ஜி. நாச்சியார்
ஜி. நாச்சியார் | |
---|---|
பிறப்பு | வடமலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் | 15 செப்டம்பர் 1940
தேசியம் | இந்தியர் |
பணி | மருத்துவர் |
வாழ்க்கைத் துணை | நம்பெருமாள் |
உறவினர்கள் | ஜி. வெங்கடசாமி (சகோதரர்) |
ஜி. நாச்சியார் (G. Nachiar, பிறப்பு: 15 செப்டம்பர் 1940) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவரும், பத்மஸ்ரீ விருதாளருமாவார்.[1] இவர் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களுள் ஒருவராவார், தற்போது இதன் கவுரவத் தலைவராக உள்ளார்.[2] அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய மருத்துவர் ஜி. வெங்கடசாமி இவரின் சகோதரராவார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரத்தில் 1940 செப்டம்பர் 15 ஆம் நாள் பிறந்தார்.[3] 1963-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவப் பட்டமும், 1966 இல் கண்ணியல் மருத்துவத்தில் பட்டயமும் பெற்றார். பின்னர் 1969 இல் மதுரை பல்கலைக்கழகத்தில் கண்ணியல் மருத்துவத்தில் எம்.எஸ்.பட்டமும், 1973 இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கண்ணியல் நோய் ஆய்வுக்கான பெல்லோசிப்பும், 1978 இல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில கண்ணியல் நோய் ஆய்வு, நரம்பியல் கண் மருத்துவ பெல்லோசிப்பும் பெற்றார்.[3]
1965 இல் மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியைத் தொடங்கி, 1979 இல் அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தற்போது மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அரவிந்த் மருத்துவனையின் கவுரவத்தலைவராக உள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "தமிழகத்தில் இருந்து 'பத்ம' விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/1188981-cm-stalin-congratulates-those-selected-for-padma-awards-from-tn.html. பார்த்த நாள்: 27 January 2024.
- ↑ "Dr. G. Natchiar". https://aravind.org/members/dr-g-natchair/. பார்த்த நாள்: 27 January 2024.
- ↑ 3.0 3.1 "அரவிந்த் கண் மருத்துவமனை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு: மருத்துவமனையின் கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2024/jan/26/padma-shri-award-for-faith-in-aravind-eye-hospital-honorary-president-gnachiyar-4145864.html. பார்த்த நாள்: 27 January 2024.