாரினெட்டை நாதசுவரம் போன்று குழைவுடனும் சங்கதிகளுடனும் வாசித்து சாதகம் செய்யத் துவங்கினார். அதன்பிறகு கர்நாடக இசையை கிளாரினெட்டை கொண்டு வாசித்து இசை மேதையென பாராண்ணுதலைப் பெற்றார்.[1] கிளாரினெட்டை கொண்டு கர்நாடக சங்கீதத்தை வாசிக்க ஏதுவாக அந்தக் கருவியில் தவிர்க்க முடியாத சில விசைகளை மட்டும் வைத்துக்கொண்டு பிறவற்றை நீக்கிவிட்டு நாதசுவரத்தைப் போல துளைகளில் விரலடியாகவும், ஊதுகிற உத்தியைக் கைவரப்பெற்று அதன் வழியாக அக்கருவியில் கர்நாடக இசை நுட்பங்களை கொண்டுவந்து வாசித்தார்.[2]

லலிதா-பத்மினி-ராகினி சகோதரிகளில், நடிகை லலிதாவின் திருமணம் சென்னையில் நடந்தது; அத் திருமணத்தில் நடந்த ஏ. கே. சி. நடராஜனின் கிளாரினெட் இசை நிகழ்ச்சி, திருமணத்திற்கு வந்தோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[3]

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்

மேற்கோள்கள்

  1. 'விருது பெற்ற கலைஞர்கள்' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 88), தினமணி இசைவிழா மலர் (2008-2009)
  2. "ஏ.கே.சி. நடராஜன் அயல் வாத்யத்தில் ஓர் அரிய மேதமை!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.
  3. 'அதுதான் நாத வித்தை' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 10), தினமணி இசைவிழா மலர் (2008-2009)
  4. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "'இசை தொழில் அல்ல, ஆத்மார்த்தமான உணர்வு'- கிளாரிநெட் கலைஞர், பத்மஸ்ரீ ஏ.கே.சி. நடராஜன் சிறப்பு பேட்டி!". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._கே._சி._நடராஜன்&oldid=7278" இருந்து மீள்விக்கப்பட்டது