ஜெ. சத்திஷ் குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜே. சத்திஷ் குமார்
Bramma G., Shri J. Satish Kumar and the Director of “AN AMERICAN IN MADRAS” (Non-Feature), Shri Karan Bali at a press conference, at the 45th International Film Festival of India (IFFI-2014), in Panaji, Goa.jpg
45ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (2014) ஜே. சத்திஷ் குமார் இடதுபக்கமாக இரண்டாமவர்
பணி
  • தயாரிப்பாளர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007 தற்போது வரை

ஜெ. சதீஷ்குமார் (J. Satish Kumar) என்பவர் ஒரு இந்திய திரைப்ப தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார். [1] [2] [3]

தொழில்

ஜே சதீஷ் குமார் ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் என்ற பதாகையின் கீழ் பல படங்களில் தயாரித்ததுள்ளார். குறிப்பாக தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, குற்றம் கடிதல், தரமணி போன்ற படங்களை தயாரித்துள்ளார். [4] [5] [6] பரதேசி போன்ற படங்களை அதே பதாகையின் கீழ விநியோகித்துள்ளார். [4] தரமணி படத்தில் இவர் கவுரவத் தோற்றத்தில் ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பேரன்பு படத்திலும் நடித்தார். [7] மேலும் இவர் அக்னிச் சிறகுகள் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், படத்தின் பெரும்பகுதியில் தோன்றும்வகையில் நடிக்கவுள்ளார். [7] [4] காவலுடாரி என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கமாக தமிழ் மற்றும் தெலுங்கில் கபடதாரி என்ற பெயரில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்கிறார். [7] [4] தயாரிப்பு நிலையில் உள்ள பிரட்ன்சிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கின் நண்பராக நடிக்கிறார். [8] பிந்து மாதவி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் இவர் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் அறிமுகமாகிறார். [4]

திரைப்படவியல்

நடிகராக

  • குறிப்பில் ஏதும் குறிப்படபடாத, எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2017 தரமணி காவல் உதவி துணை ஆணையர் தயாரிப்பாளர்
2018 பேரன்பு சிறப்புத் தோற்றம்
2021 கபடதாரி சுரேஷ்
2021 கபடதாரி தெலுங்கு
டி.பி.ஏ. அக்னிச் சிறகுகள் சுப்பு
டி.பி.ஏ. பிரன்ட்சிப்
டி.பி.ஏ. ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் பெயரிடப்படாத படம்

விருதுகளும், பரிந்துரைகளும்

ஆண்டு விருது வகை படம் முடிவு Ref.
2013 61 வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது தங்க மீன்கள் Won
2014 62 வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது குற்றம் கடிதல் Won

குறிப்புகள்

 

  1. "Producer-turned-actor: J Satish Kumar of JSK Film Corporation is now on a signing spree". https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/nov/21/on-a-signing-spree-2064670.html. 
  2. "One film's loss shouldn't affect another film: J Satish Kumar - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/one-films-loss-shouldnt-affect-another-film-j-satish-kumar/articleshow/70642544.cms. 
  3. Subramanian, Anupama (28 June 2017). "Double delight for J Satish Kumar". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/280617/double-delight-for-jsatish-kumar.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Subramanian, Anupama (9 November 2019). "J Satish Kumar turns a baddie opposite Arun Vijay". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/091119/j-satish-kumar-turns-a-baddie-opposite-arun-vijay.html. 
  5. "Producer J Sathish Kumar hits out against Vijay Sethupathi - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/producer-j-sathish-kumar-hits-out-against-vijay-sethupathi/articleshow/63440816.cms. 
  6. Srinivasan, Sudhir (28 May 2016). "Small films, big heart". https://www.thehindu.com/features/cinema/producer-j-satish-kumar-talks-about-his-upcoming-film-taramani/article8659798.ece. 
  7. 7.0 7.1 7.2 "J Satish Kumar, an actor in the making". https://www.cinemaexpress.com/stories/interviews/2019/nov/20/j-satish-kumar-an-actor-in-production-15615.html. 
  8. "JSK Corporation to produce three new films". 14 June 2020. https://www.pressreader.com/india/dt-next/20200614/282050509307583. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெ._சத்திஷ்_குமார்&oldid=22203" இருந்து மீள்விக்கப்பட்டது