ஆஷா போஸ்லே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆஷா போஸ்லே
Ashaji.jpg
2015 இல் போஸ்லே
பிறப்புஆஷா மங்கேஷ்கர்
8 செப்டம்பர் 1933 (1933-09-08) (அகவை 91)
கோர், சங்லி, தற்போது மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்மெலோடி குயின், ஹிந்தி பாப் குயின்
பணிபின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1943–தற்போதுவரை
பெற்றோர்தீனாநாத் மங்கேஷ்கர்
செவந்தி மங்கேஷ்கர்
வாழ்க்கைத்
துணை
Ganpatrao Bhosle
(m. 1949; sep. 1960; died 1966)
R. D. Burman
(தி. 1980; இற. 1994)
பிள்ளைகள்ஹேமந்த் போஸ்லே
வர்ஷா போஸ்லே
ஆனந்த் போஸ்லே
விருதுகள்
  • 7 ஃபிலிம்பேர் விருது
  • 2 தேசிய விருது
  • தாதாசாகேப் பால்கே விருது

ஆஷா போஸ்லே (Asha Bhosle [1] (பிறப்பு 8 செப்டம்பர் 1933) ஓர் இந்தியப் பின்னணி பாடகர் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவர் இந்தி சினிமாவில் பின்னணி பாடுவதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார், இருப்பினும் அவர் பல திறனைக் கொண்டிருந்தார்..[2][3][4] போஸ்லேவின் தொழில் வாழ்க்கை 1943 இல் தொடங்கி ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ளார். மேலும், தனிப் பாடல் தொகுதிகளையும் பாடியுள்ளதோடு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான தனி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.[5] 2006 ஆம் ஆண்டில், ஆஷா போஸ்லே 12,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதாகக் கூறினார்,[6] 2011 ஆம் ஆண்டில், கின்னஸ் புத்தகத்தால் உலக வரலாற்றில் அதிக பதிவு செய்யப்பட்ட கலைஞராக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.[7] இந்திய அரசு 2000 ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதையும் 2008 இல் பத்ம விபூஷன் விருதையும் வழங்கியது . போஸ்லே பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

ஆஷா போஸ்லே சாங்லியில் உள்ள கோர் எனும் சிறிய குக்கிராமத்தில் பிறந்தார், தற்போது இந்தப் பகுதி மகாராட்டிரத்தில் உள்ள சாங்க்லி மாவட்டத்தில் உள்ளது. இவரது தந்தை மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் ஆவார். இவர் மராத்தி மற்றும் கொங்கனி மரபினைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் ஆஷாவின் தாயார் குராத்தினைச் சேர்ந்த செவந்தி ஆவார். அவரது தந்தையார் ஒரு திரையரங்கு நடிகர் மற்றும் சாஸ்த்ரீய சங்கீத வித்வானாவார். அவருக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது, அவரது தந்தையார் காலமானார். அவரது குடும்பம் முதலில் புனேவில் இருந்து கோல்ஹாபூரிற்கு குடிபெயர்ந்தது மேலும் அங்கிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது. அவரும் அவரது மூத்த சகோதரியான லதா மங்கேஷ்கர் அவர்களும் குடும்பத்தைப் பேணுவதற்காக திரைப்படங்களில் நடிக்கவும் பாடவும் துவங்கினார்கள். அவருடைய முதல் திரைப்படப் பாடலான சலா சலா நவ பாலா என்ற மராத்தி மொழிப்பாடலை மாஜா பல் என்ற படத்திற்காக பாடினார்(1943). இந்தப்படத்திற்கு தத்தா தவ்ஜேகர் இசை அமைத்தார். அவர் ஸாவன் ஆயா என்ற பாடலை ஹன்ஸ்ராஜ் பெஹ்ல் அவர்களின் சுனரியா (1948) என்ற படத்திற்கு பாடியதும் அவர் இந்தியில் அறிமுகமானார். அவர் தனியாக பாடிய முதல் இந்தித் திரைப்படப்பாடல் ராத் கி ராணி (1949) என்ற படத்திற்காகும்.

16 வயதில், அவர் 31 வயதான கண்பத்ராவ் போஸ்லேவுடன் என்பவரை இவரது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டார்.

தொழில் வாழ்க்கை

1960 களின் முற்பகுதியில், முக்கிய பின்னணி பாடகர்களான கீதா தத், சம்ஷாத் பேகம், மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோர் முன்னணி பெண் நடிகர்களுக்கும் பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கும் பாடுவதில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவ்வாறு அவர்களால் பாட மறுக்கும் பாடலகளையோ அல்லது இரண்டாம் நிலை நடிகைகளின் படப் பாடல்களையே இவர் பாடி வந்தார். 1950 களில், பாலிவுட்டில் பெரும்பாலான பின்னணி பாடகர்களை விட இவர் அதிகமான பாடல்களைப் பாடினார். இவற்றில் பெரும்பாலானவை குறைந்த நிதியில் தயாரிக்கப்பட்ட பி- அல்லது சி-கிரேடு படங்களாக இருந்தன. அவரது முந்தைய பாடல்களை ஏ.ஆர்.குரேஷி, சஜ்ஜாத் உசேன் மற்றும் குலாம் முகமது ஆகியோர் இசையமைத்தனர், மேலும் இந்த பாடல்கள் மக்களின் கவனத்தினை ஈர்க்கத் தவறிவிட்டன.[8] சஜ்ஜாத் உசேன் இசையமைத்த சாங்டில் (1952) பாடியதால், அவருக்கு பரவலாக அங்கீகாரம் கிடைத்தது. இதன் விளைவாக, திரைப்பட இயக்குனர் பிமல் ராய் அவருக்கு பரினிதாவில் (1953) பாட வாய்ப்பு அளித்தார். பூட் போலிஷ் (1954) இல் முகமது ரபியுடன் "நான்ஹே முன்னே பச்சே" பாடல் பாடுவதற்கு ராஜ் கபூர் ஒப்புக்கொண்டத்ன் மூலம் பிரபலமானார். [ மேற்கோள் தேவை ]

இளையராஜா

1980 களின் முற்பகுதியில் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா இசையில் மூன்றாம் பிறை (1982) படத்திற்காக (இந்தியில் 1983 ஆம் ஆண்டில் சத்மாவாக ரீமேக் செய்யப்பட்டது) திரைப்படத்திற்காகப் பாடினார். 1987 ஆம் ஆண்டில் எங்கா ஓரு பாட்டுக்காரன் திரைப்படத்திற்கான "செண்பகமே" பாடல் மிகவும் குறிப்பிடத் தகுந்த பாடல் ஆகும். 2000 ஆம் ஆண்டில், ஆஷா கமல்ஹாசனின் அரசியல் படமான ஹே ராமின் மையக் கருத்துப் பாடலைப் பாடினார். மேலும் அதே படத்தில் நீ பார்த்த பார்வைக்கொரு எனும் பாடலையும் பாடினார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரங்கீலா (1994) திரைப்படத்தில் மறுபிரவேசம் ஆனார். "தன்ஹா தன்ஹா" மற்றும் "ரங்கீலா ரே" போன்ற பாடல்கள் வெற்றி பெற்ற பாடல்களாக இருந்தன. அவரும் ரஹ்மானும் "முஜே ரங் தே" ( தக்ஷக் ), "ராதா கைஸ் நா ஜலே" ( லகான், உதித் நாராயணனுடன் டூயட்), "கஹின் ஆக் லாகே" ( தால் ), "ஓ பன்வேர்" ( KJ யேசுதாஸ் உடன்), "வெண்ணிலா வெண்ணிலா" ( இருவர், 1999), "செஒடம்பர் மாதம்" ( அலைபாயுதே, 2000) மற்றும் "துவன் துவன்" ( மீனாக்ஷி, 2004).[8]

தனிப்பட்ட வாழ்க்கை

ஆஷாவின் வீடு தெற்கு மும்பையின் பெடார் சாலை பகுதியில் உள்ள பிரபுகுஞ்ச் ஆப்டில் அமைந்துள்ளது. ஆஷா, தனது 16ஆம் வயதில், 31 வயதான கண்பத்ராவ் போஸ்லேவுடன் சென்றுவிட்டாஎ. அவர்கள் 1960 ல் பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர். அவரது மூன்று குழந்தைகளில் மூத்தவர், ஹேமந்த் போஸ்லே ( ஹேமந்த் குமாரின் பெயரிடப்பட்டது), தனது ஆரம்ப ஆண்டுகளில் பெரும்பாலான நேரங்களை ஒரு விமானியாகக் கழித்தார், மேலும் இசை இயக்குநராக சில காலம் இருந்தார். போஸ்லேவின் மகள் வர்ஷா 8 அக்டோபர் 2012 அன்று தற்கொலை செய்து கொண்டார்; அவருக்கு வயது 56 ஆகும் மேலும் இவர் தி சண்டே அப்சர்வர் மற்றும் ரெடிஃப் பத்திரிகையின் கட்டுரையாளராக பணியாற்றினார்.[9]

ஆஷாவின் இளைய குழந்தை ஆனந்த் போஸ்லே வணிக மற்றும் திரைப்பட இயக்கப் பிரிவினை படித்தார். அவர் ஆஷாவின் தொழில் வாழ்க்கையை நிர்வகிக்கிறார். அவரது பேரன், சைதன்யா (சிந்து) போஸ்லே (ஹேமந்தின் மகன்) ஆகியோர் உலக இசையின் ஓர் அங்கமாக கருதப்படுகின்றனர். அவர் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பாய் இசைக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார், "எ பேண்ட் ஆஃப் பாய்ஸ்". இசைக்குழுவில் இவரது சகோதரிகள் லதா மற்றும் உஷா மங்கேஷ்கர் ஆகியோர் பின்னணி பாடகர்களாக உள்ளனர். அவரது மற்றொரு, சகோதரி மீனா மங்கேஷ்கர் மற்றும் சகோதரர் ஹிருதநாத் மங்கேஷ்கர் ஆகியோர் இசை இயக்குநர்கள் ஆவர்.

விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

ஆஷா போஸ்லே 18 பரிந்துரைகளில் ஏழு பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி விருதுகளை வென்றுள்ளார் .[10] அவர் தனது முதல் இரண்டு விருதுகளை 1967 மற்றும் 1968 இல் வென்றார். (புதிய திறமைகளை வளர்ப்பதற்காக 1969 க்குப் பிறகு விருது பரிந்துரைகளுக்கு பரிசீலிக்க வேண்டாம் என்று மங்கேஷ்கர் கேட்டார்). 1979 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்ற பிறகு, போஸ்லே தனது மூத்த சகோதரியைப் பின்பற்றி, இனிமேல்விருது பரிந்துரைக்கு எனது பெயரைக் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இருந்தபோதிலும், இந்த விருதினை அதிகமுறை வென்றவர்கள் பட்டியலில் அல்கா யாக்னிக் உடன் இணைந்துள்ளார். பின்னர் அவருக்கு 1996 இல் ரங்கீலாவுக்கான சிறப்பு விருதும், 2001 இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது . அவரது பிலிம்பேர் விருதுகளின் பட்டியல் பின்வருமாறு:

பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி விருது

  • 1968: "கரிபோன் கி சுனோ" ( தஸ் லக், 1966)
  • 1969: "பர்தே மெயின் ரஹ்னே தோ" ( ஷிகார், 1968)
  • 1972: "பியா து ஆப் ஆஜா" ( கேரவன், 1971)
  • 1973: " டம் மரோ டம் " ( ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, 1972)
  • 1974: "ஹன் லாகி ஹைன் ராத்" ( நைனா, 1973)
  • 1975: "செயின் சே ஹம்கோ கபி" ( பிரன் ஜெயே பர் வச்சன் நா ஜெயே, 1974)
  • 1979: "யே மேரா தில்" ( டான், 1978)

சிறப்பு விருது

வாழ்நாள் சாதனையாளர் விருது

  • 2001   - பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது

தேசிய திரைப்பட விருதுகள்

ஆஷா இரண்டு முறை சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார்:

  • 1981: தில் சீஸ் க்யா ஹை ( உம்ராவ் ஜான் )
  • 1986: மேரா குச் சமன் ( இஜாசாத் )

ஐஃபா விருதுகள்

சிறந்த பெண் பின்னணிக்கான ஐஃபா விருது

பிற விருதுகள்

ஆஷா பல விருதுகளை வென்றுள்ளார், அவற்றுள் சில:

  • 1987: நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா விருது (இங்கிலாந்தின் இந்தோ - பாக் அசோசியேஷனில் இருந்து).[10]
  • 1989: லதா மங்கேஷ்கர் விருது ( மத்திய பிரதேச அரசு).
  • 1997: ஸ்கிரீன் வீடியோகான் விருது ( ஜானம் சமாஜா கரோ ஆல்பத்திற்கு).
  • 1997: எம்டிவி விருது ( ஜானம் சமாஜா கரோ ஆல்பத்திற்கு).
  • 1997: சேனல் வி விருது ( ஜானம் சம்ஜா கரோ ஆல்பத்திற்கு).
  • 1998: தயாவதி மோடி விருது.[11]
  • 1999: லதா மங்கேஷ்கர் விருது ( மகாராஷ்டிரா அரசு)
  • 2000: மில்லினியத்தின் பாடகர் ( துபாய் ).
  • 2000: ஜீ கோல்ட் பாலிவுட் விருது ( தக்ஷக்கிலிருந்து முஜே ரங் தேவுக்கு ).
  • 2001: எம்டிவி விருது ( கம்பக்த் இஷ்கிற்கு ).
  • 2002: பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது (இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் வழங்கினார்).
  • 2002: சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஜீ சினி விருது - பெண் (ராதா கைஸே ஜலே லகான்).
  • 2002: ஹால் ஆஃப் ஃபேமுக்கான ஜீ சினி சிறப்பு விருது .
  • 2002: சான்சூய் திரைப்பட விருது (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ஜலே).
  • 2003: இந்திய இசையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக ஸ்வரலயா யேசுதாஸ் விருது .
  • 2004: இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் லிவிங் லெஜண்ட் விருது .[12]
  • 2005: எம்டிவி இம்மீஸ், ஆஜ் ஜானே கி ஜித் நா கரோவின் சிறந்த பெண் பாப் சட்டம்.
  • 2005: இசையில் மிகவும் ஸ்டைலிஷ் மக்கள்.

மேலும் படிக்க

சான்றுகள்

  1. Asha Bhosle has been credited variously as Asha, Asha Bhosle, Asha Bhonsale, Asha Bhonsle, Asha Bhonsley, Asha Bhosale and Asha Bhosley (See her IMDB entry for details). She is often referred to as Ashaji – the Hindi suffix ji denotes respect.
  2. Gulzar; Nihalani, Govind; Chatterji, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. பக். 532–533. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7991-066-0. 
  3. Gangadhar, v. (18 May 2001). "Only the best preferred". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2003-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030823024402/http://www.hindu.com/2001/05/18/stories/09180701.htm. பார்த்த நாள்: 2009-07-22. 
  4. Arnold, Alison (2000). The Garland Encyclopedia of World Music. Taylor & Francis. பக். 420–421. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8240-4946-2. 
  5. "IMDB entry". IMDB இம் மூலத்தில் இருந்து 18 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090318020551/http://www.imdb.com/name/nm0080427/. 
  6. ( Jyothi Venkatesh. "Asha Bhosle: Sa Re Ga Ma...". Vashi2Panvel.com இம் மூலத்தில் இருந்து 2012-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/69avilP1h?url=http://www.vashi2panvel.com/Navi-Mumbai-News/index.php?arr=item%2F196%2Fcatid%2F26. "I would like to state humbly that I am the only singer who has sung the maximum number of songs – 12,000. If you sing one song a day, you can humanly sing 365 songs a year and 3650 songs in ten years. In around 60 years of my career I could sing 12,000 songs because there were times I had sung even four songs a day." 
  7. Baksi, Dibyojyoti (22 October 2011). "I am honoured after receiving this award: Asha Bhosle". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 22 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111022185824/http://www.hindustantimes.com/I-am-honoured-after-receiving-this-award-Asha-Bhosle/H1-Article1-760281.aspx. பார்த்த நாள்: 2011-10-23. 
  8. 8.0 8.1 "Asha, 70 years, 70 landmarks". 8 September 2003 இம் மூலத்தில் இருந்து 8 November 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061108074820/http://ia.rediff.com/movies/2003/sep/05ms1.htm. 
  9. "Asha's daughter, commits suicide". 8 October 2012 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121009141640/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-08/mumbai/34321873_1_singer-asha-bhosle-anand-bhosle-prabhu-kunj. பார்த்த நாள்: 9 October 2012. 
  10. 10.0 10.1 Asha Bhosle Awards. Asha-Bhosle.com. Accessed 18 October 2007
  11. Abdul Waheed Khan being presented Dayawati Modi Award. portal.unesco.org. 17 November 2006. Accessed 18 October 2007.
  12. Bhayani, Viral. Bachchan, Hema Honoured as Living Legends பரணிடப்பட்டது 28 செப்டம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம். redhotcurry.com. 16 March 2004. Accessed 18 October 2007.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆஷா_போஸ்லே&oldid=8729" இருந்து மீள்விக்கப்பட்டது