பசுபதி மே / பா. ராசக்காபாளையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பசுபதி மே / பா. ராசக்காபாளையம்
இயக்கம்கே. செல்வபாரதி
தயாரிப்புஜெ. சத்திஷ் குமார்
இசைதேவா
நடிப்புரஞ்சித்
சிந்து துலானி
விவேக்
கஞ்சா கறுப்பு
கலையகம்ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடு5 October 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பசுபதி மே/பா ராசக்காபாளையம் (Pasupathi c/o Rasakkapalayam) என்பது 2007 அக்டோபரில் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். கே. செல்வபாரதி இயக்கிய இப்படத்தில் ரஞ்சித், சிந்து துலானி, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1] தேவா இசையமைத்திருந்தார். இந்த படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

கதை

பசுபதி ( ரஞ்சித் ) தனது தாயுடன் கிராமத்தில் வசித்துவருகிறான். வேலை தேடும் நோக்கத்துடன் நகரத்துக்கு வருகிறான். வந்த இடத்தில் அவன் ஒரு சில குண்டர்களுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களை காவலரான தாசிடம் ( விவேக் ) ஒப்படைக்கிறான். பிடிக்க முடியாத குண்டர்களை பிடித்தத காரணத்திற்காக தாஸ் துணை ஆய்வாளராக பதவி உயர்வு பெறுகிறார். பசுபதி பெரும்பாலும் தாஸ் மற்றும் அவரது குழுவுடன் இருந்து வருகிறார். பசுபதியின் தாய்க்கு இதயத்தில் சிக்கல் இருப்பது கண்டறியப்படுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய 500,000 ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக பசுபதி தாஸ் மற்றும் பிரியா (சிந்து துலானி ) ஆகியோரின் உதவியுடன் பணம் திரட்ட முயன்று அதில் தோல்வியடைகிறான்.

பசுபதி ஒரு நக்சலைட் குழுவை தொடர்பு கொள்கிறான். காவல் துறையால் தேடப்படும் நக்சலைட்டுக்கு பதிலாக அவன் சரணடைந்தால் அவனுக்கு தேவையான பணத்தை தருவதாக உறுதியளிக்கின்றனர். பசுபதி ஒப்புக்கொண்டு சரணடைகிறான். ஆனால் பணத்தை தரவேண்டிய நக்சலைட்டுக்கு (இளவரசு ) வேறு பிரச்சனைகள் இருப்பதால் பணம் அவரை சென்றடைவதில்லை. நக்சலைட் குழு தங்கள் சரணடைவதன் மூலம் பசுபதியை காப்பாற்ற முடிவு செய்து அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தையும் கொடுக்கின்றனர். ஆனால் காவல் உதவி ஆணையரால் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர் பணத்தை பசுபதியிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றிவிடுகிறார்.

தாஸ் மனித உரிமை ஆணையத்தின் உதவியைப் பெறுகிறார். இறுதியாக, பசுபதி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கபடுகிறான். அவன் தாஸ் மற்றும் பிரியாவின் உதவியுடன் தேவையான பணத்தை திரட்டுகிறான். இருப்பினும், அவனது தாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை அவளை காப்பாற்றாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பசுபதி மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்துகிறான். அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் அவனது தாயார் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மயக்கமடைந்ததால், அது தோல்வியுற்றதாகத் தெரிகிறது. பசுபதி மனவேதனை அடைந்து மருத்துவமனையில் தாயின் காலடியில் அழுதுகொண்டிருக்கிறான். திடீரென்று, அவனது தாய் சுயநினைவு பெற்று எழுகிறாள். ஆனால் பசுபதி அவள் காலடியில் இறந்துகிடக்கிறான்.

நடிப்பு

இசை

இப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகள் கே. செல்வபாரதி எழுதியது.[2]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நி: நொ)
1 ஏ அம்மா அப்பா மாணிக்க விநாயகம் கே. செல்வபாரதி 04:24
2 உயிர் தந்த (பெண்) கே. எஸ். சித்ரா 06:26
3 ஒன்னு ரெண்டு மூனு தேவா 05:18
4 உயிர் தந்த (ஆண்) கே. ஜே. யேசுதாஸ் 06:26
5 நான் மேஜர் சுசித்ரா 05:51

வரவேற்பு

சிஃபி எழுதி விமர்சனத்தில், "விவேக்கின் நகைச்சுவை தவிர படத்தில் குறிப்பிடத்தக்கதாக எதுவுமில்லை. கதையின் இரண்டாம் பாதி தாறுமாறாக செல்கிறது. மேலும் படத்தின் இறுதிக்கட்டத்தில் பழைய பாணி தாய் பாசக் காட்சிகள் பெரிய அளவில் பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது. " [3]

மேற்கோள்கள்