மதராசி
மதராசி | |
---|---|
இயக்கம் | அர்ஜுன் |
தயாரிப்பு | சுபா சந்தீப் |
கதை | அர்ஜுன் (கதை (ம) திரைக்கதை) ஜி. கே. கோபிநாத் (உரையாடல்) |
இசை | டி. இமான் |
நடிப்பு | அர்ஜுன் ஜெகபதி பாபு வேதிகா குமார் காஜலா |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | பி. சாய்சுரேஷ் |
கலையகம் | இன்ஸ்பரைடு மூவிஸ் ஸ்பைஸ் டீம் என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | சிறீ ராம் இன்டர் நேசனல்S |
வெளியீடு | பெப்ரவரி 17, 2006 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதராசி என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இபடமானது இன்ஸ்பிரேடு மூவிஸ் & ஸ்பைஸ் டீம் என்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் சுபா சந்தீப் தயாரித்துள்ளார். அர்ஜுன் இயக்கி நடித்த இப்படத்தில், ஜெகபதி பாபு, வேதிகா, காஜலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக இசையை டி. இமான் அமைத்துள்ளார். இது வேதிகாவின் முதல் படமாகும். இப்படத்தை தெலுங்கில் சிவகாசி என மொழிமாற்றம் செய்யப்பட்டு விவேக் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பதிலாக சுனில் மற்றும் ம. சூ. நாராயணா ஆகியோரைக்கொண்டு காட்சிகள் படமாக்கபட்டு சேர்க்கப்பட்டன. இது வணிக ரீதியாக சராசரி வசூலை ஈட்டியது.[1]
நடிப்பு
- காசியாக அர்ஜுன்
- வேதிகா அஞ்சலியாக
- ஜெகபதி பாபு -சிவாவாக
- காஜலா -மீனாட்சியாக
- விவேக் -பாண்டியாக
- சுனில் - கிரண் குமாராக (தெலுங்கு)
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராஜ்கபூர் - ரவிபாயாக
- பெப்சி விஜயன் - மணி பாயாக
- ராகுல் ரவீந்திரன் - ரவி பாயின் சகோதரராக
- பெரிய கருப்பு தேவர் - நாயுடுவாக
- மனிஷ் பொருந்தியா
தயாரிப்பு
புதுமுகமான வேதிகா அர்ஜுனின் மேலாளரை வாய்ப்புக்காக அணுகிய பிறகு ஒரு முன்னணி நடிகையாக அறிமுகமானார்.[2] இந்த படத்தின் வழியாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு தமிழ் திரைப்படது துறையில் அறிமுகமானார்.[3]
இசை
இப்படத்தில் ஆயிரத்தில் ஒருவன் (1965) படத்தின் "அதோ அந்த பறவை" பாடலின் மறு கலவை பதிப்பு உள்ளது.[4]
அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் டி. இமான்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அதோ அந்த பறவை (மறுகலவை)" | டி. இமான், சுனிதா சாரதி | ||||||||
2. | "காதல் வாரம் கொண்டாட்ட" | திப்பு, ரஞ்சித், சுசித்ரா | ||||||||
3. | "ஒரு உண்மை சொல்லவா" | கார்த்திக், ஹரிணி | ||||||||
4. | "விடமாட்டேன் விடமாட்டேன்" | கார்த்திக், மகாலட்சுமி ஐயர் | ||||||||
5. | "எந்த ஊரோ யாரோ" | கார்த்திக், சித்ரா |
வெளியீடு
படத்தின் செயற்கைக்கோள் உரிமை ராஜ் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. இந்த படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் வழங்கியது.
குறிப்புகள்
- ↑ "Sivakasi: Cast, Music, Director, Release Date, Stills - fullhyd.com".
- ↑ "My first break -- Vedika". 30 January 2009 – via www.thehindu.com.
- ↑ "- Malayalam News". IndiaGlitz.com.
- ↑ "Behindwoods : Madrasi from Mumbai". www.behindwoods.com.