1977 (திரைப்படம்)
1977 | |
---|---|
இயக்கம் | ஜி. என். தினேஷ் குமார் |
தயாரிப்பு | சரத்குமார் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | சரத்குமார் பர்ஜானா விவேக் நமிதா கபூர் (நடிகை) ராதாரவி இளவரசு |
கலையகம் | சுபிரீம் பிலிம் வொர்க்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 6, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
1977 என்பது 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஜி. என். தினேஷ் குமார் இயக்கியிருந்தார். இதில் சரத்குமார், விவேக், நமீதா, ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் பின்னர் இந்தியில் 1977: தி ஹிஸ்டரி ரீ-ரிட்டன் 2010 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
கதைச் சுருக்கம்
தமிழ்நாட்டின் ஒரு மீன்பிடி குக்கிராமத்தில் படம் தொடங்குகிறது, அங்கு வயதான ராஜசேகர் என்பவர் பலரால் "காட் ஃபாதர்" என்று வணங்கப்படுகிறார். அவரது அன்பான வாழ்க்கை முறைகள் அவருக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தந்தன. இவரது மகன் வெற்றிவேல் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி. மத்திய அரசின் விருதுகளை பெற்றுத் திரும்பிய அவரை கிராமம் முழுவதும் உற்சாகமாக வரவேற்கிறது. துரதிர்ஷ்டவசமாக, மலேசியாவைப் பற்றிய செய்தி அறிக்கையின் மீது ஒரு வட்டார மொழியில் ஒரு பார்வை ராஜசேகரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவர் உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார். வெற்றிவேல் சம்பவத்தை அறிந்து, மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முடிவு செய்கிறார். அவர் மலேசியாவுக்கு புறப்படுகிறார். வெற்றிவேல் ஒரு உள்ளூர் நிருபர் இன்பாவுடன் பழகி அவள் உதவியுடன், தனது தந்தையின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குழப்பமான உண்மையைக் கண்டுபிடிக்கிறான். மலேசியாவின் முன்னாள் காவல் அதிகாரியான ராஜசேகர் ஒரு தீயவனின் சதியில் விழுந்து தவறேதும் செய்யாமலேயே கைது செய்யப்பட்டார். ராஜசேகர் இறுதியில் நேர்மையாக இருந்ததற்கான விலையை செலுத்தி, தனது இளம் மகனுடன் தமிழ்நாட்டில் குடியேறுகிறார்.
தனது தந்தை நிரபராதி என்பதை நிரூபிக்கும் முயற்சியில், வெற்றிவேல் வழக்கை மீண்டும் தொடங்குகிறார். மேலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகருக்கு எதிராக வாதிட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் காந்திவனின் மகள் சாந்தினியின் உதவியைப் பெறுகிறார். அப்போது தன் தாயையும் கண்டு பிடிக்கிறார். வெற்றிவேல் வரலாற்றை எப்படி மாற்றி எழுதுகிறார் என்றும் தன் தந்தை குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபித்தார் என்பதும், எவ்வாறு மோசமானவர்களை பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
- ராஜசேகர் "ராசையா" மற்றும் வெற்றிவேலாக சரத்குமார்
- இன்பாவாக பர்சானா
- சாந்தினியாக நமீதா
- பரமனாக விவேக்
- வெற்றிவேலின் அம்மாவாக ஜெயசுதா
- டாக்டர் சர்மாவாக ராதா ரவி
- காவல்துறை உயரதிகாரி பத்மநாபனாக விஜயகுமார்
- இளவரசு
- குற்றவியல் வழக்கறிஞராக சங்கர் சிவா
வரவேற்பு
படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. "எவ்வளவு காலம் சரத்குமார் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பார்? வருந்துகிறேன், இந்தப் படம் [a] ஒற்றைத் தலைவலியைப் போல் தவிர்க்கக்கூடியது" என சிஃபி என்ற இணையம் கூறியது.[1] ரெடிப்.காம் ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரை நட்சத்திரங்களை அளித்து, " 1977 இல் வெளியிடப்பட்டிருந்தால் ஒருவேலை பார்க்கலாம்!" என எழுதியது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Review: 1977". Sify. 9 March 2009 இம் மூலத்தில் இருந்து 8 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160608065845/http://www.sify.com/movies/review-i1977i-review-tamil-pclwW1ecehije.html.
- ↑ Srinivasan, Pavitra (9 March 2009). "It's Bland, James Bland" இம் மூலத்தில் இருந்து 23 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211123034746/https://www.rediff.com/movies/2009/mar/09tamil-review-1977.htm.